தொடரும் தோழர்கள்

வியாழன், ஜனவரி 29, 2015

கல்கி பகவான்-ஓர் அனுபவம்!



ஆண்டு 1996-97 ஆக இருக்கலாம்.

எங்கள் கிளை வாடிக்கையாளரின் அலுவலகத்துக்குக் கடன் வசூல் சம்பந்தமாகப் போயிருந்தேன்
அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது கவனித்தேன் சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு 
படத்தை.

அதில் ஒரு சாமியார்,தாடி மீசையுடன், உடல் முழுவதும் மறைத்து மஞ்சள் உடையணிந்து, தலையிலும் துணியைக்கட்டிக் கொண்டு இரு கைகளையும் ஏந்தியவாறு நின்றிருந்தார்.
(இப்போது தோற்றம் மாறி விட்டது.தம்பதி சமேதராகக் காட்சியளிக்கிறார் அம்மா பகவான்!)

பேச்சு முடிந்ததும் நான் கேட்டேன் படத்தில் இருப்பவர் யார் என்று.

அவர் சொன்னார் அவர்தான் கல்கி பகவான்.சென்னையை ஒட்டிய நேமத்தில் இருக்கிறார் என்றும் தன் வாழ்க்கையில் அவர் நிகழ்த்திய அற்புதம் பற்றி எல்லாம்!(கடன் தொல்லை தீர அற்புதம் ஒன்றும் செய்யவில்லை போலும்!)

எனக்கு எப்போதுமே இந்த மாதிரிச் சாமியார்கள் விசயத்தில் ஒரு உந்துதல்,ஆராயுங்குணம் உண்டு.

அடுத்த முறை அவர் வங்கிக்கு வந்தபோது மேலும் அவர் பற்றி வினவினேன்.

அப்போதுதான் அவர் என்னை ஒரு வீட்டில் இருக்கும் கல்கி பகவான் கோவிலில் நடக்கும் பஜனுக்கு அழைத்தார்.

குறிப்பிட்ட நாளன்று போனேன்.

ஒரு பெரிய கூடத்தில் கல்கியின் மிகப்பெரிய படம்,முதன்முதலில் நான் பார்த்த அதே படம்,பெரிய அளவில்.

அந்த வாடிக்கையாளரும் வந்து விட்டார்.

மொத்தம் ஆறே பேர்-ஐந்து ஆண்கள்,ஒரு பெண்.-அந்த வீட்டைச் சேர்ந்தவள்.

பஜன் துவங்கியது.

அதில் லயிக்கவில்லை என் மனம்;ஆயினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை

அவரிடம் செல்பவர்களை மூளைச் சலவை செய்வதாகக் கேள்விப்பட்டிருந்தேன்

ஆனால் அது பற்றி என்னால் கூற இயலாது,ஏனெனில் எனக்கு நேரடி அனுபவம் இல்லை.

ஆனால் அந்த பக்தர்கள் ஒரு சிறிய மூளைச்சலவையில் ஈடுபட்டனர் என்பது போல் உணர்ந்தேன்.

அந்தப்பெண் பஜன் நடக்கையில் சிறிது நேரம் அழுவதும்,சிறிது நேரம் சிரிப்பதுமாயிருந்தாள்.
அந்த வீட்டுச் சொந்தக்காரர் என்னிட ம் சொன்னார்”அந்தப் பெண் மாதிரி ஒரு நிலை உங்களுக்கும்  வரும் பகவானையே உற்றுப் பார்த்தபடி இருங்கள்”

வேறு ஒருவர் வந்து சொன்னார்”பகவனையே பார்த்தபடி இருங்கள் அவர் உங்களை நோக்கி வருவார்:

அப்பா!வாய்நாற்றம் தாங்க முடியவில்லை.

பகவானின் பக்திமயக்கத்தில் ஆழ்வேனோ என்னவோ இந்த ஆள் இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தால் அந்த நாற்றமே என்னை மயக்கமடையச் செய்து விடும்!பகவானிடம் இந்த நாற்றத்தை நீக்கக் கோரிக்கை வைக்கவில்லையோ?

நானும் படத்தை உற்றுப் பார்த்தபடியே இருந்தேன்.

ஒரு பக்தியோ பரவசமோ ஏற்படவில்லை.

நான் ஒரு  துரதிருஷ்டசாலிதான்.

 இது போன்ற சாமியார்கள் முன்அது மாதிரி நிலையெல்லாம் வருவதில்லை!

பஜன் முடிந்தது.

நான் வாடிக்கையாளரிடமும் மற்றவர்களிடமும் சொன்னேன்”பகவானைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.அதில் அவர் மறைந்து கழுத்தில் ஆடும் பாம்புடன் சிவன் தெரிந்தார்”(ச்சும்மா!)

அவர்களுக்கு மகிழ்ச்சி(பாவம்)

உங்களுக்கு ”ஆவிர்பாவம்” வந்து விட்டது என்றனர்(அப்படியென்றால் என்ன?)

கிளம்புமுன் ஒருவர் சொன்னார் “ஞாயிறன்று என் வீட்டில் இண்டென்சிவ் இருக்கிறது கட்டாயம் கலந்து கொள்ளுங்கள்”

தலையசைத்து விட்டு நடந்தேன்

பின் அந்தப்பக்கமே போகவில்லை!

டிஸ்கி:இதையெல்லாம் கேள்விப்பட்ட என்னுடன் பணி புரிந்த சில இளைஞர்கள் நேமம் சென்று என்ன நடக்கிறதென்று பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் ஏனோ அது நடக்கவில்லை,பகவானின் அனுக்கிரகம் இல்லை போலும்!



42 கருத்துகள்:

  1. நல்லவேளை தப்பித்தீர்கள்
    ஆனாலும் ஒரு தீக்குச்சியை பற்றவைத்தல்லவா
    வந்திருக்கிறீர்கள்.
    மனம் கவர்ந்த சுவாரஸ்யமான பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. என் நண்பருக்கு தெரிந்து அண்ணன் தம்பிகள்... சொத்து தகராறு. சில பல லட்சங்கள் (அந்த காலத்தில் பெர்ர்ர்ர்ரிய தொகை) யாருக்கு என்று சண்டை. இருவரும் இவருடைய பக்தர்கள்! அவரிடம் போனார்கள். பிரச்சினையை சொன்னார்கள். வெகு சுலபமாக தீர்த்து வைத்துவிட்டார்! அவர்களும் ஆனந்தமடைந்தனர்!
    என்ன தீர்வு? பணம் உங்களிடம் இருப்பதுதானே பிரச்சினை, என்னிடம் கொடுத்துவிடுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவ்வளவு எளிதாகப் பிரச்சினையைத் தீர்த்து விட்டார்!இதையே நாம் சொன்னால் செய்வார்களா?
      அவர் பகவான்!
      நன்றி வாசுதேவன் திருமூர்த்தி

      நீக்கு

  3. இதே வேலையா ஒரு குரூப் அலையும். நல்லவேளை தப்பித்து விட்டீர்கள். இடையிடையே வரும் உங்களின் நக்கல் அருமை.

    பதிலளிநீக்கு
  4. //பகவானைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.அதில் அவர் மறைந்து கழுத்தில் ஆடும் பாம்புடன் சிவன் தெரிந்தார்”//
    நீங்கள் குறும்புக்குக்காக சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் பலர் ‘பிள்ளையார் வயிற்றில் புனுகு’ கதையாக தாங்கள் பார்க்காததை பார்த்ததாக சொல்லி பிறரையும் தங்களைப் போல் ஏமாறவைக்கிறார்கள். கல்கி பகவான் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. கழுத்தில் ஆடும் பாம்புடன் சிவனா...? அது பாட்டுக்கு தேமேன்னு கிடக்கும் , சிவன்தான் ஆடுவார்னுல்ல படங்கள்ல பாத்திருக்கேன்....? உங்க குசும்பை அந்த ஞானசூனியங்களுக்கு கண்டுபிடிக்கத் தெரியல... ஹா... ஹா.. ஹா... எனக்கு கல்கி சாமியார், ஆனந்தவிகடன் சாமியார் யாரை வேணாலும் பாக்க பயமில்ல.. ஏன்னா என்னை மூளைச்(?)சலவை செய்ய அவங்க யாராலயும் முடியாது தல... இருந்தாத்தானே...? கிக்கிக்கி...

    பதிலளிநீக்கு
  6. இந்த முழிச்சிருக்க முடிச்சவுக்கும் கூட்டத்தில் ஒருவர் விடாமல் ஆராய்ந்துள்ளீர்கள்.
    உங்களுக்கு வல்ல மனவுறுதி!!
    இவர்களைப் பகவான், சாமியார் எனக் குறிப்பிடுவதே தவறு!
    இப்போது இவர்கள் வண்டவாளமெல்லாம் சந்தி சிரிக்கிறது.
    இவர்கள் ஊரில் உள்ளவர்கள் நோயெல்லாம் திருநீறால் தீர்க்க முற்படுவார்கள்.அவர்களுக்கு
    நோயெனில் வைத்தியர்களை நாடுகிறார்கள்.
    நமது துன்பங்களும், பதட்டங்களுமே அவர்கள் மூலதனம்.
    இப்போ பாமரர்களை விட அதிகம் படித்தவர்கள் தான் இவர்கள் வலையில் விழுந்து
    சீரளிகிறார்கள்.
    ஓர் பிச்சையெனக் கேட்கும் ஏழைக்கு ஒரு ரூபா கொடுக்க மனம் மறுக்கும் பலர், இவர்கள்
    கால் கழுவ 25 ஆயிரம் கட்டுகிறார்கள்.
    ஒரு ரூபா கேட்பவனை உழைத்துத் தின் என உபதேசம் செய்யும் இவர்கள், இந்த ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு என்றும் புத்தி சொல்வதில்லை.
    நம் மண் விந்தை நிறைந்தது, இந்த முடிச்சவிழ்ப்போர் வித்தை காட்டுவோரே!


    //பகவானைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.அதில் அவர் மறைந்து கழுத்தில்ஆடும் பாம்புடன் சிவன் தெரிந்தார்”//
    இதை வைத்து எத்தனை பேரைக் கவிட்டார்களோ?

    பதிலளிநீக்கு
  7. ஐயா என்ன தொடர்ந்து பஜனையிலேயே இறங்கிட்டீங்க..... நல்லாத்தான் இருக்கு படிப்பதற்க்கு
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  8. //பணம் உங்களிடம் இருப்பதுதானே பிரச்சினை, என்னிடம் கொடுத்துவிடுங்கள்!//

    அதானே!

    சாமியார் வாரம் இன்னும் தொடர்கிறது. எத்தனை அனுபவங்கள்.... :)

    பதிலளிநீக்கு
  9. அடுத்தடுத்து யாகவா முனிவரும், சிவசங்கர் பாபாவும் வருவார்களோ!

    பதிலளிநீக்கு
  10. எல்லோரும் படித்து கமெண்ட் போட்டபின் நானும் கமெண்ட் போடுகிறேன் என்று பகவான் அவர் சிஷ்யர் ஒருவரிடம் சொல்லி இருக்காராம்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்
    ஐயா.
    நிகழ்வை மிக அருமையாக படம்பிடித்து காட்டியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  12. அந்த ;பகவான் ;தம்பதிக்கு பிள்ளை இல்லை போலிருக்கு ...கல்கி பகவான் ,அம்மா பகவானை , தொடர்ந்து குட்டி பகவான் வரவில்லையே :)
    த ம 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களே அருள் புரிந்து கொள்ள வேண்டியதுதான்!
      நன்றி

      நீக்கு
  13. எங்கெங்கும் பக்தர்கள் இருந்து பணத்தைகொடுத்து வெளிகள் சூழ்ந்த நகரத்தில் வசித்து வருகிறார்கள். கனகாபிஷேகம் நடக்கிறது. நீங்கள் எழுதியதில் திருப்தி.

    பதிலளிநீக்கு
  14. சாமி யார் என்று கேட்காமல் வந்தீர்களே!
    நகைச்சுவை இழையோடும் பதிவு!
    அருமை அய்யா!

    பதிலளிநீக்கு
  15. எனக்கு கல்கியை விட .... அம்மா பிடிக்கும். கொஞ்சம் கூட அருளே இல்லாத முகபாவனையில் விதவிதமான பட்டுப்பொடவைகளும் நகை நட்டுகளுமா..... ஆஹா ஆஹா.

    அண்ணன் வீட்டுக்கு ரெண்டாவது வீடு கல்கியின் தம்பி வீடு. ஒரே காம்பவுண்டுக்குள் என்பதால் கடந்து போகத்தான் வேணும்:-)

    பதிலளிநீக்கு
  16. இங்கும் ஒரு கூட்டம் "அலைந்து" கொண்டிருக்கிறது... திருந்துவது மாதிரி தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
  17. இன்னும் இவர்களை நம்பி மக்கள் கூட்டம் சென்று கொண்டிருப்பது வேதனைதான்.

    பதிலளிநீக்கு
  18. ஹா... ஹா... இன்னும் இவர்கள் பின்னே செல்லும் கூட்டத்தைப் பார்க்கும் போது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது ஐயா...

    பதிலளிநீக்கு
  19. நம்பும் கூட்டம் இருக்கும் வரை இவர்கள் காட்டில் மழைதான் இருந்தாலும் உங்க மனவைராக்கியம் சூப்பர் ஐயா.

    பதிலளிநீக்கு