வாழ்க்கை வண்ண மயமானது.
வண்ணங்கள் வாழ்வோடு இணைந்தவை.
ஆடுகின்ற மயிலின் அழகிய தோகை,வானத்தை வளைத்திருக்கும்
வானவில், அந்தி வானத்தின் செம்மை,ஆழ்கடலின் நீலம் இப்படிப் பல
வண்ணங்களை ரசிக்காதவர் எவர்?
ஆனால் இந்த அழகிய வண்ணங்கள் எவற்றோடெல்லாம்
சம்பந்தப்பட்டிருக்கின்றன?i
பச்சை-கண்ணுக்குக் குளிர்ச்சி தரும்
நிறம்.நவக்கிரகங்களில் புதனுக்குரிய நிறம்.
ரத்தினங்களில் மரகதம் என்பது பச்சைக்கல்.
பச்சை மாமலை போல் மேனி என்று பாடப் பட்ட மாதவனின் நிறம்.உயிர்நாடியான பயிர்கள்,தாவரங்கள்
இவற்றின் நிறம்
ஆனால் இந்தவிதமாகவும் பயன்படுகிறதே
இந்நிறம்?!
“அவன் மோசமான ஆளு;பச்சை பச்சையாப்
பேசுவான்”
”அவன் பச்சை பச்சையாக எழுதுகிறான்”
இங்கு பச்சை அசிங்கமாக எழுதுவதைப்
பேசுவதைக் குறிக்கப் பயன்படுகிறது!
மஞ்சள்-மங்கலத்தைக் குறிக்கும் நேரம்.
குருவுக்குரிய நிறம்.கனக புஷ்பராகம் என்ற மஞ்சள் கல் குருவுக்குரியது.முன்னாளில்
பெண்கள் தவறாமல் மஞ்சள் பூசிக் குளித்து மஞ்சள் முகமாகக் காட்சி தருவார்கள்.”மஞ்சள்
முகமே வருக”என்ற பாட்டு நினைவுக்கு வருகிறதா?
ஆனால் மஞ்சள் பத்திரிகை என்றால்?-அதற்கும்
மங்கலத்துக்கும் தொடர்பே இல்லை!.அந்நாளில் லட்சுமி காந்தன் என்பர் நடத்தி வந்த இந்து நேசன் இது போன்ற
பத்திரிகைதான்.
இப்போ தெல்லாம் மஞ்சள் பத்திரிகை என்று ஒன்று தனியே வெளிவர வேண்டிய
அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை!
நீலம்.அமைதி தரும் நிறம்.அநேகமாகப்
பலருக்குப் பிடித்த நிறம் நீலம்தான்.நீல வானம், நீலக்கடல் என்று ரசிக்க வைக்கும்
நிறம்.சனிக்குரிய நிறம்.
படம் பார்த்தான் என்றால் ,ஓகே
ஆனால் நீலப் படம் பார்த்தான் என்றால்?!
சிவப்பு-மங்கலச் சின்னமான குங்குமத்தின்
நிறம்.சுப நிகழ்வுகளில் எடுக்கப்படும் ஆரத்தியின் நிறம்.சூரியன்,செவ்வாய்க்குரிய நிறம்.சாலையில்
ஊர்திகளையும் நடப்பவர்களையும் கட்டுப்படுத்தி விபத்தைத் தடுப்பது சிவப்பு விளக்கு
ஆனால் சிவப்பு விளக்குப் பகுதி
என்றால்?!
பச்சைக்கும்,மஞ்சளுக்கும்,நீலத்துக்கும்
ஆபாசத்துக்கும் என்ன தொடர்பு?
நிறத்திற்குள் குணத்தை அல்லவா பொருத்திவிட்டார்கள்
பதிலளிநீக்குதம 2
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஐயா இந்த வண்ணங்களுக்கும் ஆபாசத்திற்கும் எந்த தொடர்பில்லை. கருப்புக் கண்ணாடியை அணிந்து பார்த்தால் எல்லாம் கருப்பாக தெரிவதுபோல் யாரோ சிலரின் மாறுபட்ட எண்ணத்தில் தோன்றியவை இவை என எண்ணுகிறேன்.
விடை : எந்த நிறத்துடன் எந்த நிறம் கலந்தால் எந்த நிறம் கிடைக்கும்...?
பதிலளிநீக்குவண்ணங்களுக்கும் ஆபாசத்திற்கும் என்ன சம்பந்தம் எனக்கும் புரியவில்லை!
பதிலளிநீக்கு