சனிக்கிழமை என்பது வாரநாட்களில்
வெள்ளிக்கிழமைக்குப் பின்னும் ,ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னும் வரும் தினம்!
நறநற எனப் பல்லைக் கடிக்கும் சப்தம்
கேட்கிறதே!
அய்யன்மீர்!இது நான் சொல்வதல்ல.
சனி வாரத்தின் கடைசி நாளா?கடைசி
நாளுக்கு முந்திய நாளா?
நாம் உபயோகிக்கும் கேலண்டர்களின் படி ஞாயிறு
முதல் நாள்;சனிக்கிழமை கடைசி நாள்.
ஆனால் iso 8601 இன் படி
திங்கள் முதல்நாள்.எனவே சனி வரத்தின் கடைசி நாளுக்கு முந்திய நாள்.
சனிக்கிழமைக்குப் பல சிறப்புகள் உண்டு.
பல அலுவலகங்களுக்கு சனி ஞாயிறு விடுமுறை
இருந்தாலும்,நிச்சயமாக எல்லா அலுவலகங் களுக்கும் ஞாயிறு விடுமுறை.
எனவே சனியன்று இரவு கட்டவிழ்த்து விட்டது
போன்ற ஒரு உணர்வில் இருப்பார்கள் எல்லோரும்.
சனிக்கிழமை இரவு என்பது விசேடமான இரவு.
பார்களில், டிஸ்கோதேகளில்,களியாட்ட
இடங்களில் கூட்டம் அலைமோதும்.
சனிக்கிழமை இரவு காய்ச்சல் என்று அழைக்கப்படும் அளவுக்கு ஒரு காய்ச்சலான
உற்சாகம் நிரம்பியிருக்கும்.
என் தோழர் ஒருவர் இருந்தார்.
அவர் சொல்வார்”சனி நீராடு என்று
சொல்வார்கள்;எனவே நான் சனிக்கிழமைகளில் நீராடத் தவறுவதில்லை”என்று.
ஆனால் அவர் நீராட்டம் காலையில்
அல்ல.இரவில்.
மூன்று பெக்கில் நீராட்டம்,பக்க உணவுகளுடன்.
சனி நீராடு என்றால் சனியன்று எண்ணெய்
தேய்த்துக் குளிப்பது என்பதல்ல பொருள்.
குளிர்ந்த நீரில் குளி என்பது ஒரு
பொருள்
அதிகாலை நீராடு என்பது ஒரு பொருள்.
இப்போதெல்லாம் சனியன்று எண்ணெய் தேய்த்துக்
குளிக்கும் பழக்கம் அற்றுப் போய் விட்டது.
நான் சென்னையில் கல்லூரி விடுதியில்
இருந்த நாட்களில் சனியன்று எண்ணெய்க் குளியல் நிச்சயம் உண்டு.
பட்ட மேற்படிப்பு மாணவர்களான எங்களைத்
தவிர மற்றவர்களுக்குக் கல்லூரி உண்டு
எனவே விடுதியில் நாங்கள் மட்டுமே.
அமர்க்களம் செய்த படி குளிப்போம்.
விடுதியில்.சனி இரவுதான் சுதந்திர இரவு;
அன்றுதான் நாங்கள் சினிமா செல்ல முடியும்.
ஆக சனி என்பது ஞாயிறை வரவேற்கும் ஒரு தினம்.!
ஜோதிடத்தில் இதன் நாயகன் சனீஸ்வரன்.
அவனைச் சனைஸ்சரன் என்றும் சொல்வர்
வட மொழியில் சனை:சர:என்றால் மெள்ளச் செல்பவன்
.
ஏனென்றால் அவன் முடவன்.மந்தன்
எனவே ஒரு ராசியிலிருந்து அடுத்த
ராசிக்குச் செல்ல அவன் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறான்.
யாரையாவது .எதையாவது திட்ட
வேண்டுமென்றால்”சனியன்” என்று திட்டுகிறோம்
ஒரு அரேபிய பழமொழி
சொல்கிறது”சனிக்கிழமைக்குப் பின் ஞாயிறு நிச்சயம்”
ஆம்.ஒருவரது செயல்களின் விளைவு சனிக்குப்
பின் ஞாயிறு வருவது போல் நிச்சயமானது!
இந்த சனி இரவு நல்லிரவாக இருக்கட்டும்!
செயல்களின் விளைவு சனிக்குப் பின் ஞாயிறு வருவது போல் நிச்சயமானது!
பதிலளிநீக்குஅருமை ஐயா
தம 2
#ஆனால் அவர் நீராட்டம் காலையில் அல்ல.இரவில்.#
பதிலளிநீக்குஇரவில் மட்டும்தான் என்று எதுவும் வேண்டிக்கிட்டிருக்காரோ :)
த ம 3
சனி முடிந்ததும் ஞாயிறு ஒளிரட்டும் ஐயா....
பதிலளிநீக்குத.ம.4
அனைவருக்கும் நல்லிரவாக அமையட்டும் ஐயா...
பதிலளிநீக்குஅருமை...
த,ம. 4
Satruday - Waterday...?
பதிலளிநீக்குபுதிய தகவல்களை தந்தமைக்கு நன்றி! உரோமானிய வேளாண்மைக் கடவுளான சாட்டர்னஸ் நினைவாக சனி எனப் பெயரிடப்பட்டது என்றும் சொல்வார் உண்டு. நான் ஏன் வேளாண்மைக் கடவுள் பற்றி சொல்கிறேன் எனத் தெரிகிறதா?
பதிலளிநீக்குசனி பற்றிய இத்தனை தகவல்கள்! :) நன்றி.
பதிலளிநீக்கு