தொடரும் தோழர்கள்

சனி, ஜூலை 18, 2015

இராகு தரும் நன்மைகள்!!



இராகுவும் .கேதுவும் நிழற்கோள்கள் எனப்படுபவை.

மற்ற கோள்கள் சுற்றும் திசைக்கு எதிர்த் திசையில் சுற்றுபவை

பாம்புக் கோள்கள்,எனவே தீய பலன்களே தருமோ எனப் பலர் அஞ்சுகின்றனர்
ஆனால் அவ்வாறல்ல.

பழைய சோதிட நூல்களில் உள்ள இரு பாடல்களை உங்கள் பார்வைக்கு அளிக்கிறேன்


1)ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி
     ஐந்திடத்தும் கருநாகம் அமைந்து நிற்கில்
  பூமேடை தனில் துயிலும் இராசயோகம்
     ஏமாறாதே நான்கு கேந்திரத்தும்
இடை விடாது கிரகம் நிற்கில்..........

அதாவது மேடம்,இரிடபம்,மகரம்,கடகம்,கன்னி ஆகிய இராசிகளில் இராகு தனியாக நிற்க வேண்டும்;அதே நேரத்தில் கேந்திரங்களில் கோள்கள் இருக்க வேண்டும்;இது ஒரு இராசயோக அமைப்பாகும்

கேந்திரம் என்றால் 1,4,7,10 ஆகிய இடங்கள்.இங்கு கேள்வியே இலக்கி னத்துக்கு 1,4,7,10 ஆகிய இடங்களிலா அல்லது இராகுவுக்கு 1,4,7,10 இடங்களிலா என்பதே.அனுபவ சோதிடத்தில் இராகுவுக்குக் கேந்திரத்தில் என்பதே சரியாக வருகிறது

2)வல்லரவு கேந்திரத்தில் தனித்து நின்று
       மறைவானோடு இசைஞானி மருவக்காணில்
எல்லையில்லா நிதிக்கு இறைவன் இவனே என்று
     இயம்புதற்கு ஏதுவாய் இருப்பான் மற்றும்
நல்லவரென்று உரைப்போல் சுங்கன் புந்தி
      நவகோணத்தில் இருப்பரேல் நிரப்பு வீய
இல்லையென்று உரைப்போர்க்கும் மேலவர்க்கும்
      இரு நிதியம் உதவுகின்ற இறைவனாவான்

அதாவது,இராகு தனியாக 1,4,7,10 ஆகிய எதோ ஒரு இடத்தில் நிற்க வேண்டும் .கேதுவுடன் குரு இணைந்திருக்க வேண்டும்.ராகுவுக்கு 9 இல் நல்ல கோள்களான சுக்கிரன்,புதன் ஆகியவை நிற்க வேண்டும்.அவ்வாறு அமையப் பெற்ற சாதகர் பெரும் செல்வந்தராவார்.

இங்கு இசைஞானி என்றது குருவைக் குறிக்கும்;இளைய ராசாவை அல்ல!

பிறிதொரு நேரம் வேறு சில பலன்களைப் பார்ப்போம்!



      

23 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா

    இராகு பற்றிய விளக்கம் பாடலின் வழி சொல்லியது சிறப்பு ஐயா த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

  2. //இங்கு இசைஞானி என்றது குருவைக் குறிக்கும்;இளைய ராசாவை அல்ல!//

    சோதிடம் பற்றி சொல்லும்போதும் தங்களது குறும்பு போகவில்லையே ஐயா!
    தொடர்கிறேன் மற்ற பலன்கள் பற்றி அறிய.

    பதிலளிநீக்கு
  3. அடேடே... ஜோதிடத்தை நம்பி சென்றமுறை வந்தவர்கள் ஏமாந்து போனதை இப்போ காம்பன்சேட் பண்ணியிருக்கீங்க.. நல்ல முயற்சி.

    ஆமாம். ராகு, கேது அல்லது மற்ற தீய கிரகங்கள், (சனி, செவ்வாய்...) பொதுவாக மறைவு ஸ்தானத்தில் இருப்பதே நலம் என்று சொல்வார்களே.. ( 2,6,8,12 ம் இடங்கள்) நீங்கள் சொல்வது வேறு மாதிரி இருக்கிறதே.

    கேந்திரம், கொணத்தில் அமைந்த ராகு கேது பலப்பட்டு விடாதோ?

    நல்ல முயற்சி. பல்துறை மன்னர் என்பதற்கு இது ஒரு சான்று.

    God Bless You

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீய கிரகங்கல் 3,6,11 இல் இருப்பது நல்லது.ஆனால் இங்கு சொல்லப்பட்டவை சிறப்புப் பலன்கள்.

      நீக்கு
  4. வணக்கம்,
    நாங்களும் குருவைத்தான் நினைத்தோம்,,,,,
    நல்லா இருக்கு,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நிழற்கோள்கள் பற்றிய தகவலுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  6. இதை வாசிக்கும் போதே உங்கள் கடைசியில் அந்த இசை ஞானிக்கு ஒரு வரி இருக்கும் என்று நினைத்து வந்தோம் ...அதே

    //இசைஞானி! இளையராசா அல்ல.//...ஹஹ்ஹ் ...

    பதிலளிநீக்கு
  7. சோதிட விளக்கம் அருமை! கற்றுக்கொண்டேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. சோதிடத்தில் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை எனக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால் என்ன?
      உன்மையாகவே தலைப்புக்குச் சரியான பதிவு இது!
      நன்றி

      நீக்கு
  9. வராஹ மிஹிரர் எழுதிய பிரஹத் ஜாதக நூலில் ராகு கேது பற்றிய
    எதுவுமே இல்லை.
    அதற்குப்பின் எழுதப்பட்ட காலபிரகாசிகா போன்ற நூல்களில் தான் இந்த சாயா கிருஹங்களுக்கு (உண்மையில் அவை சுழலும் நிழல்கள் தான் ) ஒரு மதிப்பு தரப்பட்டது.

    ராகு தனியே தனந்தனியே காத்திருந்தால் என்ன ஆகும் என்பது கேந்திர ஸ்தானம் மட்டும் அல்ல, ஸ்வாமி , அந்தக் கட்டத்தின் ஆட்சி ஆளன் எங்கு இருக்கிறான் என்பதையும் பொறுத்தது.

    ராகு, கேது இரண்டுக்குமிடையே மற்ற கிருகங்கள் இருக்கையிலே கால சர்ப்ப யோகம். இவை இரண்டும் கடிகார முள்ளுக்கு எதிர் திசையில் சுற்றுவதால், (ஆண்டி கிளாக் வைஸ் ) விபரீத கால சர்ப்ப தோஷம் என்றும் ஒரு கான்செப்ட் இருக்கிறது.

    என்ன தான் சொல்லுங்கள். ஒருவன் ஜாதகத்தில், 6 ல் ல் இருப்பின் ராகு பகவான் செய்கிறார்.

    12ல் கேது மோக்ஷம்.

    யாருக்கு ? எனக்கா என்று கேட்டு விடாதீர்கள்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோதிடம் ஒரு கடல்.மோட்சம் கிடைக்கும் என்று தெரிவதால் வாழும்போது என்ன பயன்.?வராக மிகிரருக்குப் பின் வந்ததாயினும் மற்ற சோதிட நூல்களில் பல இவற்றைக் குறிப்பிடுகின்றன.கால சர்ப்பதோஷத்திலேயே அவை இருக்கும் வீட்டைப் பொறுத்துப் பல பலன்கள் சொல்கிறார்கள். சாயாக் கிரகங்களின் பாதிப்பு இன்று மறுக்க முடியாததாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.
      எத்தனை படித்தாலும் அது போதாது என்றே நான் உணர்கிறேன்.
      நன்றி ஐயா!

      நீக்கு
  10. ச்சாயா கிரகம் ராகு பற்றிய தகவல்கள் மற்றும் பாடல் நன்று. ஜோதிடம் - ஆர்வம் இருப்பவர்களுக்கு கடல் அளவு விஷயங்கள் உண்டு. ஆர்வம் இல்லாதவர்களுக்கு ஒன்றுமில்லை! :)

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  11. அட ஜோதிடமும் தெரியுமா நல்லது. அப்போ இது பற்றி தொடருமா என்ன. ராகு பற்றிக் கூறியுள்ளீர்கள். என்னுடைய ஜாதகத்தில் எனக்கு நிற்கிறாரோ தெரியலை பார்க்கலாம். நன்றி வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  12. சோதிடம் பற்றி நம்புவதோ நம்பாததோ என்வரை இல்லை நடப்பது நடக்கட்டும் என்பதே என் வழியாகும்!

    பதிலளிநீக்கு