சாருக்கு
என்ன வேணும்?
இட்லி
வடகறி குடுப்பா
சார்
இன்னிக்கு ஸ்பெசல் சட்னி இருக்கு சாப்பிட்டுப் பாருங்க.
அதென்னப்பா
ஸ்பெசல் சட்னி?
சத்திஸ்கரிலிருந்து
புதுசா ஒரு சமையல்காரர் வந்திருக்காரு;அவரோட விசேட தயாரிப்பு
சரி
கொண்டு வா
ஒரு
தட்டு இட்லி சட்னியுடன் வருகிறது.ஒரு விள்ளல் எடுத்துச் சட்னியில் தோய்த்து
நாக்கில் வைக்கும்போதே வித்தியாசமான ஒரு சுவை சப்புக் கொட்ட வைக்கிறது.
இன்னொரு
தட்டு இட்லி சட்னி கொண்டாப்பா.
சாப்பிட்டாகி
விட்டது.
என்ன
சட்னிப்பா இது.
பச்ச
மொளகா.இஞ்சி,பூண்டு,தக்காளி எல்லோத்தோடயும்,ஒரு ஸ்பெசல் பொருள் வச்சு அறைக்கணும்.
அது
என்ன?
இநதச்
சிவப்பு எறும்பு இருக்கில்ல.அதனோட புத்தைத் தோண்டி அதனோட கூடு ,முட்டை எல்லாத்தையும்
எடுத்து மசாலாவோட சேத்து வச்சு அறைக்கணும் அதுதான் ரகசியம்!
வாடிக்கையாளர்
கைகழுவுமிடம் நோக்கி ஓடுகிறார்!
இது
உண்மை.
சத்திஸ்கரைச் சேர்ந்த ஒரு பழங்குடியினர் விசேட நாட்களில் இந்தச் சட்னியைச்
செய்கின்றனர்.
இது
ஒரு உதாரணம்
இன்னும்
எத்தனையோ?
பெல்ஜியத்தில் கேரட்,தக்காளியுடன் புழுவும் சேர்த்து அரைத்த ரொட்டிக்கான பூச்சு.
வெட்டுக்கிளி டேகொ(இது என்ன வோ.தெரியவேண்டும் எனில் விக்கிபீடியா பாருங்க)
பட்டுப் புழு சூப்.
இப்பூச்சிகளில் பலவ்ற்றில் புரதச் சத்து அதிகமாக உள்ளதாம்
உணவுத் தட்டுப்பாடு அதிகமானால் பூச்சிகள்தான் துணை
இன்று உணவை அழிக்கும் பூச்சிகளே நாளை உணவாகும்!
துப்பாயதூ உம் பூச்சி!
(நன்றி:டைம்ஸ் ஆஃப் இந்தியா)
ஐயா காலை வேளையிலேயே வயிற்றைக் கலக்கும் தகவல்களை தருகிறீர்களே! இனி உணவகத்தில் சிறப்பு சட்னி என்றால் சட்டீஸ்கர் சட்னி அல்லவா நினைவுக்கு வரும்?
பதிலளிநீக்குதேங்கய்ச் சட்னி என்றே கேட்போமாக!
நீக்குநன்றி
எதையும் விட்டு வைக்காது - நாக்கு...!
பதிலளிநீக்குசரிதான்.
நீக்குநன்றி
சட்னி சட்டுன்னு கேட்க தயங்கவைத்த தங்கள் நகைச்சுவை விளை நிலங்கள் விலை நிலங்கலானால் இந்த பூச்சியும் சிட்டுக்குருவி ஆகிவிடும். திண்டாட்டம் தான் . வீடுகள் நோட்டுகள் ஆனால் உணவு ?
பதிலளிநீக்குசரியான கேள்வி சார்.
நீக்குநன்றி
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
அறிந்தேன்.... பகிர்வுக்கு நன்றி
த.ம4
நன்றி ரூபன்
நீக்குநான் சமீபத்தில் மணி சென்றபோது அங்குள்ள உணவு முறையைப் பார்த்த போது வெளியில் காபி மட்டுமே குடிக்க முந்தது!
பதிலளிநீக்குகடினம்தான்
நீக்குநன்றி ஐயா
இனி வெளியில் எங்கு சென்றாலும் சாப்பிடும் எண்ணம் வராது போல..
பதிலளிநீக்குவீடிருக்க வெளியெதற்கு?
நீக்குநன்றி சசிகலா
ஐயையே....!
பதிலளிநீக்கு:)))))))
:))
நீக்குநன்றி ஸ்ரீராம்
ஐய்யயோ... இதிலெல்லாம் சாப்பிடும் ஐயிட்டமா?
பதிலளிநீக்குஅடடா! இனிமே சட்னின்னு சொன்னாலே யோசிக்கணும் போலிருக்கே!
பதிலளிநீக்குஉண்மையைச் சொல்லுங்கள் தாத்தா.....
பதிலளிநீக்குஅந்தச் சட்னியை நீங்கள் தானே சாப்பிட்டீர்கள்?