”என்ன.கிஷோர்?என்ன ஒரே பரபரப்பாக இருக்கிறது?”
கிளையின் கடைநிலை ஊழியரைக் கேட்டேன்.
“சார்.ஒரு பெண்ணை வயக்காட்டில கற்பழிச்சுக்
கொன்னிருக்கான் ஒருத்தன்.அவனைகண்டு பிடிச்சுக் கைது பண்ணீட்டாங்க!அதுதான் ஊரெல்லாம் பரபரப்பு.”
’அப்படியா ?
”சரி வேலையை ஆரம்பிக்கலாம்.நீபோய்
நான் நேற்றுப் பார்த்துக் கொண்டிருந்த கடன் ஆவணங்களையும்,புத்தகத்தையும்
கொண்டு வா.ஆய்வைத் தொடங்கலாம்”
ஆண்டு 1992.
இடம் ஹரியானா மாநிலத்தில் சாயின்ஸா என்ற
கிராமம்.
எங்கள் வங்கிக் கிளை ஆய்வுக்காகச் சென்றிருந்தேன்.
ஃபரிதாபாத்தில் என் அலுவலகம்.அதன் கீழ்
வரும் கிராமங்களில் இருந்த கிளைகளை ஆய்வு செய்வது என் பணி.
எனக்கான அட்டவணை தில்லி அலுவலகத்திலிருந்து
வரும்.
அதன் படி நான் ஆய்வு நடத்த வேண்டும்.உதவிக்கு ஒரு அதிகாரியும். வருவார்.
தினம் காலை ஃபரிதாபாத்திலிருந்து புறப்பட்டு,
கிளை இருக்கும் ஊருக்கு பஸ்ஸில் சென்று தினமும் வேலை முடிந்த பின் ஃபரிதாபாத்
திரும்பி வரவேண்டும்..
மிகவும் சோர்வு தரும் பணிதான்;அதுவும்
குளிர் நாட்களில்,....?!
அதைப்பற்றி எல்லாம் இன்னொரு பதிவில்
பார்க்கலாம்.
இப்போது சொல்லத் தொடங்கிய செய்திக்கு வரலாம்.
நான் பணியில் ஈடுபட்டிருந்த நேரம்.
மதிய உணவு இடைவேளைக்குப் பின்.
வெளியில் டமாரச் சப்தம்,மக்களின்
பேச்சுக் குரல் எல்லாம் கேட்டது.
கிஷோர் வந்து எல்லாரையும் வெளியே வந்து
பார்க்கச் சொன்னார்,
ஒரு திறந்த ஜீப்பில்.அந்தக்
குற்றவாளியை விலங்குடன் நிறுத்தி உடல் முழுதும் கரும் புள்ளிகள் குத்தி,அவன் கழுத்தில்
”நானொரு கொலைகாரன்;கற்பழிப்பவன்” என்றெழுதிய அட்டையை மாட்டிக் காவல் துறையினர் ஊர்வலமாக
அழைத்துச் சென்றனர்.
இது போன்ற ஒரு நிகழ்வை நீங்கள் அது
போன்ற இடங்களில்தான் பார்க்க முடியும்.
அதைப் பார்த்த பின் என் மனத்தில் எழுந்த
கேள்வி”அவன் குற்றம் சாட்டப்பட்டவன்தான்; இன்னும் வழக்கு நடந்து குற்றவாளி என
நிரூபிக்கப்படாதவன்.அந்நிலையில் காவல் துறையின் செயல் சரியா.?
வழக்கு நடக்கும்போது
அவன் சார்பாக வாதாடும் வழக்கறிஞர் இந்நிகழ்வை எந்த விதத்திலாவது அவனுக்குச்
சாதகாமாக்க முடியுமா?’
விடை தெரியவில்லை.
ஒன்று நிச்சயம்
அவர்கள்(காவல்) செயல் இதயத்தால்
தீர்மானிக்கப்பட்டது;தலையால் அல்ல!
அவன்தான் குற்றவாளி என்று உறுதியாக தெரிந்து இருக்கும் பட்சத்தில் ,இதயத்தால் தீர்மானிக்கப் பட்ட இந்த தண்டனை சரிதான் !
பதிலளிநீக்குத ம 2
வணக்கம்
பதிலளிநீக்குயா
கதை நகர்வு அருமையாக உள்ளது.. பகிர்வுக்கு நன்றி. தொடர்கிறேன். த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஒருவேளை அவன் குற்றவாளி இல்லையென்றால் ? இதற்க்கு பரிகாரம் ?
பதிலளிநீக்குஐயா எனது புதிய பதிவு மோதகமும், அதிரசமும்.
அவனே குற்றத்தை ஒத்துக் கொண்டிருப்பான் என்று நினைக்கிறேன் பித்தன் ஐயா.
பதிலளிநீக்குஅருணா செல்வம் கருத்து ஆமோதிக்கத் தக்கதாய் இருக்கிறது. எனில், பகவான்ஜியின் கருத்தோடு உடன்படுகிறேன்.
பதிலளிநீக்குசட்டத்தால் ஒருவனை தண்டிக்க பல ஆண்டுகள் ஆகலாம் என்பதால் அப்படி செய்திருப்பார்கள் என எண்ணுகிறேன். அவன் குற்றவாளியே ஆனாலும் நீதித்துறையின் பணியை காவல் துறை செய்தது சரியல்ல.
பதிலளிநீக்குகுற்றம் உறுதியானால்
பதிலளிநீக்குதண்டனை பொருத்தமே
தம 7
பதிலளிநீக்குஹரியானா - அங்கே நடக்கும் சில நம் ஊரில் நடக்கவே நடக்காத விஷயங்கள் - காப் பஞ்சாயத் சொல்வது தான் சட்டம்! இப்போதும் இப்படி சில விஷயங்கள் இங்கே உண்டு. அது பற்றி பதிவாக எழுத நினைத்திருக்கிறேன் - எழுதுவேன் விரைவில்!
பதிலளிநீக்குமனச்சாட்சி ஒரு நாள் கொல்லும்....!
பதிலளிநீக்குஎன்னைப் பொறுத்தவரை இவ்வாறு முன் கூட்டியே செய்வதுசரியல்ல என்பதே ஆகும்!
பதிலளிநீக்குநிரூபணமாகாத பட்சத்தில் சென்ற மானத்தை திருப்ப முடியாது....ஆகிவிட்டால் இதைவிட தண்டனை கொடூரமாக இருக்க வேண்டும் நன்றி......
பதிலளிநீக்குவட இந்தியாவில் எல்லாமே உணர்ச்சி வேகத்தில்தான் போல!
பதிலளிநீக்குஅருமை ஐயா.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
வணக்கம்!
பதிலளிநீக்குஅன்புமனம் பொங்கட்டும்! பண்புமனம் பொங்கட்டும்!
இன்பமனம் பொங்கட்டும் இன்றமிழாய்! - மன்பதையில்
நன்மனிதம் பொங்கட்டும்! நல்லறங்கள் பொங்கட்டும்!
பொன்னமுதம் பொங்கட்டும் பூத்து!
எங்கும் பொதுமை இனிதே மலரட்டும்!
சங்கும் முழங்கட்டும் சால்புகளை! - மங்கலமாய்த்
தங்குகவே இன்பம்! தனித்தமிழ் நற்சுவையாய்ப்
பொங்குகவே பொங்கல் பொலிந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதை பிறந்தாச்சு
பதிலளிநீக்குஉலகெங்கும் தமிழ் வாழ
உலகெங்கும் தமிழர் உலாவி வர
வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!
இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் ஐயா.....!
பதிலளிநீக்கு