தொடரும் தோழர்கள்

சனி, ஜனவரி 10, 2015

உணவும் உணவு சார்ந்த இடமும்--நெய் சொட்டும் பொங்கல்!



எனக்கு வேதம் சொல்லிக் கொடுத்த குரு ஒருவர் இருந்தார்.

அவர் சாப்பாட்டு ராமர் அல்ல.

ஆனால் சாப்பாட்டில் ரசனை உள்ளவர்.

இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்று கேட்கிறீர்களா?

சாப்பாட்டு ராமன் என்றால் நன்கு வயிறு முட்டச் சாப்பிடுபவன்.அவனுக்கு வயிறு நிறையச் சாப்பிட வேண்டும்;ருசி பற்றிக் கவலை இல்லை.

ஆனால் சாப்பாட்டில் ரசனை  உள்ளவன்.  உண்ணும் அளவு குறைவாக இருந்தாலும் உண்பதை ரசித்து உண்பவன்.

நல்ல உணவைத் தேடி உண்பவன்.

நம் பதிவர்களில் பலர் இருக்கிறார்கள்

சாப்பாட்டு ரசிகர்கள்.

அவர்கள் சாப்பிட்டு ரசித்துப் பரிந்துரை செய்யும் உணவகங்களுக்கு நீங்கள் துணிவுடன் செல்லலாம்.

திருப்தி நிச்சயம்.

அது போல்தான் என் குருவும்.

ஆனால் மனைவி இறந்த பின் மகன்களோடு வாழ்ந்தவருக்கு நல்ல உணவு கிடைக்காதது மட்டுமல்ல,வயதான காலத்தில்  சரியான நேரத்துக்கு  உணவு கிடைக்காமல் போனதும் வருத்தும் உண்மை

அவர் ரசிகர் மட்டுமல்ல;நன்கு சமைக்கவும் தெரிந்தவர்

எனவே யாரும் இல்லாத நேரத்தில் அவரே விசேட உணவு ஏதாவது கொஞ்சமாகச் சமைத்து உண்பார்.

அவரைப் பற்றி இவ்வளவு ஏன் சொன்னேன்?

சொல்ல வந்ததே வேறு.

அவர் சொல்வார்”சர்க்கரைப் பொங்கல் பண்ணினால் அந்தப் பாத்திரத்தைக் கொஞ்சம் சாய்த்து வைத்தால் அதிலிருந்து நெய் டொக் டொக் என்று சொட்ட வேண்டும்”

இந்த்த் திருப்பாவைப் பாடலைப் பாருங்கள்

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

இதில் கவனிக்க வேண்டிய வரி ” பாற் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்”


பாற்சோறு(அக்கார அடிசில்) மறையுமாறு அதன் மீது நெய் ஊற்ற வேண்டும். சாப்பிடும்போது அந்த நெய் வழிந்து முழங்கையெல்லாம் ஒழுக வேண்டும்

இதுதான் என் குரு சொன்னதும்.

இப்பாடல் திருப்பாவையின் 27 ஆவது பாடல். நாளை இப்பாடலுக்கான நாள்.கூடாரைவல்லி எனப் பெயர் பெற்ற நாள்.

ஆனால் பாட்டில் கூறியது போல் இன்று நெய் வழிய சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது என்பது நடக்காது.இன்றைய விலை வாசியில் கட்டுப்படியாகாது என்பது ஒரு புறம் இருக்க,நமது உடல் நிலையும் அதற்கு இடம் கொடுப்பதில்லை.  

பெரும்பானமையானவர்களுக்குச் சர்க்கரை வியாதி;சர்க்கரைப் பொங்கலை வளைத்துக் கொண்டு சாப்பிட முடியாது.அது தவிர ,உயர் ரத்த அழுத்தம்,கொலஸ்டரால் எல்லாம்.நெய் பெய்து முழங்கை வழி வாரஎனபதை நினைத்துகூடப் பார்க்க முடியாது.சம்பிரதாயத்துக்கு ஏதோ இனிப்பு குறைந்த,நெய்யில்லாத பொங்கல் சாப்பிட வேண்டியதுதான்.

எங்கள் காலனியில் மிகவும் சம்பிரதாயமான ஒரு வீட்டிலிருந்து கொஞ்சம் பொங்கல் நாளை வீடு தேடி வந்து விடும்

ருசிக்குத்தானே அது பசிக்கல்லவே!



11 கருத்துகள்:

  1. பசிக்குச் சாப்பிடுவதை விட ருசித்துச் சாப்பிடுவதுதானே சிறப்பு ஐயா...

    பதிலளிநீக்கு
  2. எந்தக் காலத்திலேயும் இது போல உண்ண விலைவாசியும் உடல் நிலையும் தடையாக இருந்திருக்குமென்று தோன்றுகிறது. ராஜாக்களுக்கு வசதிப்பட்டிருக்கலாம். படிக்க சுவையாகவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. ஆஹா ..பொங்கல் பெருநாளை நினைவில் நிறுத்தி விட்டீர்கள் இன்றே
    இனிக்கும் பகிர்வு தந்து !கூடவே நல்லா சக்கர போட்டு நெய் ஊத்தி உங்கள்
    பேத்திக்கும் அனுப்பி வையுங்கள் எங்கள் செல்லத் தாத்தாவே .

    பதிலளிநீக்கு
  4. உடல் நிலை இடம் கொடுக்கா விட்டாலும் மன நிலை இடம் கொடுத்து திருப்தி (?) அடைகிறதே ஐயா...

    பதிலளிநீக்கு

  5. பொங்கல் பற்றிய தகவல்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
    படித்துப் பாருங்களேன்!

    பதிலளிநீக்கு
  6. சர்க்கரைப் பொங்கல் எப்படி இருக்கவேண்டும் திருப்பாவை சொல்லிவிட்டது.

    பதிலளிநீக்கு
  7. சர்க்கரைப் பொங்கல் பற்றி எழுதி நீரிழிவுக்காரர்களின் ஆசையைத் தூண்டிவிட்டீர்கள். நீங்கள் எப்போது சர்க்கரைப் பொங்கல் பற்றி எழுதினாலும் உடனே அதை சாப்பிடத்தூண்டுகிறது. அத்தனை சுவையாக இருக்கிறது உங்கள் பதிவு. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. #நெய் வழிய சர்க்கரைப் பொங்கல்#
    இது மாதிரிதானா சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்தது என்று சொல்வதும் ?:)
    த ம 7

    பதிலளிநீக்கு
  9. முன்பு சாப்பிட்டதை நினைத்து இன்று திருப்தி அடைவேண்டியதுதான். அருமையாக எழுதி இருக்கிறிர்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  10. கூடாரை வல்லி தினத்திற்கு ஏற்ற பதிவு! ஒருநாள் கொஞ்சம் ருசிக்காக நிறைய வெல்லம் நெய் ஊற்றி சிறிது உண்பதில் உடல் கெட்டுவிடாது என்று தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
  11. பரவாயில்லை! நீங்கள் கொடுத்து வைத்தவர்!

    பதிலளிநீக்கு