தொடரும் தோழர்கள்

திங்கள், ஜூலை 20, 2015

பார்ப்பானும் பாம்பும்!



”ஏன்னா!அம்முலுவாத்திலே நேத்து ராத்திரி பாம்பு வந்துடுத்தாம்.நல்ல பாம்பாம். அவளோட ஆத்துக்காரர் அதை அடிச்சுட்டாராம்.நல்ல பாம்பைக் கொல்றது பாவமில்லையோ?குழாயடில இதுதான் பேச்சு”

மனைவி விமலா சொன்ன செய்தியைக் கேட்ட நாராயணன் சட்டையை மாட்டிக்கொண்டு சங்கர ஐயர் வீட்டுக்குப் புறப்பட்டார்.யார் சங்கர ஐயர் என்று யோசிக்கிறீர்களா?. அம்முலுவின் கணவர்தான்.

அங்கு முன்னரே சிலர் கூடியிருந்தனர்.நாரயணனைப் பார்த்ததும் சங்கரன் தலையசைத்து வரவேற்று விட்டுத் தன் பேச்சைத் தொடர்ந்தார்.”வாங்கோ நாராயணன் .நீங்களும் கேளுங்கோ!நேத்து ராத்திரி ஒண்ணுக்குப் போயிட்டுக் கால் அலம்பக் குளியலறைக்குள்ள போறேன்,அங்க பாம்பு சுருண்டு படுத்தி ண்டிருக்கு.என் வாழ்க்கையில எத்தனையோ பாம்பைப் பாத்திருக்கேன்.இப்படி ஒரு பாம்பைப் பாத்ததில்ல. அஞ்சு அடி நீளம் இருக்கும்.கரு நாகம். பக்கத்தில இருந்த விறகுக் கட்டையால ஒரு போடு போட்டேன்.அவ்வளவுதான் உயிரை விட்டுடுத்து.”

“உமக்குத் துணிச்சல் அதிகம் ஓய்!பாய்ஞ்ச்சு ஒரு கொத்துக் கொத்தியிருந்தா என்ன செய்றது அப்புறம் என்ன பண்ணீர்” ராமமூர்த்தி

”என்ன பண்றதுன்னு யோசிச்சேன். ராத்திரி பூரா  செத்த பாம்பை ஆத்துக்குள்ள  போட்டு வைக்கறது சரியாயிருக்காதுன்னு, கொல்லைப்பக்கம் குழி தோண்டி அதைப் போட்டுக் கொஞ்சம் பாலையும் ஊத்தி மூடிட்டேன்.வாங்கோ காட்டறேன்”

அனைவரும் தாஜ்மகால் பார்க்கப்போவது போல் அவருடன் சென்று அந்த மண் குவியலைக் கண்டார்கள்

ஆறுமுகம் சொன்னார்”எரிச்சிருக்கணும் சார்.புதைக்கக்கூடாது”

மூர்த்தி சொன்னார்”நல்ல பாம்பைக் கொன்னிருக்கேள்.ஏதாவது பரிகாரம் பண்ணனுமான்னு நம்ம சந்திரசேகர கனபாடிகளைக் கேளுங்கோ. அவர் சரியாச் சொல்வார்.அப்படியே செஞ்சுடுங்கோ”

தன் பங்குக்கு ஏதாவது சொல்ல வேண்டுமே என்று நாராயணனும் ”பாம்புப் பிடாரனைக் கூட்டிண்டு வந்து பார்க்கச் சொல்லுங்கோ இன்னும் பாம்பு இருக்கான்னு”இவ்வாறு சொல்லி அச்சத்தைக் கிளப்பினார்

எல்லோரும் அங்கிருந்து புறப்பட்டனர்.பேச்சு முன்பு எப்போது யார் வீட்டில் பாம்பு வந்தது ,என்ன நடந்தது போன்ற  விவரங்கள் பக்கம் திரும்பியது. 

நாராயணன் நினைத்தார்”எல்லோரும் அவங்கவங்க கதையை தொடங்கியாச்சு. இதுன்னு இல்ல.ஒரு ஆத்தில திருடன் வந்தாலும் எல்லோரும் தங்களோட அனுபவங்களை விவரிக்கத் தொடங்கிடுவாங்க ”

எல்லோரும் கலைந்தனர்

பாம்பைக் கொன்ற சங்கரையர் தான் ஒரு கதாநாயகன் போல உணர்ந்தார்—கொன்றது அரை அடி நீளக் குட்டிப் பாம்பாயினும்!

...........................................................................................................

தோட்டத்தின் மூலையில் காய்ந்த சருகளால் மறைக்கப்படிருந்த ஒர் பொந்தில் இருந்த அந்த ஐந்தடி நீளக்கருநாகம்  காத்திருந்தது!

17 கருத்துகள்:

  1. எதுக்கு காத்து இருக்கிறது சங்கர ஐயர விட்டுபுட்டு ஏப்ப சாப்பகளை கடிக்கவா???

    பதிலளிநீக்கு
  2. ராமநாராயணன் படம் போல கடைசியில் ஒரு ட்விஸ்ட்!

    பதிலளிநீக்கு
  3. எதையும் அரைகுறையா விட்டா இப்படித்தான்!

    பதிலளிநீக்கு
  4. எதையும் அரைகுறையா விட்டா இப்படித்தான்!

    பதிலளிநீக்கு
  5. எங்கள் வீட்டை சுற்றி காய்ந்த மா சருகுகளும், பொந்துகளும் உண்டு. பாம்புகளின் நடமாட்டத்தையும் அடிக்கடி காண முடியும்.

    பதிலளிநீக்கு
  6. படம் ஏதாவது பிடித்து வைத்துக்கொண்டாதா? ;)

    சுவாரசியம்.

    பதிலளிநீக்கு
  7. "தோட்டத்தின் மூலையில் காய்ந்த சருகளால் மறைக்கப்படிருந்த ஒர் பொந்தில் இருந்த அந்த ஐந்தடி நீளக்கருநாகம் காத்திருந்தது!"

    சூப்பர் பன்ச்சுங்கானும்..நீர் வெச்ச தலைப்பை பார்க்கரச்சே இத்தனை பயங்கரமாத் தோனலை.
    இன்னிக்கு ராத்திரி நான் தூங்கனாப்பலதான். சும்ம ஒரு ஹிட்ச் காக் படம் பார்த்தாப்படியே இருக்கு..

    உண்மையாலுமே திக் கென்றது. அதெப்படி ஒரே பக்கத்தில் இத்தனையையும் சாரம் குறையாமல் சொல்கிறீர்? உமது எழுத்தில் எழுத்துச் சாரமும், காரமும் அதிகம்தான்.

    God Bless You

    பதிலளிநீக்கு
  8. அருமை. தொடருங்கள். நமது வலைத்தளம் : சிகரம்

    பதிலளிநீக்கு
  9. பாம்பை அடித்தால் சாபம் கொடுக்கும் என்பார்கள் அதிலும் பாம்பு தப்பினால் ஆபத்து ஏன்றும் அறிந்திருக்கிறேன். அதைவிட பம்பி அடித்தால் அவர்கள் வீட்டு முற்றத்தில் தாட்டு வைத்தால் அதிர்ஷ்டம் என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன், நன்றி வாழ்த்துக்கள் ,,,,!

    பதிலளிநீக்கு
  10. //எல்லோரும் அவங்கவங்க கதையை தொடங்கியாச்சு. இதுன்னு இல்ல.ஒரு ஆத்தில திருடன் வந்தாலும் எல்லோரும் தங்களோட அனுபவங்களை விவரிக்கத் தொடங்கிடுவாங்க.//
    உண்மைதான். இது மனித இயல்பு.யாரேனும் சிறுநீர் கழிக்க சென்றால் பலரும் சிறுநீர் கழிக்க செல்வதுபோல.

    ஆமாம். பதிவு முற்றுப்பெறவில்லையே. அந்த ஐந்தடி நீளக்கருநாகம் யாருக்காக காத்திருக்கிறது?

    தலைப்பு ‘பாம்பை பார்ப்பானும்’ என்றிருக்கவேண்டுமோ?

    பதிலளிநீக்கு
  11. என் குட்டியை கொன்னுட்டே ,உன்னே போட்டுத் தள்ளாமல் போக மாட்டேன் என்று ஐந்தடி நாகம் காத்துக் கிடக்கோ :)

    பதிலளிநீக்கு
  12. கடைசில அந்தத் திருப்பம் சுவாரஸ்யம்...தொடரும் போட்டுருக்கலாமோ?!! எங்களுக்கு என்னத் தோணுச்சுனா அந்த அம்மா? பாம்பு காத்திக்கிட்டுருக்கோ நல்ல தருணம் பார்த்து, தன் குட்டிய கொன்னதுக்காகப் பழி வாங்க....அஹஹஹ்ஹ்...

    பதிலளிநீக்கு
  13. அட...கதையின் திருப்பம் ஸ்வாரஸ்யம்....அடுத்து தொடருமா...கதை...
    தம +1

    பதிலளிநீக்கு