செல்வம் ஒன்றைத் தொலைத்து விட்டேன்
எல்லா மிடங்களிலும் தேடிக் களைத்தேன்
வீடு வீடாய்
தெருத் தெருவாய்
ஊர் ஊராய்
நாடு நாடாய்
கிடைக்கவேயில்லை!
ஏன்?
சென்றன பல ஆண்டுகள்
கிடைத்தது எனக்கும் ஒரு போதி
கிடைத்தது எனக்கும் ஒரு போதி
புரிந்தது அந்நாள்
எல்லா இடங்களிலும் தேடியிருக்கிறேன்
தொலைத்த இடம் தவிர!
நாம நிறைய பேரு அப்படிதான் தேடுறோம் ...
பதிலளிநீக்குஇருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாய் ஞானத் தங்கமே :)
பதிலளிநீக்குபலவற்றிலும் இப்படித் தான்...
பதிலளிநீக்கு(மனதில் ஒரு பதிவு எழுத கரு கிடைத்து விட்டது... நன்றி ஐயா)
கடைசிவரை என்ன தொலைத்தீர், எங்கு தொலைத்தீர் எனச் சொல்லவே இல்லையே சார்..!
பதிலளிநீக்குGod bless YOu
நான் சொல்ல நினைத்ததை பகவான்ஜி .முந்திக் கொண்டார்! மிஸ்டர் எக்ஸ் பற்றி ஒரு ஜோக் உண்டு. எதையோ தேடிக் கொண்டிருப்பவருடன் சேர்ந்து அவருக்கு உதவுவதற்காகத் தேடும் நண்பர்கள் விசாரிக்கும்போதுதான் அவர் அந்த எதையோ தொலைத்தது வேறு இடம் என்று தெரிய வரும். பின் எதற்காக இங்கு தேடுகிறீர்கள் என்று கேட்டால், அங்கு இருட்டு, இங்குதான் வெளிச்சமாக இருக்கிறது என்பார். அது நினைவுக்கு வந்தது!
பதிலளிநீக்குபலரின் அனுபவமும் இதுவே. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதினமணியில் வெளியான எனது முதல் பேட்டியை http://www.ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html என்ற இணைப்பில் காண அழைக்கிறேன்.
கிடைத்துவிட்டால் பின் தேடல் இராதே..!
பதிலளிநீக்குதேடல் தொடரட்டும்.
நன்றி
தொலைத்த இடம் அறிந்தால் மற்ற இடங்களில் தேடவேண்டியதில்லையே?
பதிலளிநீக்குதேடலும் ஒரு வித சுவார்யஸ்ம் தானே... தேடல் தொடரட்டும்.
பதிலளிநீக்குஇதைதான் ஆற்றில் போட்டு விட்டு குளத்தில் தேடுவதேன்பதோ ?
பதிலளிநீக்கு\\\\\கடைசிவரை என்ன தொலைத்தீர், எங்கு தொலைத்தீர் எனச் சொல்லவே இல்லையே சார்..!/////
அதானே இதயத்தையா தொலைத்தீர்கள்.? ஓ சீகிரட்டா அப்பசரி
வரிகள் அருமை.....மிகவும் ரசித்தோம்....
பதிலளிநீக்குஎல்லா இடங்களிலும் தேடியிருக்கிறேன்
பதிலளிநீக்குதொலைத்த இடம் தவிர!
அதுதெரிந்தால் போதுமே!
இருக்கும் இடத்தை விட்டு.... இல்லாத இடம் தேடி!
பதிலளிநீக்குஎனக்கும் இப்பாடல் தான் மனதில் தோன்றியது.
த.ம. +1