தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஜூலை 26, 2015

விடுமுறை,சிரிமுறை!

ஒரு விருந்தில் இரு நண்பர்கள் அளவுக்கு அதிகமாகக் குடித்து விட்டு விழுந்து விட்டார்கள்.

மற்றவர்கள் அவர்களைத் தூக்கி வந்து மின்தொடர் வண்டியில் ஏற்றி விட்டனர்.

போதை தெளிந்து விழித்த அவர்களில் ஒருவன் எதிரே அமர்ந் திருந்தவரிடம்”நீங்கள் யார்” என்று கேட்டான்.

அவர் சொன்னார்”நான் ஒரு விமான ஓட்டி”

உடனே அவன் மற்றவனிடம் சினத்துடன் சொன்னான்”பார் ,அவர்கள் நம்மை ஏமாற்றி விட்டார்கள்.விருந்து முடிந்ததும் மின்தொடர் வண்டியில்  ஏற்றி விடுகிறோம் என்று சொல்லி விட்டு ஆகாய விமானத்தில் ஏற்றி விட்டு விட்டார்கள். இப்போது என்ன செய்வது?!”

40 கருத்துகள்:


  1. //போதை தெளிந்து விழித்த அவர்களில் ஒருவன் எதிரே அமர்ந் திருந்தவரிடம்”நீங்கள் யார்” என்று கேட்டான்.//

    போதை தெளிந்திருந்தால் தான் பயணம் செய்வது மின் தொடர் வண்டி எனத் தெரிந்திருக்குமே!

    பதிலளிநீக்கு
  2. இன்னும் தெளியவில்லை போல....ஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
  3. போதை முழுசா தெளியலை போலிருக்கு! ஹாஹாஹா!

    பதிலளிநீக்கு
  4. அதானே என்ன செய்யறது?
    நல்ல நகைச்சுவை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. குடிகாரன் பேச்சுப் பிழை என்றால்
    பார்வையும் அல்லவா பிழைக்கிறது
    "மது மயக்கம் ஓ!"

    ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
    கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
    https://ial2.wordpress.com/2015/07/25/70/

    பதிலளிநீக்கு
  6. போதை தெளிந்தும் தெளியாத பேதை!

    பதிலளிநீக்கு
  7. ஆகா
    இன்னும் தெளியவில்லை போலிருக்கிறது
    தம +1

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா
    ோபோதையின் குணம் அப்படித்தான் ........த.ம 9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. ஹா...ஹா...ஹா...

    நல்லவேளை எதிரில் இருந்தவர் நான் இந்திரன் என்றோ, தேவன் என்றோ சொல்லாமல் போனார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீ ராம் ஜி ,நீங்கள் சொன்னது போல் சொல்லியிருந்தால்,ரம்பா ,ஊர்வசி .மேனகை எங்கே என்று கேட்டிருப்பார்கள் :)

      நீக்கு
    2. சொல்லியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று பகவானே சொல்லி விட்டார்
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  10. அட கடவுளே இன்னுமா தெளியலை.

    பதிலளிநீக்கு
  11. இப்போது என்ன செய்வது?!”என்று கேட்டால் போவது விமானம் என்று தெரிந்தவுடன் கீழே குதித்துவிடுவதுதான்....

    பதிலளிநீக்கு
  12. இதுதான் அரை போதை
    இது மறு நாள்தான் தெளியும்
    மிகவும் இரசித்தேன் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. வணக்கம்

    தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன்.

    http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_29.html

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்

    இன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...

    http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

    உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !

    நன்றி

    பதிலளிநீக்கு