தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜூலை 24, 2015

முடிவில்லாத முடிவுகள்!



புனேவுக்குப் போன முருகேசன் என்ற கதை மூன்று பகுதிகளாக வெளி வந்தது
கதையை நான் முதலில் எண்ணியபடி முடித்திருந்தேன். 

இருவரின் கருத்து எனக்குள் ஓர் எண்ணத்தைத் தோற்றுவித்தது

அக்கருத்துகள்…..

//I think I can guess...probably he would meet his would b who might b on a similar mission…வாசு//

//வெளியே நின்றது பூரணி என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்!...ஸ்ரீராம்//

முதல் கருத்தில்  ”முருகு போன்ற ஒரு செயலுக்காகப் பூரணி வந்திருப்பாள்” என்ற கருத்து ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஆனால் பூரணி உன்மையாகவே வேறு ஏதோ காரணத்துக்காக வர நேர்ந்தால்………..?

அந்தக் கற்பனையின் விளைவுதான் இம்முடிவு.

பலருக்கும் பிடிக்கக்கூடிய முடிவு

படியுங்கள்…

முருகு சென்று கதவைத் திறந்தான்......

வெளியே நின்ற பெண்ணைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தான்.

எதுவும் பேசத் தோன்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அங்கே....பூரணி நின்றிருந்தாள்.

“என்ன?என்னைப் பார்த்து ஆச்சரியமாக இருக்கிறதா?”என்று  சொல்லிச் சிரித்தவள்.உள்ளே போகலாமா என்றவுடன் அவன் “வா,வா எனக் கூறி வழிவிட்டான்.

இருவரும் உள்ளே வந்தனர்.

முருகுவைப் போலவே கணேசனும் திகைத்துப் போயிருந்தான்.

”கணேச அண்ணா!எப்படி இருக்கீங்க?” பூரணி கேட்டாள்

”நல்லா இருக்கேன்”என்று சொன்ன கணேசன் வரவிருக்கும் ஆபத்தை எப்படி எதிர்கொள்வது என்று யோசிக்கத் தொடங்கினான்.

அப்போது அறை மணி மீண்டும் ஒலித்தது.

பூரணி முந்திக் கொண்டு போய்க் கதவைத் திறந்தாள்.

அங்கே நின்றிருந்த பெண் பூரணியைப் பார்த்ததும் திகைத்தாள் பின் அறை எண்ணைச் சரி பார்த்தாள்.214தான் என உறுதி செய்து கொண்டாள்.

அதற்குள் வேகமாக அங்கு வந்த கணேசன்அந்தப் பெண்ணைப் பார்த்து ”வாருங்கள். உங்களுக் காகத்தான் காத்திருக்கிறேன்.இவர்கள் என் நண்பனும் அவனுக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணும்  முருகேசன்,பூரணி.நாம் இருவரும் வெளியே செல்லலாம்” என்று அந்தப் பெண்ணிடம்  சொல்லி விட்டு மற்ற இருவரையும் பார்த்து” நான் போய் வருகிறேன்.சென்னையில் சந்திப்போம் பூரணி “என்று சொல்லி விட்டு வேகமாக அப்பெண்ணுடன் அகன்றான்.

முருகு பூரணியிடம் சொன்னான்”அவனுக்குத் தெரிந்த பெண்ணாம்.அவர்கள் வீட்டுக்குப் போய் வருவான்”என்று சொல்லி விட்டு”நீ எப்படி இங்கு திடீரென்று?”எனக் கேட்டான்.

“ஏங்கள் வாடிக்கையாளர் நிறுவனத்தில் ஏதோ மென்பொருள் குழப்பம்.அதைச் சரி செய்ய நான்தான் வரவேண்டியதாயிற்று.இன்றுகாலைதான் வந்தேன். வந்தவுடன்.இங்கிருந்து பேசுகிறேன் என்று சொல்லாமல்  உங்கள் கைபேசியில் பேசினேன்.உங்கள் இருப்பிடமும் தெரிந்து கொண்டேன்.வந்த வேலை முடிந்து விட்டது.  அவர்களது விருந்தினர் விடுதி யில்தான் தங்கியிருக்கிறேன்.நிறுவனத்தின் மகிழ்வுந்தில் இங்கு வந்தேன்.நாளை மறுநாள் நீங்கள் செல்லும் அதே விமானத்தில்தான் நானும் வருகிறேன்.இன்று இரவு அந்த நிறுவனத்தின் தலைவர் ஒரு விருந்து அளிக்கிறார்.நீங்கள் இங்கு இருக்கிறீர்கள் என்று சொன்னவுடன் உங்களையும் அழைத்து வரச் சொன்னார்,தயாராகுங்கள்.போகலாம்”
அவனுக்கு அவளிடம் கொஞ்சம் நெருக்கமான உரிமை எடுத்துக் கொள்ள ஆசைதான், ஆனாலும் அவள் தப்பாக எடுத்துக் கொள்வாளோ என அஞ்சினான்.
இருவரும் புறப்பட்டார்கள்
சிறப்பான விருந்து.விருந்து முடிந்ததும் அவர் சொன்னார்”நாளை உங்கள் இருவருக்கும் ஒரு வேலையும் இல்லை அல்லவா?என் வண்டியை எடுத்துக் கொண்டு சீரடி போய் வாருங் களேன்”
முருகேசனுக்கு உடல் சிலிர்த்தது.



11 கருத்துகள்:

  1. இது முடிவில்லாத முடிவல்ல. முடிந்த முடிவு! All the roads lead to Rome என்று சொல்வதுபோல் எப்படியோ எல்லா முடிவுகளும் சீரடி செல்வதைப் பற்றியே முடிகின்றன. நல்ல முடிவுதான்!

    பதிலளிநீக்கு
  2. செம முடிவு!!! முதலில் நீங்கள் கதவைத் திறந்ததும் முருகுவிற்கு அதிர்ச்சி என்று முடித்திருந்த போதே நாங்கள் அந்தப் பெண் பூரணியாக இருக்குமோ என்று பின்னூட்டத்தில் போட நினைத்து எங்களுக்குள்ளேயே கதை பற்றி ஒரு சிறு விவாதம் எழ அதைக் கட் செய்து வேறு இட்டோம்...

    இதுவும் நன்றாகவே உள்ளது நாங்கள் நினைத்தது போல்....ஒரு கதைக்கு எத்தனை முடிவுகள் எழுதப்படலாம் என்று இதிலிருந்து புரிகின்றது...என்ன அதில் மிகவும் முக்கியம் யதார்த்தம்...லாஜிக் உதைபடாமல் முடிவுகள் கொடுக்கலாம் என்று அறியமுடிகின்றது....

    நிறைய சிந்திக்க வைத்தது..ஐயா!

    பதிலளிநீக்கு
  3. எப்படியோ விரும்யபடி முடித்து வைத்துவிட்டீர்கள்..அய்யா...

    பதிலளிநீக்கு
  4. சுவாரஸ்யம்தான்!

    இவர்கள் அழைத்த பெண் ஏதோ சந்தர்ப்பவசத்தில் இவளுக்குத் தோழியாய் இருந்து, ட்ரூ காலர் வசதியால் அவளை தொழில் ரீதியாய் பயன்படுத்த அழைப்பவன் தன் வருங்காலக் கணவன் என்று அறிந்து பூரணி அங்கு வந்திருந்தால்.....?

    :))))))))

    பதிலளிநீக்கு
  5. முடிந்த முடிவு.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. இது நல்ல முடிவுதான்...
    வீட்டில் ஷீரடி செல்வதாய்ச் சொன்னவன் வருங்காலத்திடம் மட்டும் எப்படி உண்மையைச் சொல்லியிருப்பான்?
    அதுவும் தங்கியிருக்கும் முகவரி முதற்கொண்டு... ஏதோ இடிக்கிறதே ஐயா....
    இருப்பினும் முடிவில் ஷீரடி சென்றதால் எல்லாம் சுபமே...

    பதிலளிநீக்கு
  7. வித்தியாசமான முடிவுதான்
    ஆனாலும் நல்ல முடிவு
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு