சார்! எப்படியிருக்கீங்க?
“நலம்தான்?நீங்க எப்படி இருக்கீங்க?
சந்தித்துப் பேசும் இருவர் கைகுலுக்கி
நலம் விசாரிக்கிறார்கள்.
தலைநகரில் இது ஒரு அன்றாட நிகழ்வு.காலை
அலுவலகம் வந்ததும்.ஒவ்வொருவரும் மற்றவர்ளைச் சந்தித்துக் கைகுலுக்கிக் குசலம்
விசாரித்து விட்டுப் பின்னரே இருக்கைக்குச் செல்வர்.
எப்படி ஏற்பட்டது இக்கைகுலுக்கும்
பழக்கம்?
இது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே
தோன்றியதாம்.
இங்கிலாந்து நாட்டில்.
தம் கையில் எந்த ஆயுதமும் இல்லை என்று
காட்டுவதற்காக!
மற்ற கையில் இருந்தால்?
வழக்கமாகச் செயலுக்குப் பயன் படுத்தும்
கையைத்தானே கைகுலுக்கவும் பயன்படுத்துவர் ,அதனால் இருக்கலாம்!
ஏனெனில் கும்பிடும் கை உள்ளே கூட ஆயுதம்
இருக்கக்கூடும்.
இது சரித்திர நிகழ்வுகள் நமக்கு
உணர்த்திய உண்மை.
இதையே வள்ளுவர் கூறுகிறார்
”தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ’
முன்னர் தும்மல் பற்றிப் பார்த்தோம்.
அதில் தானாக வரும் என ரஜினி சொல்லும்
மற்றொரு செயல் கொட்டாவி.
கொட்டாவி வரும்போதுமேலை நாடுகளில் வாயை மறைத்துக்
கொள்ளும் பழக்கம்17 ஆம்
நூற்றாண்டிலே ஏற்பட்டதாம்.கொட்டாவி விடும்போது தீய சக்திகள்
வாய்வழியாக உள்ளே நுழைந்து விடாமல் இருப்பதற்காக அவ்வாறு செய்தார்களாம்
(மூட நம்பிக்கைகள்
எங்குதான் இல்லை!)
நம் நாட்டில் திறந்த வாய் முன் சொடக்குப் போட்டுக் கொள்வார்கள்(சுடோகு இல்லை!)
ராமருக்குப் பணிவிடை செய்வதற்கு எல்லோரும்
ஒவ்வொரு வேலையாகப் பிரித்து எடுத்துக் கொள்கிறார்கள்.கடைசியாக அனுமாரிடம்
வரும்போது எந்த முக்கிய வேலையும் இல்லை.அனுமார் சொல்கிறார்”ஐயனே!நீங்கள் கொட்டாவி விடும்போதெல்லாம்
உங்கள் வாய்முன் சொடக்குப் போடும் பணியை எனக்குத் தாருங்கள்”
எப்போதும் ராமன் முன் அமர்ந்து அவன்
முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் பணியைத் தன் சாமர்த்தியத்தால் பெற்று
விட்டான் சொல்லின் செல்வன்.
தூக்கம் வந்தால் கொட்டாவி வரும்.
உடல் சோர்வடைந்தால் கொட்டாவி வரும்
யாராவது அறுத்தால்(!) கொட்டாவி வரும்!
இப்போது கொட்டாவி வருகிறதா?
கொட்டாவியில் இவ்வளவு சங்கதி இருக்கா ?
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு//யாராவது அறுத்தால்(1) கொட்டாவி வரும்!//
ஒரு தடவை அறுத்தாலா?
தங்கள் பதிவு படித்தால் சுறுசுறுப்பல்லாவா வருகிறது.
சுவையான செய்திப் பகிர்வு! கொட்டாவி இதற்கெல்லாம் வராது! தொடருங்கள்!
பதிலளிநீக்குஆஅவ்வ் .. :)
பதிலளிநீக்குசிறப்பான ஆராட்சி !தொடருங்கள் தாத்தா அடுத்த சுவையான ஆக்கத்தையும்
பதிலளிநீக்குகாணக் காத்திருக்கிறோம் கொட்டாவி வரவே இல்லை :))என் தளத்தில் ஒரு
வெண்பா மாலை காத்திருக்கிறது நீங்கள் அதையும் படித்து விட்டு கொட்டாவி
வந்ததா இல்லையா என்பதைத் தெரிவியுங்கள் நிட்சயம் வரும் என்றே நம்புகின்றேன்
தாத்து :))))
கை குழுக்கள் பதறிய சுவையான தகவல்கள். கொட்டாவி விடும்போது கொசு உள்ளே போகாமலிருக்கவும் வாய் நாற்றம் அருகிலிருப்போரை பாதிக்காமல் இருக்கவும்தான் கையை வைத்து மறைக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வேன்.
பதிலளிநீக்குசுவையான பதிவு.
இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி பகிர்ந்துள்ளேன்
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.in/2015/01/4.html
முடிந்தால் பார்த்து கருத்திடுங்களேன்.
சுவாரஸ்யமான தகவல்கள் ஐயா...
பதிலளிநீக்குவந்த கொட்டாவியும் போய் விட்டதே :)
பதிலளிநீக்குத ம 7
எனக்கு தூக்கமே வந்துவிட்டது....நன்றாக இருந்தது விளக்கம் நன்றி ஐயா........
பதிலளிநீக்குஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் இருக்கிறது....
பதிலளிநீக்குஅறிந்துக்கொண்டேன் பித்தன் ஐயா.
அன்புடையீர்! வணக்கம்!
பதிலளிநீக்குஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (25/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE