தொடரும் தோழர்கள்

புதன், ஜூலை 22, 2015

புனேவுக்குப் போன முருகு--பகுதி இரண்டு



முருகு வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் சீரடி  போகும் செய்தியைச் சொன்னதும் அவர்களுக்கு மிக மகிழ்ச்சி.

திருமத்துக்கு முன் போய் வணங்கி விட்டு வா நன்மைகள் நடக்கும் என்று ஆசி வழங்கினர்.

அவன் மனம் குற்ற உணர்வினால் சுருக்கென்றது.கணேசன் ஏற்கவே சொல்லியிருந்தான் புனேவிலிருந்து விபூதி கொண்டு வந்து சீரடி உதி என்று கொடுத்து விடலாம் என்று .புனே செல்லும் நாள் நெருங்க நெருங்க முருகு வுக்குப் படபடப்பு அதிகமானது .அதை வெளிக் காட்டாமல் எப்படியோ சமாளித்தான்.

செவ்வாய் மாலை விமானத்தில் சென்று வெள்ளி காலை திரும்புவதற்கு பயணச்சீட்டு வாங்கி யிருந்தான் கணேசன்.அவன் சொன்னபடி கையில் கொஞ்சம் கூடவே பணம் எடுத்துக் கொண்டான் முருகு.

அந்த நாளும் வந்தது.

இரவு புனேயை அடைந்து ஒரு பெரிய உண்டுறை விடுதியில் முன்பே பதிவு செய்யப்பட்ட அறையில் தங்கினர்.

மறுநாள் காலை முதல் கணேசனுக்கு தொழில் தொடர்பான அலைச்சல் இருந்தது,மாலை வரை.இரவுதான் முருகுவின் முதல் இரவு எனக் கணேசன் சொல்லியிருந்தான் ,கிண்டலாக!

மறுநாள் காலை வெளியே செல்லும் முன் கணேசன் தொலைபேசியில் ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டான்

XXX வழித்துணை சேவையா?”
………….

இன்று மாலை 7 மணி முதல் ஒரு துணை தேவை.அனுப்ப இயலுமா?”
..............

“மிகச் சிறந்தது”
..............

“சம்மதம். aaa இல் இருக்கிறேன்.அறை 214.
.......

”நன்றி.காத்திருப்பேன்.”

தொலை பேசி இணைப்பைத் துண்டித்தான்.

முருகுவைப் பார்த்துப் புன்னகைத்தான்”எல்லாம் தயார்.நான் வெளியே போகிறேன் நீ சாப்பிட்டு விட்டு ஓய்வு எடு.இரவு ஏழு மணிக்கு மேல்தான் உனக்கு வேலை!”

கணேசன் வெளியே சென்று விட்டான்.

முருகு காலை உனவுக்குப் பின் செய்தித்தாள் படித்தான்.

தொலைக்காட்சி பார்த்தான்

இசை கேட்டான்

கட்டிலில் படுத்தான்.

எதிலும் மனம் ஈடுபடவில்லை

விடுதியை விட்டு வெளியே வந்து நடந்தான்.

சிறிது தொலைவு சென்றதும் ஒரு கடைத் தொகுதியைப் பார்த்தான்.

ஓர் எண்ணம் எழுந்தது

உள்ளே சென்று பெண்களுக்கான சிறந்த நறுமணத்தைலம்  ஒன்று வாங்கினான்.சிறிது யோசனைக்குப் பின் இன்னொன்று வாங்கினான்.முதலில் வாங்கியது பூரணிக்கு.இரண்டாவது...?

சிரித்துக் கொண்டான்.

அறைக்குத் திரும்பினான்

மதிய உணவு உண்டான்

தூங்கினான்.

மாலை எழுந்து முகச்சவரம் செய்து கொண்டான்.

குளித்தான்

நாற்றநீக்கி தடவிக் கொண்டான்.

நல்ல கால்சட்டை மேல்சட்டை அனிந்து கொண்டான்

தேநீர் அருந்தினான் 

(இத்தனை விவரமாகச் சொல்வதன் காரணம் அவன் நேரம் எவ்வளவு நீ....ண்டதாக இருந்தது என்பதுதை உனர்த்துவதற்கே!) 

கணேசன் வந்து விட்டான்.

பேசிக் கொண்டிருந்தனர்.

மணி 7

அறையின் அழைப்பு மணி ஒலித்தது

கணேசன்  முருகுவைக் கதவைத் திறக்கச் சொன்னான்.

முருகு சென்று கதவைத் திறந்தான்..........

(நாளை சந்திப்போமா?நிச்சயமாக நாளை இக்கதை கடைசி!)







34 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. இதெல்லாம் ஒரு தொடர்கதைதானே!
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  2. சீரடியார் கண்டிப்பாக முருகை காப்பாற்றியிருப்பார்.

    எத்தனை இழுத்தாலும் டென்ஷன் குறைய மட்டேங்கிறதே..

    God Bless You

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  3. தனித்தமிழில் எழுதுவது புரிகின்றது! முருகுவுக்கு என்ன ஆயிற்று என்பதைவிட முருகு தப்பு செய்ய கூடாது என்றே தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் கையில் இல்லை!
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  4. என்னுடைய செல்லத் தாத்தாவின் ஆக்கங்கள் எப்போதும் சூப்பராய் தான் இருக்கும் அத அப்புறம் வாசிக்கலாம் இப்போ ஒரு லைக் போடு மகளே
    போட்டு விட்டு ஓடுகின்றாள் உங்கள் அன்புப் பேத்தி திரும்பி வந்தா சுடு மணலில் இருத்தி வச்சு வாசிக்க விடுங்க தாதுக் கொட்டி இப்போதைக்கு பாய் பாய் :))))))

    பதிலளிநீக்கு
  5. அட நல்ல தமிழ் வார்த்தைகள் கற்றுக் கொண்டோம்....தொடங்கி வைத்துள்ளீர்கள்! நாற்ற நீக்கி, உண்டுவிடுதி..என்று....

    ம்ம் நிச்சயமாக அங்கு வந்தது "துணையாக" இருக்காது இல்லை என்றால் அது ஏதேனும் ஷாக்....என்ற நம்பிக்கையுடன் தொடர்கின்றோம்....

    பதிலளிநீக்கு
  6. முடிவுக்குக் காத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  7. இரண்டு பகுதிகளையும் சேர்த்துப் படித்தாயிற்று... இன்னும் சஸ்பென்ஸ் முடியவில்லை..... அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்...

    முருகு.... இப்பவாது எஸ்கேப் ஆவுப்பா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்பு இல்லையோ?
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  8. பதில்கள்
    1. அதுதான் நியாயம்!
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  9. நாளைக்கா ?முருகுவை போல் என்னை தவிக்க வச்சுட்டீங்களே:)

    பதிலளிநீக்கு
  10. வெளியே நின்றது பூரணி என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்!

    :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி ஒரு முடிவு இருக்கிறதா!
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  11. பார்க்கலாம்... என்ன தான் நடக்கும்னு....

    பதிலளிநீக்கு
  12. நல்லதொரு திருப்பம் - உங்கள் பாணியில் இருக்கும் என்று நம்புகிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள்தான் சொல்ல வேண்டும்
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  13. வணக்கம்
    ஐயா

    மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.. முடிவுக்காக காத்திருக்கேன்.. த.ம 12
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  14. நிச்சயம் வழக்கம்போல் ஏமாற்றப்போகிறீர்கள். காத்திருக்கிறேன் ஏமாற!

    பதிலளிநீக்கு
  15. ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  16. நாளை முடிவை தெரிந்து கொள்வோம்.

    பதிலளிநீக்கு