அந்தப்
பாம்பு இரைதேடி அலைந்து களைத்துப்போயிருந்தது.
ஊர்ந்து
ஊர்ந்து உடலெல்லாம் வலியெடுத்திருந்தது.
இப்போது
அதற்கு மறைவாகப் படுக்க ஓர் இடம் தேவை
.
எதிரிகள்
கண்ணில் படாத ஒரு மறைவிடம்.
குறிப்பாக
இந்த மனிதர்கள் கண்ணில் பட்டு விடக்கூடாது.
இந்தப்பாம்பு
தீமை செய்யுமா என்று கூட யோசிக்காமல் அடித்து நார் நாராக உரித்து விடுவர்.
தேடி
அலைந்தது.
கூரை
மேலிருந்து கிழே பார்த்தது.
ஒரு
துளை தென்பட்டது.
அதோ
ஒரு துவாரம்.அப்பா!அதனுள் சென்று ஓய்ந்து படுத்து விடலாம்.
உடலை
வளைத்துச் சுருக்கிக் கீழே பாய்ந்தது,நேராக அந்த ஓட்டைக்குள்!
உள்ளே
நுழைந்த மறுகணம் துளை மூடியது.மேலும் கீழுமாகக்கூர்மையான
ஆயுதம் வந்து அதை நறுக்கியது
பாம்பு
தலை வெட்டுண்டு இறந்தது.
எமன்
வாயில் விழுவதென்பது இதுதானோ?!
செய்தி:
இந்தூர் அருகே ஓர் ஊரில் வாயைத்திறந்தபடி உறங்கிக் கொண்டிருந்த ஒரு வாலிபரின் வாயில்
கூரையிலிருந்து பாம்பு விழுந்தது.தூக்கத்திலேயே வாலிபர் அதைக் கடித்துத்தலையைத் துண்டித்து
விட்டார்.சிறிது நேரம் சென்று அறைக்குள் வந்த அவர் அம்மா அவர் வாயில் ரத்தத்தையும்,கீழே
கிடக்கும் பாம்பின் துடிக்கும் உடலையும் பார்த்துக் கத்திய பின்பே விழித்துக் கொண்டார்!பின்னர்
மருத்துவ உதவி இத்யாதி,இத்யாதி.......
பாம்புக்கு
நேரம் சரியில்லை!
உண்மை
சில நேரங்களில் புனைவை விட விசித்திரமானது!
இப்படியும் ஒரு நிகழ்வு... விசித்ரம் தான்.
பதிலளிநீக்குஇந்தச் செய்தியினை கேட்கவே மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.
பதிலளிநீக்குஇப்படியும் நடக்குமா? என்றே நினைக்கத் தோன்றுகிறது.
தங்களின் தனிப்பாணியிலான இந்தப் பகிர்வுக்கு நன்றிகள்.
அட இப்படியெல்லாம் கூட நடக்குமா? ஆச்சர்யம்தான்!
பதிலளிநீக்குதூக்கத்திலே.... நடக்கிற வியாதி மாதிரி ,அவருக்கு கடிக்கிற வியாதி இருக்குமா ஜி :)
பதிலளிநீக்குஅதிசயச் செய்திதான்
பதிலளிநீக்குஆச்சரியம்தான் ஐயா
பதிலளிநீக்குநானும் கேள்விப்பட்டேன், இங்கு பாம்பின் நிலை தான் பாவமாக உள்ளது.
பதிலளிநீக்குதங்களின் எழுத்து நடை அருமை. வாழ்த்துகள்!
ஆம்... நேற்று நானும் அந்தச் செய்தியைப் படித்து வாட்ஸாப்பில் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
பதிலளிநீக்குவிசித்திர நிகழ்வு...
பதிலளிநீக்குஇனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !
பதிலளிநீக்குஎனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி
ஐயோ பதற்றமா ஆகிப் போச்சு.. என்ன நியூஸ் இது. :(
பதிலளிநீக்கு