தொடரும் தோழர்கள்

புதன், ஜனவரி 28, 2015

கணபதி சச்சிதானந்த ஸ்வாமியை சந்தித்தேன்!



ஆண்டு 1981-82.

சென்னை பிராந்திய ஆய்வு அலுவலகத்தில் ஓராண்டு பணி செய்த காலம்.

ஆண்டு,.மாதம், நாள் எல்லாம் சரியாக நினைவில் இல்லை.

நினைத்துப்பார்த்து எழுதும் என் நண்பர் போல் எனக்கு நினைவாற்றல் இல்லை!

அந்தக்காலம்,வாழ்க்கையின் குறுக்குச் சாலையில் குழம்பிப்போய் நின்ற காலம்.

ஆந்திராவில் ப்ரோத்தடூர் கிளையில் ஆய்வு நடந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் கிலை மேலாளர் “நம்ம ஊருக்கு ஒரு சாமியார் வந்திருக்கிறார் ;போய்ப்பார்த்து வரலாம் வாங்க” என அழைத்தார்.

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் எனக்கிடந்த நேரம்.

எனவே உடன் அவருடன் சென்றேன்.

மிகச்சிறியகூடம்.பத்துப் பதினைந்து பேர்தான் இருப்பர்.

ஏற்கனவே சாமியார் வந்து விட்டார்.

தாடி,மீசையுடன் காணப்பட்டார்.

கண்களில் ஒரு தீட்சணியம் இருப்பதாகத் தோன்றியது

நாங்கள் சென்று அவரை வணங்கினோம்.தள்ளி நின்றோம்.

ஒவ்வொருவராக வந்து மரியாதை செலுத்தினர்.

பழங்கள் கொண்டு வந்தவரிடம் “கால்ல வச்சிடு” என்றார்.

கையில் அணியும் செம்பு வளையங்களை வேண்டிக்கேட்டவர்களுக்கு அணிவித்தார்—விலை ரூபாய் இரண்டுதான்.

நானும் ஒன்று அணிந்துகொண்டேன்.

மேலாளர் என்னை அறிமுகம் செய்ய புன் முறுவலோடு கேட்டு கை உயர்த்தி ஆசிர்வதித்தார்.

அவ்வளவு அருகில் நின்று அவருடன் பேசி ஆசி பெற்றது மகிழ்ச்சிதான்.

அதன் பின் அவரைப்பற்றி நான் நினைக்கவேஇல்லை.

ஆண்டுகள் பல கடந்தன.

ஒருநாள் நாரதகான சபா அரங்கில் சாமி வருவதாகக் கேள்விப்பட்டுப் போனேன்.

அரங்கு நிரம்பி வெளியில் எல்லாம் கூட்டம்.

அவர் அருகில் நெருங்கவே முடியாது.

எல்லோரும் என் கண்களைப் பாருங்கள் என்று சொல்லிக் கண்கள் விழித்து அவற்றில் டார்ச் வெளிச்சம் அடித்தபடி கூட்டத்தின் நடுவில் வலம் வந்தார்.mass hypnosis செய்கிறாரோ என எண்ணினேன்.

கூட்டம் முடிந்து திரும்பினேன்.

நம்நாட்டில் சாமியார்கள் எவ்வளவு வேகமாகப் பிரபலமாகி விடுகிறார்கள்என்று 
எண்ணியபடியே வீடு திரும்பினேன்.

அவர்தான் கணபதி சச்சிதானந்த ஸ்வாமி!

டிஸ்கி:அவரிடம் ஏதோ பிளஸ் இருக்கிறது என்றே தோன்றுகிறது!

8 கருத்துகள்:

  1. இது என்ன சாமியார் வாரமா? தொடர்ந்து சாமியார்களை சந்தித்தது பற்றியே எழுதுகிறீர்கள்.
    நீங்கள் சாமியாரை சந்தித்த நாள், நேரம் முதலியவை நினைவில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிகழ்வை நினைவில் இருத்தி பதிவிட்டிருக்கிறீர்களே! உங்களுக்கா நினைவாற்றல் இல்லை? நான் நம்பத் தயாராக இல்லை.

    பதிலளிநீக்கு
  2. சுலபமாக துட்டு காணும் தொழில் இன்று அது ஒன்றே...

    பதிலளிநீக்கு
  3. சாமி 'யார்'கள் தொடர் பதிவா?

    :))))))

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    ஐயா.
    பல வேஷங்களில் இதுவும் ஒன்று.. எல்லாம் ஏமாற்றும் சுவாமிகள்தான்...உதாரணத்திற்கு நித்தி.....
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் இரண்டெழுத்து தானே வித்தியாசம் அது தான் சாமியார்களின் சம்பாத்தியம்.....

    பதிலளிநீக்கு
  6. அதென்ன எல்லா சாமியார்களும் தவறாம தாடி மீசையோடயே இருக்காங்க...? அது இல்லாட்டி சாமியார்னு ஒத்துக்க மாட்டாங்களா என்ன..?

    பதிலளிநீக்கு