தொடரும் தோழர்கள்

வியாழன், ஜூலை 23, 2015

புனேவுக்குப்போன முருகு.-கதையின் முடிவு



முன்குறிப்பு: பலர் முருகு தவறு செய்து விடக்கூடாது என்ற கருத்தில் இருப் பதாகத் தெரிகிறது. ஆனால் முருகு ஒரு நோக்கத்துக்காக,வீட்டில் பொய் சொல்லி விட்டுப் புனே வந்தவன் .அந் நோக்கம் நிறைவேறாமல் போனால் அவன் மனரீதியாகப் பாதிக்கப்படக் கூடும். எனவே அவன் விருப்பம் நிறைவேறட்டும்!ஒன்று செய்யலாம்.அவன் தவறு செய்யாமல் தப்பிப்பது போல் ஒரு முடிவும் எழுதிப் பார்க்கலாம்.

இன்னொரு செய்தி.சிலர் நினைப்பது போல் கதையில் திருப்பம்.மர்மம் எதுவும் இல்லை. முடிவில் ஒரு முரண்நகை இருக்கலாம்.அதுவே சரி என்று எனக்குத் தோன்றியது.

இனி,கதைக்குள் போவோம்
.....................
கதவைத் திறந்த முருகு பிரமித்துப் போனான்.

இப்படி இளமையும் அழகும்,நளினமும்,கம்பீரமும் நிறைந்த ஒரு பெண்ணை அவன் எதிர்பார்க் கவில்லை.

”திரு முருகேசன்?நான் மாலினி.XXX வழித்துணை சேவை”நுனிநாக்கு ஆங்கிலத்தில் அவள் இனிமையாகப் பேசினாள்.

“உள்ளே வா….ருங்கள்!”

உள்ளே நுழைந்த அவள் கணேசனைப் பார்த்தும் அவள் புருவம் உயர்ந்தது
”இருவர் இருக்கிறீர்கள்?”

குரலில் ஒரு மனக்குறை.ஏளனம்.

கணேசன் முந்திக்கொண்டு சொன்னான்”இல்லை!நீங்கள் துணையாக இருக்க வேண்டியது அவனுக்குத்தான்.நான் இப்போது வெளியே  செல்கிறேன்.”பின் முருகுவைப் பார்த்து ”வாழ்த்துகள் .நான் என் நண்பர்கள் சிலரைப் பார்த்து விட்டுப் பத்து மணிக்கு மேல் வருவேன்”என்று கூறி வெளியே சென்று விட்டான்.

முருகு கதவைத் தாளிட்டான்

அவள் கட்டிலில் சென்று அமர்ந்தாள்.

சில மணித்துளிகள் அறிமுகங்களில் சென்றன

முதலில் பணம் கொடு என்று முன்பே கணேசன் சொல்லியிருந்ததால் பத்தாயிரம் ரூபாயை அவளிடம் கொடுத்தான்.

அவள் வாங்கித் தன் பையில் வைத்துக் கொண்டாள்

பின்.........

முருகேசன் அன்று  தன்னைக் கண்டெடுத்தான்.இனி அச்சமில்லை,மனம் நிறைந்து போயிற்று.

அவள் மெல்லத் தன் உடைகளை அணிந்தவாறு ஒரு புன்னகையுடன் அவனைப் பார்த்துச் சொன்னாள்”நீங்கள் ஒரு தனிப்பட்ட மனிதர்.எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது.’

ஏனோ அவனுக்கு வெட்கம் வந்தது!

”பசிக்கிறது’ அவள் சொன்னாள்

முருகுவுக்கும் பசியாகத்தான் இருந்தது

“எனக்கும்தான்.எங்கே போகலாம்?ஒரு நல்ல உணவகம் நீங்களே சொல்லுங்கள் “என்றான் முருகு

”சரி.நான் உங்களை ஒரு நல்ல இடத்துக்கு அழைத்துச் செல்கிறேன் வாருங்கள்.அதற்கு முன் என் கலைந்த ஒப்பனையைச் சிறிது சரி செய்து என்னைப் புதுப்பித்துக் கொண்டு வருகிறேன்”என்று சொல்லிக் குளியல றைக்குள் சென்றாள்.

அவள் வெளியே வந்தபின் முருகுவும் போய் முகம் கழுவி வந்தான்.

இருவரும் வெளியே சென்றனர்.போகும்போதே அவள் தன் கைபேசியில் ஏதோ பேசி “இரண்டு இருக்கைகள்” என்று சொன்னாள்.

“வண்டி அழைக்கட்டுமா?”

“வேண்டாம்.என் மகிழ்வுந்து இருக்கிறது.போகலாம்.”

ஒரு பெரிய பணக்காரத்தனமான உணவகத்துக்குச் சென்றனர்.

ஓர் இருட்டு மூலையில் அவர்களுக்கான இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

பேசியவாறே சாப்பிட்டனர்.சாப்பிட்டவாறே பேசினர்.!

முடிந்தது.

அவள் புறப்படத் தயாரானாள்

” விடை பெறுகிறேன்.அடுத்த முறை புனே வருகையில் அழையுங்கள்” என்று சொல்லி அழகாகக் கண் சிமிட்டினாள்.

முருகு ஒரு உணர்ச்சி வேகத்தில் அவள் கைகளைப் பற்றிக் கேட்டான் ”நாளையும் சந்திக்க முடியுமா?”

அவள் சொன்னாள்”மன்னிக்கவும்  நண்பரே!வியாழக்கிழமைகளில் நான்  விரதம்; துணை போவதில்லை.தவிரவும் நாளை நான் சீரடி செல்லப் போகிறேன். அடிக்கடி செல்வது என் வழக்கம்.பார்க்கலாம்”

அவள் சென்று விட்டாள்

............................கதை இங்கு முடிகிறது.

நண்பர் வே.நடனசபாபதி அவர்கள் தன் பின்னூட்டத்தில்  சொல்லியிருந்தார்கள்//சீரழிய செல்ல சீரடி செல்வதாக சொன்ன அந்த முருகுவுக்கு என்ன நடந்ததென அறிய ஆவல்// என்று.

சீரடி செல்வதாக வந்து சீரழிந்த முருகுவும்,சீரழிந்து போயிருந்தாலும் பக்தியுடன் சீரடி சென்ற மாலினியும் என்பதோடு கதை முடிகிறது!

ஆனால் ஒரு பிற்சேர்க்கை கொடுக்கலாமா எனத்தோன்றுகிறது.சிறிது செயற்கையான முடிவு!

இதோ...

மறுநாள்  அதிகாலை அறையில் தொலைபேசி ஒலித்தது

போர்வையை விலக்கி எழுந்த முருகு தொலைபேசியை எடுத்தான்.

இனிய குரல் ஒலித்தது”முருகேசன்.நான் என் வண்டியில்தான் சீரடி செல்கிறேன். நான் மட்டும் தான்.  நீங்களும் வருகிறீர்களா?சரியென்றால் சொல்லுங்கள்  இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கு வருகிறேன்.சீரடி சென்று வரலாம்.”

சாயிநாதன் அழைக்கிறாரோ?

முருகு என்ன சொல்லப் போகிறான்?


15 கருத்துகள்:

  1. செயற்கையான முடிவும் நல்லாத்தான் இருக்கு...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா
    தொடக்கிய விதமும் முடித்த விதமும் வெகு சிறப்பு ஐயா.. படித்து மகிழ்ந்தேன் த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. இது இயற்கையான முடிவு என்றாலும் மனம் ஒப்புக் கொள்ள மறுக்கிறது என்பதுதான் உண்மை.

    பிற்சேர்க்கை சற்று ஆறுதல்.

    God Bless You

    பதிலளிநீக்கு
  4. முருகுவுக்கு சந்தேகம் தீர்ந்தாலும் இரண்டு முடிவுகள் இருந்தாலும் இன்னும் கதை முடியவில்லை போலத் தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
  5. செயற்கையான முடிவு என்று நீங்கள் சொன்னாலும் அந்த முடிவுதான் சரியான முடிவு எனத் தோன்றுகிறது. வீட்டில் சீரடி செல்கிறேன் என பொய் சொன்ன முருகுவுக்குத் தண்டனை உண்மையிலேயே சீரடி சென்று சாயிநாதனைத் தரிசித்து வருவதுதான்.

    கதையை வழக்கம்போல் நகர்த்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. முடிவுகள்
    இரண்டு இருந்தும்
    கதை முடியவில்லையோ?
    அருமை ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  7. ம்ம்ம் இரு முடிவுகள்....உங்கள் முதல் முடிவு சரி அவன் வந்த நோக்கம் முடிவடைகிறது.....மனம் ஏற்க மறுத்தாலும் அதுதான் யதார்த்தம்....இரண்டாவது முடிவும் அவன் சொன்ன பொய் நிறைவேறும்படி அமைந்திருந்தாலும் அது செயற்கையாகத் தோன்றவில்லை...ஏனென்றால் அவன் மறுநாளும் சந்திக்கலாமா என்று கேட்டானே...அது "அந்த" சந்திப்பாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லையே..எனவே ஷீரடி என்றதும் அவனுக்கும் உள்ளுக்குள் குற்ற உணர்வு தோன்ற சென்றிருக்கலாம்..இல்லையா...ஆனால் கதை தொடர்வது போல் ஆகிவிடும்....பூரணி பாவம்...

    பதிலளிநீக்கு
  8. அடடா..... கடைசியில் இப்படி ஒரு முடிவு....

    பதிலளிநீக்கு
  9. ம்ம்ம்... நீங்கள் சொல்லி இருப்பது போல எந்த ட்விஸ்ட்டும் இல்லாத கதைதான்! வாழ்க முருகு.. வாழ்க மாலினி. அனுபவம்தான் கதை.

    பதிலளிநீக்கு
  10. முருகுவின் முடிவு ,நமைந்து போன முறுக்கு போலாகிவிட்டது :)

    பதிலளிநீக்கு
  11. முதலில் இருந்து கதை படித்து இங்கு வந்தேன்...
    கதை தான் என்றாலும் மனம் ஏனோ.....

    தம +1

    பதிலளிநீக்கு
  12. படிக்காத இரண்டாம் பகுதியையும் சேர்த்து இன்று மதியமே படித்துவிட்டேன். கருத்துரை இடமுடியாத சூழல்...
    முடிவு அருமை ஐயா...
    சீரடியைச் சொல்லி செக்கப்புக்கு போனவனும்.... உடம்பை விற்றாலும் ஷீரடிக்கு போறவளும்... ம்... நல்ல முடிவு...

    பதிலளிநீக்கு
  13. மிக அருமை அய்யா !

    பிற்சேர்க்கையும் விளக்கம்மும் தேவைப்படாத அருமையான சிறுகதை.

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  14. கதையின் போக்கினை இப்படி எல்லாம் மாற்ற வேண்டுமா!ஹீ சீரடிக்கு போய் சித்தம் தெளிந்தான் என்று முடித்தும் அழகாய்த்தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  15. நடந்தது எதுவானாலும் தங்களின் நாகரீகமான எழுத்து நடையால் அழகு பெற்றது!

    பதிலளிநீக்கு