தொடரும் தோழர்கள்

புதன், ஜனவரி 21, 2015

திருமண வரவேற்பும்,விருந்துச் சாப்பாடும்(நிறைவுப்பகுதி)



வீட்டை விட்டுக் கிளம்பும் முன்பே தன் தோற்த்தைக் கொஞ்சம் மேம்படுத்திக் கொண்டி
ருந்தான்.

நல்ல காற்சட்டை,சட்டை அணிந்து மசூதி பக்கத்துக் கடையில் வாங்கிய ஃபிர்தூஸ் வாசனைத் திரவியத்தைக் கொஞ்சம் தடவிக் கொண்டிருந்தான்.

இப்போது மணமணக்க மண்டப வாசலில் நின்றான்.

அந்த மண்டபத்தின் தரைத் தளத்தில் உணவுக்கூடம்,முதல் மாடியில் திருமணக் கூடம்.

மண்டப வாசலிலிருந்து பார்த்தாலே உவுக் கூடம் தெரியும்.

அவன் அதை நோக்கி நடக்கும்போதே உணவுப் பந்தி தொடங்கிவிட்து என்பதைக் கவனித்தான்.

பலர் உள்ளே போய்க்   கொண்டிருந்தார்கள்

இவனும் நேராகச் கூட்த்தோடு கூட்டமாய் உள்ளே சென்று  ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

வழக்கம்போல் பல உணவுப் பொருட்கள் ஏற்கனவே பரிமாப்ட்டுத் தயாரா இருந்தன..

மற்ற உணவுகள் வரிசையாக ஆரம்பித்தன.

ம் அவன் பசியை அதிகமாக்கியது ;சாப்பித் துவங்கினான்.

நல்ல ருசி;ரசித்துச் சாப்பிட்டான்.

எல்லாரையும் விசாரித்தபடி வந்தவர்,மேற்பார்வையாளராக இருக்க வேண்டும்,இவன் எதிரில் வந்தும் “எல்லாம் பிரமாதம்;அதிலும் பன்னீர் பட்டர் மசாலா சூப்பர்” என்றான்

அவர் உடனே பரிமாறும் ஆளை அழைத்து இன்னும் ஒரு சப்பாத்தியும் ,சப்ஜியும் போடச் செய்தார்.

நன்கு வயிறு புடைக்கச் சாப்பிட்டு முடித்தான்.

வெளியே வந்தான்.

வாசலில் பனிப்பாகும்,இனிப்பும் தயாராக இருந்தன.

இரண்டு குலாப்ஜாமுனும் பனிப்பாகு ஒரு கிண்ணமும் வாங்கிக் கொண்டான்.

கரண்டியில் கொஞ்சம் இனிப்பும் பனிப்பாகும் சேர்த்து வாயில் இட்டவுடன்,அந்த இனிப்பும் குளுமையும் கலந்த சுவை அவனுக்குச் சுகமாக இருந்தது.

முடித்தவுடன் ஒரு பீடா போட்டுக் கொண்டான்.

பக்கத்தில் நாற்காலியில் வைத்திருந்த பொட்டலத்தை எடுத்துக்  கொண்டான்,ஏதோ வேலையாக வெளியே போவது போல் சென்று விடலாம் என அவன் நகரத்தொடங் கும்போதுதான் கவனித்தான்,அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த அந்த நபரை.

அவனுக்குத் ’திக்’ கென்றது.

குட்டு வெளிப்பட்டு விட்டதோ?

மேலே போவது போல் போக்குக்காட்டலாம் என எண்ணி மேலே போகும் படிகளை நெருங்கினான்.

“ராமனாதன்”

பின்னாலிருந்து குரல் அழைத்தது

திடுக்கிட்டுத் திரும்பினான்.

அந்த நபர்தான் அழைத்தவர்.

அருகில் வந்தார்”என்ன முழிக்கறே!யாருன்னு தெரியலியா.உன்னோடு பள்ளியில் படித்தவன்.குமார்”

அவனுக்கு லேசாக நினைவுக்கு வந்தது.

அவன் தொடர்ந்தான்”தம்பி கல்யாணத்துக்கு பழைய நன்பர்களையெல்லாம் அழைக்க
வேண்டும் என எண்ணினேன்.சண்முகம் சொன்னான் நீ சென்னையில் இருப்பதாக.ஆனால் விலாசம் தெரியவில்லை.பரவாயில்லை.எப்படியோ நீயே தெரிந்து கொண்டு வந்து விட்டாய்.ரொம்ப சந்தோசம்.வா போகலாம்.”

ராமனாதனின் கையைப் பிடித்தபடி ஏதோ பேசிக்கொண்டே அவன் மாடி நோக்கிப் புறப்பட்டான்.

படி ஏறும்போது ராமனாதனின் கால்கள் பின்னின!

அவன் கையில் இருந்த காலிப் பரிசுப் பொட்டலம் மிகக் கனமானதாக இருந்தது!

டிஸ்கி:இது ஓர் இருத்தலியல் வகையைச் சேர்ந்த கதை என நான் சொன்னால் மறுக்கவா போகிறீர்கள்?!


15 கருத்துகள்:

  1. ஆஹா....சுவரஸ்யமான கதை. பாவம் பெயர் எழுதி மாட்டிக் கொண்டான். தன் வினை தன்னைச்சுடும் அல்லவா. தம 2

    பதிலளிநீக்கு
  2. அஹா... அருமையான கதை ஐயா...
    பாவம் காலி பரிசுப் பெட்டியோடு மாட்டிக்கிட்டான்...

    பதிலளிநீக்கு
  3. நல்ல கதை. மாட்டிக் கொண்டு விடுவாரே! :(

    பதிலளிநீக்கு
  4. ஓர் இருத்தலியல் வகை மட்டுமில்லை ,பின் நவீனத்துவ கதையும் கூட ...எப்படி என்று மட்டும் கேட்டுறாதீங்க:)
    த ம 4

    பதிலளிநீக்கு
  5. அது என்னங்க, இருத்தலியல் - பின்நவீனத்துவம். இதையெல்லாம் நான் படிக்கறப்ப தமிழ் வாத்தியார் சொல்லிக் கொடுக்கலியே?

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    ஐயா.

    கதை நன்றாக உள்ளது.. படித்து இரசித்தேன் ஐயா. பகிர்வுக்கு நன்றி த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. எதிர்பார்க்காத முடிவு. இது இருத்தலியல் (Existentialism) கதையா எனத் தெரியவில்லை. ஆனால் இது போன்ற கதைகள் எங்களை தங்கள் பதிவில் இருத்தும் இயல் கொண்டவை எனத் தெரியும்!

    பதிலளிநீக்கு
  8. க்ளைமேக்ஸ்ல அசத்திட்டீங்க! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. ஐயோ பாவம் ராமா...... நாதா.....
    தமிழ் மணம் 12

    பதிலளிநீக்கு
  10. வித்தியாசமான சுவையான கதை.

    வாசிப்பு வெகு சுகமாக இருந்தது.

    பதிலளிநீக்கு