தொடரும் தோழர்கள்

வியாழன், ஜூலை 16, 2015

ராசாவும் கனியும்!



இது ஓர் அரசனும் கனியும் பற்றிய கதை

நீங்கள் அறியாத கதையல்ல.

இது நீங்கள் அறிந்த கதைதான்.

கனி அரசனை விட்டு நீங்கிய கதை.

கடையெழு வள்ளல்களில் ஒருவன் அதியமான்.

தகடூரைத்  தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னன்.

ஒரு முறை அவனுக்கு ஓர் அரிய நெல்லிக்கனி கிடைத்தது

அக்கனியை உண்டோர் பல காலம் வாழ்ந்திருப்பர்.

அதன் சிறப்பை அவனும் அறிவான்.

அப்போது அவ்வையார் வரவே அவருக்கு அக்கனியை ஈந்து பரிவுடன் 
உண்ணச் சொன்னான்.

அக்கனியின் சிறப்பை அவ்வை உண்டு முடித்தபின்னரே அவருக்குத் தெரிவித்தான் 

அவ்வையார் தான் நீண்ட நாள் வாழ எண்ணாமல் எனக்கு ஈந்தானே இம்மன்னன் என வியந்து அவனைப் போற்றிப் பாடினார்




 பால்புரை  பிறைநுதல்  பொலிந்த  சென்னி
நீல மணிமிடற்று  ஒருவன்  போல
மன்னுக  பெரும  நீயே  தொன்னிலைப்
பெருமழை  விடரகத்து  அருமிசை  கொண்ட 
சிறியிலை  நெல்லித்தீங்கனி  குறியாது
ஆதல்  நின்னகத்து  அடக்கிச்
சாதல்  நீங்க  எமக்கு  ஈத்தனையே

பெரிய மலையிடத்து மிகவும் இடருக்குப் பின் பெற்ற அரிய நெல்லிக்கனியை உனக்கென்று கொள்ளாமல் ,அதன் சிறப்பை எனக்குச் சொல்லாமல் ஈந்து எனக்கு இறப்பில்லா வாழ்வு ஈந்தனையே என்று பாராட்டினார்!

28 கருத்துகள்:

  1. சரிங்க ஐயா.. (லேபிள்கள்) புரிந்து விட்டது...!

    பதிலளிநீக்கு
  2. தெளிவாய் புரிந்தது ராசா கதை.

    பதிலளிநீக்கு
  3. தெரிந்த கதையை ,இலக்கிய நயத்தோடு விளக்கியுள்ளீர்கள். ஆனால் இந்த பதிவை அரசியல் என்ற தலைப்பின் கீழ் வகைப்படுத்தியது ஏன் என்றுதான் ‘புரியவில்லை’ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசனின் இயல்பு பற்றிய கதை.எனவே அரசியல்!
      நன்றி ஐயா

      நீக்கு
  4. புரிந்துகொண்டேன்! இப்படியும் இருக்கிறது அரசியல்! ஹாஹாஹா!

    பதிலளிநீக்கு
  5. அன்று தமிழ் பாடத்தில் படித்தது...

    செய்தித்தாளில்/அரசியலில், கிசுகிசுக்கப்படும் செய்தி...

    தலைப்பு மிகவுமே கவர்ச்சியாக உள்ளது...இந்தக் கதை தெரியும்...அதில் உள்குத்து எதுவும் இல்லையே! ? ஹஹஹ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய கதை!எந்தக்குத்தும் இல்லை!தலைப்பு பொருத்தம்தானே!
      நன்றி

      நீக்கு
  6. ஆஹா.... செம தலைப்பு! அடுத்து மாறன் (மன்மதன்) பற்றியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப்பதிவைப் பாருங்கள் ஸ்ரீராம்!
      http://chennaipithan.blogspot.com/2011/06/blog-post_20.html
      நன்றி

      நீக்கு
  7. ம்..ம் தெரிந்த கதை தான் ஆனால் அவர் போற்றிப் பாடிய பாடலோடு தந்தமை சிறப்பு! நன்றி வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  8. ரொம்பத் துணிச்சல்ங்க உங்களுக்கு..

    சட்டுனு ஔவையாரைப் பத்தி சொல்லியிருக்கிறீங்க (உண்டதற்கப்புறம் கனியும் ஔவையும் ஒன்றுதானே)

    ஆனாலும் இதில் ஔவைக்கும் மகிழ்ச்சி அரசனுக்கும் மகிழ்ச்சி..

    நச் பதிவு.

    God Bless You

    பதிலளிநீக்கு
  9. நல்ல உத்தியைப் பயன்படுத்தியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  10. அருமை, என்னமோ நடக்குது ஒன்னுமே புரியல, மர்மமா இருக்குது,,,,,,
    நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  11. ராசாவின் கனி....

    ஹ ஹ ஹா

    அடுத்த முறை ஏமாறமாட்டேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. பித்தா பிறை சூடா பேருமானே! வைத்தீர் தலைப்பு பலரும்வர தானே!

    பதிலளிநீக்கு
  13. ராசாவும் கனியும்....
    ஹா... ஹா....
    அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  14. தலைப்பிடுவதில் தங்களை யாரும் மிஞ்ச முடியாது

    பதிலளிநீக்கு
  15. அவ்வைப் பாட்டியின் ஆற்றல் மீது ராஜாவுக்கு அவ்வளவு நம்பிக்கை போலிருக்கு :)

    பதிலளிநீக்கு