தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜூலை 21, 2015

புனேவுக்குப் போன முருகேசன்!



முருகேசனுக்குச் சில நாட்களாகவே ஒரு ஐயம் மனத்தை அரிக்கத் துவங்கி யிருந்தது.அது என்ன ,ஏன் வந்தது என்பதை அறிந்து கொள்ளும் முன், முருகேசனைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்வது அவசியம்.இனி முழுப் பெயரைச் சொல்லாமல்  அவனை முருகு என்றே அழைப்போமாக.

அவன் இன்றைய,பெருவாரியான இளைஞர்களப்போல் பொறியியல் படித்து விட்டு மென் பொருள் துறையில் பணி புரிபவன்.பெற்றோருக்கு ஒரே பையன். கெட்ட பழக்கங்கள் இல்லாதவன். பணி நேரம் எப்படி மாறினாலும், உடற்பயிற்சிக் கூடத்துக்குப் போவதை நிறுத் தாதவன்.உயரம் 5’8”. கவர்ச்சியான தோற்றம்.காதல் கீதல் என்று எதிலும் மாட்டிக் கொள்ளா தவன்.பல பெண்கள் இவனிடம் வந்து குழைந்தாலும் அதை ஒரு அளவோடு நிறுத்தி விடுபவன்.சில பெண்கள் அவனைச் சாமியார் எனக் கிண்டலாக அழைப்பதும் அவனுக்குத் தெரியும் அவன் கொள்கை, பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்யும் பெண்ணையே மனப்பது;அவளுக்கு உண்மையாயிருப்பது.

இப்போது அவன் ஐயத்துக்கு வருவோம்.இது தொடங்கியது பதினைந்து நாட்கள் முன்புதான். சரியாகச் சொல்வதானால்,பூரணியைப் பெண் பார்க்கப் போன அன்று!

அவள்தான் அவன் பார்க்கப்போன முதல் பெண்..குதிரைப் பந்தய மைதானத்தில்  குதிரைகளைப் பந்தயம் தொடங்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லும் போது சில குதிரைகள் திமிறியவாறு செல்லும்.பார்க்கவே அழகாக இருக்கும். அதுபோல அவன் முன் வந்தாள் பூரணி..பிரம்மன் அவளைப் படைக்கும்போது மிக மகிழ்ச்சி யான நிலையில் இருந்திருப்பான் போலும்,எந்த விதக் குறையும் வைக்காமல், எங்கெங்கே எந்த அளவில் இருப்பது அழகோ அந்த அளவில் எல்லாம் அமைத்துப் படைத்திருந்தான். அன்றுதான் ஐயத்தின் வித்து விழுந்தது.

 திருமணம் உறுதி செய்யப்பட்டது.இரு முறை அவளைத் தனியாகச் சந்தித்துப்  பேசினான் .அவன் சந்தேகம் வலுப் பெற்றதே தவிரக் குறையவில்லை.அவனுக்குச்  சந்தேகம்அவன் மீதேதான்!இந்தக் குதிரையைத் தன்னால் அடக்க முடியுமா என்பதில்தான்.ஓரளவு அச்சம் என்று கூடச் சொல்லலாம் திருமணம் நடந்து முதல் இரவிலேயே தன்னால் இயலவில்லை என்ற நிலை வந்தால்? தான் தகுதியானவன்தான் என்பது தனக்கே உறுதியாகத் தெரிந் தால்தான் நிம்மதியாக இருக்க முடியும்.என்ன செய்வது?

யாராவது மருத்துவரைக் கலந்தாலோசிக்கலாமா?

வேறு என்ன செய்யலாம்.குழப்பமாக இருந்தது .

தன் நண்பன் கணேசனைக் கலந்தாலோசிக்கலாம் என முடிவு செய்தான்.

கணேசன் சொந்தமாகத் தொழில் செய்து வந்தான்.கெட்டிக்காரன்.

அவனைப் போய்ச் சந்தித்தான்

வா முருகு!என்னமோ முக்கியமாப் பேசணும்னு சொன்னயே

முருகு தன் அச்சத்தைத் தயங்கியவாறு அவனிடம் விவரித்தான்

அவன்சிரித்தான்இதெல்லாம் சாதாரணமப்பா!மருத்துவரிடம் போய் என்ன சொல்வாய்? குறை இருக்குமா என ஐயம்தானே உனக்கு.அதைச் சரி செய்து கொண்டால்,உனக்கே தெளிவாகி விடும் நீ தகுதியானவன்தான் என.அற்கு ஒரே வழிதான்

முருகுவுக்கு அவன் எதைக் குறிப்பிடுகிறான் எனத் தெரிந்தாலும் கேட்டான்என்ன?’”

ஒரு இடத்துக்குப் போய்ப் பார்த்தால் தெரிந்து விடுகிறதுஎனச் சொன்னான்.  
  
அய்யய்யோ வேண்டாம் .பேர் கெட்டுப்போகும்முருகு அஞ்சினான்.

இந்த ஊரில் வேண்டாம்.அடுத்த வாரம் நான் புனே போகிறேன்,தொழில் தொடர்பாக.நீயும் என்னுடன் வா.நல்ல உயர்ந்த துணையெல்லாம் கிடைக்கும். உன்னைப் பற்றி உறுதி செய்து கொள்ள உனக்கான வாய்ப்பு.”

முருகு யோசித்தான்,பின் சரியெனத் தலை அசைத்தான்

கணேசன் சொன்னான்.”வீட்டில் கணேசனுடன் சீரடிக்குச் சென்று வருவதாகச் சொல்லி விடு.நான் சீட்டு முன்பதிவு செய்து விடுகிறேன்

(தொடரும்)

33 கருத்துகள்:

  1. "வாணாம்.... வம்புல மாட்டிக்காத முருகேசா!"

    பதிலளிநீக்கு
  2. சீரழிய செல்ல சீரடி செல்வதாக சொன்ன அந்த முருகுவுக்கு என்ன நடந்ததென அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறுத்திருங்கள்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  3. பிள்ளையாரப்பா, தம்பியுடன்... இது சரியாப்பா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்ய?பெயர் அப்படி!
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டிடி

      நீக்கு
  4. சீக்கிரம் அடுத்த பகுதி எழுதுங்க

    பதிலளிநீக்கு
  5. இதுக்குமா வெள்ளோட்டம் ,தாங்காது பூமி :)

    பதிலளிநீக்கு
  6. I think I can guess...probably he would meet his would b who might b on a similar mission !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப அதிகம்
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாசு

      நீக்கு
  7. அதுசரி... ஷீரடிக்கு என்று... ம்... எதோ நல்லதா நடந்தாச் சரி... விபரீதமாக எழுதினாலும் எதோ விவரமான கதையாத்தான் இருக்கும் போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் அவன் செயல்!
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  8. அன்றுதொட்டு தொடருவதே நடக்குமோ என்ற ஐயம் இருந்தாலும் வேறு ஏதாவது ட்விஸ்ட் வைத்திருக்கிறீர்களா என்ற சந்தேகமும் இருப்பதால்...

    தொடருங்கள் !!!

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : " காலம் திருடிய கடுதாசிகள் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/07/blog-post_18.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் தொடருங்கள்
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  9. அடுத்த பகுதி எப்போது தல தொடர் தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. தொடர்ந்து என்ன ஆயிற்று என அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
  11. தவறான வழிகாட்டுதல் அல்லவா கணேசன் காட்டுகிறார்! பெயர் மட்டும் கணேசன்...! நல்ல பெயர்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயர் வேறு செயல் வேறு!
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  12. வாயில ஷீரடினு வந்துருச்சு....அந்த ஷீரடி முருகேசுக்கு நல்ல திருப்பத்தக் கொடுக்கட்டும்...தொடர்கின்றோம்....

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ஐயா..சுவாரஸ்யம்.அடுத்து நடப்பது காண ஆவல்

    பதிலளிநீக்கு
  14. கதையின் அடுத்த பதிவிற்கு செல்கிறேன் ஐயா...... தம 9

    பதிலளிநீக்கு