தொடரும் தோழர்கள்

சனி, ஜனவரி 03, 2015

காதலிக்க நேரமில்லை!

நேற்று மாலை என் நண்பர் ஒருவர் தொலை பேசினார்

வருத்தமும் கவலையும் தோய்ந்த குரலில் சொன்னார்”விக்னேஷ்(அவர் மகன்) மண வாழ்க்கையே சரியில்லை.உனக்குத்தான் தெரியுமே அவன் காதலிச்ச பொண்ணையேதான் கல்யாணம் பண்னிக்கிட்டான்னு.ஆனா இப்ப என்னவோ ரெண்டு பேருக்கும் ஒத்துப் போறதே இல்ல.மண விலக்கு வரைக்குக்கும் போய் விடுமோன்னு பயமா இருக்கு.. ”


அவருக்குச் சமாதானம் சொல்லி, விக்னேஷ், அவன் மனைவி இருவரிடமும் நான் பேசுவதாக வாக்களித்து விட்டுத் தொலைபேசியை வைத்தேன்.

என் மனம் நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய பதிவொன்றைப் பற்றி நினைத்தது

இதோ அப்பதிவு உங்கள் பார்வைக்கு........


//"குறை ஒன்றும் இல்லை-----”--கைபேசி-
 
"சொல்லு காயத்ரி,என்ன விஷயம்?"
 
"இன்னிக்கு சாயந்திரம் எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவே அஷ்வின்?"

"
எங்க எம்.டி.என்னைக் கூப்பிட்டு ரொம்ப முக்கியமான வேலை ஒண்ணைக் குடுத்திருக்காரு. இன்னைக்கு லேட்டா உக்காந்தாவது முடிச்சாகணும்.ஏன் கேட்ட?"

"
இல்லே,இன்னைக்கு நான் கொஞ்சம் சீக்கிரமே வந்துடுவேன்.எங்கேயாவது வெளியே போயிட்டு டின்னரையும் முடிச்சுட்டு வந்துடலாம்னு நெனச்சேன்."

"
ரொம்ப வருந்துகிறேன்,என் இனிய இதயமே!மற்றொரு நாள்?"
 
"அதை அப்போப் பார்த்துக்கலாம்.இன்று நான் வேறு ஏதாவது செய்து கொள்கிறேன்."


இரவு.வெளியே எங்கும் செல்ல மனமின்றி பீட்சா வரவழைத்துச் சாப்பிட்டு விட்டு,சிறிது நேரம் டி.வி.பார்த்துவிட்டு ,படுக்கையில் படுத்தபடியே புத்தகத்தைப் புரட்டிவிட்டுத் தூங்கிப் போனாள் 
 தன்னிடம் இருக்கும் சாவியை உபயோகப்படுத்தி அஷ்வின் கதவைத் திறக்கும் போது ,காயத்ரிக்கு விழிப்பு வந்தது.கடிகாரத்தைப் பார்த்தாள்.மணி இரண்டு.அஷ்வின் உள்ளே வந்து உடை மாற்றிக் கொண்டு படுக்கையில் அவளருகில் படுத்தான்.அவள் அவனை அணைத்து அவன் உதடுகளைத் தன் உதடுகளால் ஒற்றினாள்.
"காயத்ரி,நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்"சொல்லிய படியே அவன் தூங்கிப் போனான்.

மறு நாள்.
"
யே தில் யே பாகல் தில் மேரா--------"அலைபேசி
"
ஹலோஅஷ்வின்,சொல்லு."
"
ஹை,காயத்ரி,ஒரு மகிழ்வான செய்தி.இந்த மாதத்திலிருந்து எனக்கு ரூ.10000/= சம்பள உயர்வு.இதை இன்று மாலை கொண்டாடலாம்,சரியா"


"
வருந்திகிறேன், அஷ்வின்.இன்று எங்கள் அலுவலகக்கணினி செயல்பாட்டில் கொஞ்சம் பெரிய சிக்கல்.சரி செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்று சொல்ல முடியாது. எப்படி யாயினும்,வாழ்த்துகள், அஷ்வின்"

"
எனக்கு ஏமாற்றம்தான்;உடன் பணி புரியும் யாரையாவது அழைத்துச் சென்று கொண்டாடி விடுகிறேன்"

"
யே தில் யே பாகல் தில் மேரா--------"அலைபேசி-
"
ஹல்ல்லோ,என்ன காயத்ரி?'
"
எங்க இருக்கே அஷ்வின்?"
"
பார்க் ஷெரடன்.மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்"
"
உடன் யார்?வழக்கமான நண்பர்களா?எதுவும் அதிகமாகாமல் பார்த்துக் கொள்."
"
இல்லை,இல்லை,நீ நினைப்பது போல் இல்லை.ஒரு நண்பியுடன் இருக்கிறேன்."
"
யார்?"
"
உனக்குத் தெரியாது.புதிதாகச் சேர்ந்தவள்.என் கீழ் பணி புரிகிறாள்.சுமிதா என்று பெயர்."
"
ஒகே.நான் வீட்டுக்குக் கிளம்புகிறேன்.நீ சும்மா இருந்தால் வந்து அழைத்துப் போக இயலுமா என்று கேட்பதற்காகத்தான் பேசினேன்.நான் ராஜேஷை வீட்டில் கொண்டு போய் விடச் சொல்லி விடுகிறேன்."

இப்படித்தான் பலஇரவுகள் இவர்களுக்குக் கழிகின்றன.வேலைப் பளு,மாறுகின்ற இரவு நேர வேலை,வேலையில் இருக்கும் இறுக்கம்,அதன் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் இவற்றின் காரணமாகப் பாதி இயந்திரங்கள் ஆகிப் போனார்கள்.ஒருவருக்கு மற்றவர் துணை தேவைப் படும் போது அது கிடைப்பதில்லை.

இவர்கள் காதலித்து மணந்தவர்கள். அப்போதாவது விடுமுறை நாட்களில் சந்தித்து மனம் விட்டுப் பேசி ஒருவர் அண்மையில் மற்றவர் மகிழ்ந்ததுண்டு.பார்க்காத இடைவெளியில் மனம் ஏங்கியதுண்டு.அப்போது இருவர் ரசனையும் ஒன்று போலத் தோன்றியது.  

ஒருவருக்காகவே மற்றவர் படைக்கப் பட்டவர் எனத்தோன்றியது. இப்போதோ--?அவள் ஒவியக் கண்காட்சிக்கு என்று சொன்னால் அவன் முகம் சுளிக்கிறான்.சினிமா போகலாம் எனச் சொல்கிறான்.அவள் கர்னாடக சங்கீதம் என்றால் அவன் மெல்லிசை என்கிறான். அப்போது காதலும் இருந்தது;காமமும் இருந்தது.

இப்போது,காதலிக்க நேரமில்லை;காமத்துக்கும் நேரமில்லை.என்றோ ஒரு நாள் முயக்கமும் வெறும் உடல்களின் கூடலாகத்தான் இருக்கிறது..

பணம் மட்டுமே வாழ்க்கையாகுமா?//

பெருமூச்சு விட்டேன்.பேசிப் பார்க்கலாம்.

நல்லது நடந்தால் நடக்குட்டும்!


13 கருத்துகள்:


  1. ‘’பணம் மட்டுமே வாழ்க்கையாகுமா?’’

    இல்லை என்பது புரிய இக்கால இளைஞர்களுக்கு பல ஆண்டுகள் ஆகின்றன. அதற்குள் அவர்கள் இளமையை இழந்து, வாழ்க்கையை இழந்து தனிமைப்பட்டு போகிறார்கள் என்பதே உண்மை.

    மீள் பதிவானாலும் பலமுறை இடவேண்டிய பதிவு.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா.

    கதை அருமையாக உள்ளது... வாழ்க்கை முக்கியம் அதன் பின்புதான் பணம்
    பணம் பணம் என்று அலைந்தால் வாழ்க்கை சங்கடமாக இருக்கும்.. பகிர்வுக்கு நன்றி ஐயா
    த.ம2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. எதுவும் கிடைக்கும்வரைதான் ஏக்கம், ஆவல் எல்லாம். கிடைத்தபிறகுதான் அலட்சியம் வந்து விடுகிறது.

    பதிலளிநீக்கு
  4. அளவுக்கு அதிகமான பணத்தினால் நிம்மதியின்மை மட்டுமே எஞ்சுகிறது

    பதிலளிநீக்கு
  5. பணம் மட்டும் வாழ்க்கையல்ல! மிகச்சிறப்பான பகிர்வு! நல்லதே நடக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  6. ஓ,,,பதிவை மீண்டும் போட இப்படி ஒரு வழி இருப்பது எனக்கு தெரியாமப் போச்சே :)
    சரி ,உங்கள் முயற்சியால் நல்லது நடந்ததா ...அடுத்த பதிவில் எதிர்ப்பார்க்கிறேன் !
    த ம 4

    பதிலளிநீக்கு
  7. வாழ்க்கை முறைகள் மாறுகின்றன. அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். செல் போனை மாற்றுவது மாதிரித்தான் பெண்டாட்டியை மாற்றுவதும் என்று ஆகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  8. இப்படித்தான் பலரது வாழ்க்கை மணவிலக்கு வரைப் போனதை நான் அறிவேன்!

    பதிலளிநீக்கு