தொடரும் தோழர்கள்

திங்கள், ஜூலை 13, 2015

அறஞ் செய விரும்பு!


சுவாமி பித்தானந்தா அவர்களின் உரை கேட்க கூட்டம் காத்திருந்தது

சுவாமி வந்தமர்ந்தார்.

இன்று ஒரு மாறுதல்.உங்கள் மனத்தில் ஆன்மிகம் பற்றிப் பல ஐயங்கள் இருக்கலாம்.இன்று நீங்கள் அவற்றைக் கேள்விகளாக்கி இவன் மீது வீசுங்கள்.இவனால் இயன்ற அளவு தெளிவாக்குவான்சொன்னார் அவர்.

ஒருவர் எழுந்தார் "சாமி,கடவுளை எப்படி வழிபடுவது என்றே எனக்குத் தெரியவில்லை. பெரியதாக பூசை செய்யவோ படையல் வைக்கவோ என்னால் முடியாது.நான் என்ன செய்ய வேண்டும் சாமி?"

"இறைவனை வழிபடுவதற்கு எந்த நியதியும் இல்லை..இதில் பகட்டு தேவையில்லை. நான் என்ற அகந்தையற்று ஆழ்ந்த பக்தியுடன்,உள்ளம் நிறை அன்புடன் ஒரு இலையைப்போட்டு வணங்குங்கள்  .வில்வமோ,துளசியோ ஏதாவது ஒன்று.அவன் மனமகிழ்ந்து,.உங்கள் பூசையை ஏற்றுக்கொள்வான்"-

 மற்றொருவர் கேட்டார்"சாமி, நான் அதிக வசதியில் லாதவன்.தானம் செய்யவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.ஆனால்  சிறிதாக ஏதாவது செய்தால் எல்லோரும் நகைப்பார்களோ என்று அச்சமாக இருக்கிறது. நான் என்ன செய்ய சாமி?"

அவர் பதில் அளித்தார்"உங்களுக்கு நல்ல மனது இருக்கிறது.ஈதல் என்பது பெரிதாக இருக்க வேண்டியதில்லை.நேற்று நீங்கள் இங்கு வரும்போது எதிர்ப்பட்ட ஒரு பசுவுக்கு ஒரு வாய் புல் அளித்தீர்களே, அதுவும் ஒரு அறம்தான்.நீங்கள் உண்ணும் உணவில் சிறிது பசித்தவருக்கு வழங்கினால் அது அறம்.உண்ணும் முன் காக்கைக்குச் சிறிது அன்னமிட்டால் அதுவும் அறம்தான்."

அடுத்தவர் கேட்டார்"இதெல்லாம் கூட முடியவில்லை என்றால் என்ன செய்ய"கொஞ்சம் இடக்குப் பிடித்த அவரது கேள்வியைச் செவியுற்று அவர் புன்னகைத்தார்

."ஊரில் எல்லோரும் உங்களை மிகவும் கோபக்காரன் என்று சொல்கிறார்கள்.பல நேரங்களில் நானே கவனித்திருக்கிறேன்,இனிமையாகப் பேசாமல் சுடு சொற்களையே பேசுவதை.அதை விடுத்து அனைவரிடமும் இன்சொற்கள் பேசுவீர்களேயாகில் அதுவே சிறந்த அறம்தான்-


கடைசியாக அவர் சொன்னார்இவற்றையெல்லாம் இவன் சொல்லவில்லை.திருமூலர் சொல்லியிருக்கிறார்.இது ஒரு பானைச்சோற்றில் ஒரு சோறு பதம் போலத்தான். திருமந்திரம் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.நமது மடத்தின் வெளியீடு கூட உளது வாங்கிப் படித்துப் பயன் பெறுங்கள்!







18 கருத்துகள்:

  1. அறம் பற்றி அழகாக எடுத்துக் கூறினீர்கள், திருமந்திரம் பற்றியும் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி. வாசிக்க வேண்டும் இங்கெல்லாம் கிடைக்குமா தெரியலையே. நன்றி வாழ்த்துக்கள்.....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல பதிப்புகள் இருக்கின்றன.சென்னைப் புத்தகக் கன்காட்சிக்கு எப்போதாவது அவரும் வாய்ப்புக் கிடைத்தாக் தேடிப்பிடித்து வாங்கலாம்.என்னிடம் இருப்பவை1)திருவாவடுதுறை ஆதீனம் பதிப்பு 2)வர்த்தமானன் பதிப்பகம் பதிப்பு
      நன்றி இனியா

      நீக்கு
  2. அருமையான கருத்துக்கள் ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  3. அருமை ஐயா... ஏன் கடைசி 3 பத்திகள் சிறிதாகி விட்டது...? இடக்குப் பிடித்த கேள்விகள் போலவா...?

    பதிலளிநீக்கு
  4. பித்தானந்தாவின் கருத்துகள் பித்தம் தெளிய வைக்கும் கருத்துகள்! அருமை....

    பதிலளிநீக்கு
  5. அருமையான பதிவு.

    உங்கள் பக்கம் புதுப் போலிவுடன் இருக்கிறது. எழுத்துருக்கள் மட்டும் சற்று பெரிதாக இருந்தால் நலமாக இருக்கும்.

    God Bless You

    பதிலளிநீக்கு
  6. பயனுள்ள கருத்துக்கள். அனைவருக்கும் பொருந்துபவை. நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அறம் செய்! என்று சொன்னால் அது கட்டளை இடுவது போல ஆகும்! சில வீம்பர்கள் முரண் படுவர்! அவ்வாறில்லாமல் அறஞ் செய விரும்பு என்றால் , அவனே விரும்பி , செயல் படுவான் என்பதாம்!

    பதிலளிநீக்கு

  8. திருமந்திரம் பற்றி சுவாமி பித்தானந்தா அவர்களை ஒரு சிறிய உரை ஆற்ற சொல்லலாமே!

    பதிலளிநீக்கு
  9. பித்தானந்தா சொன்னார் என்றால் அதில் ஒரு பித்துக் குளித்தனம் இருக்க வேண்டாமா :)

    பதிலளிநீக்கு