மாரன் என்பது மன்மதனைக் குறிக்கும். அவனது வேறு பெயர்கள், உருவிலாளன், கரும்புவில்லி, , புட்பரசன், மகரக்கொடியோன், மதனன், வசந்தன், வேனிலான், காமன் என்பவை .சாதாரணமாக வழக்கத்தில் இருப்பவை மன்மதன்,காமன் என்பவையே. வேள் என்றும் ஒரு பெயருண்டு. அதன் பொருள் வேட்கையை ஏற்படுத்துபவன்.காமனின் நிறம் கருப்பு. (கருப்பு நிறமுள்ளவர்களே, மகிழ்ச்சியடையுங்கள்,காமனே கருப்புதான்!) முருகனின் நிறம் சிவப்பானதால் அவன் செவ்வேள்.
காமதேவன் அழகு மிகுந்தவன். காதல் தெய்வமெனச் சொல்லப்படுபவன்.
”நெஞ்சில் பாயுது காமன் விடும் பாணம்”
”கண்வழி காமனின் பாணங்கள் பாய்வது
மாலையில் மயங்கிய பொழுது”
என்றெல்லாம் மன்மதனாகிய மாரனின் பாணங்கள் பற்றிச் சினிமாப் பாடலகளில் சொல்லியிருக்கிறார்கள்.
அப்படி அவன் பாணம் என்ன?
(அருவா,கத்தி,கோடாரி,ஈட்டி,சூலம்,வேல்கம்பு?!--மனோ மன்னிக்க!)
குத்திக் கிழித்திக்காயப்படுத்தும் பாணமா!
காயம்தான்;ஆனால் சுகமான வலி உண்டாக்கும் காயம்.
அந்த பாணத்தின் சக்தி,மயங்க வைக்கும், தனியே புலம்ப வைக்கும்,உருக வைக்கும்,விரக தாபத்தில் துடிக்க வைக்கும்!.
ரத்த நாளங்களில்லாம் புது ரத்தம் பாயம்.
இதயம் ’காதல் ,காதல்’ என்றே ஒலிக்கும்!
அப்படிப்பட்ட அவன்,ஆயுதங்கள்தான் என்ன?
கரும்பு வில்;வண்டுகளால் தொடுத்த நாண்!
வில்லுக்கான அம்புகள்?
ஐந்து மலர்களே மாரனின் பாணங்கள்.
தாமரை,அசோகம்,மா,முல்லை, நீலோத்பலம் என்பன அம்மலர்கள்
தாமரை மார்பில் தாக்கும்;காதல் போதையை உண்டாக்கும்.
அசோகம் உதடுகளைத் தாக்கிக் காதலிக்காகப் புலம்பச் செய்யும்.
மாம்பூ தலையைத் தாக்கிப் பித்தனாக்கும்-(சென்னை பித்தன் அல்ல,காதல் பித்தன்!)
முல்லை கண்களைத்தாக்கும்;தூக்கம் தொலைக்கும்.
நீலோத்பலம் உடல் முழுவதும் தாக்கி விரக வேதனை ஏற்படுத்தும்.
“தவமிருந்த சிவன் மீது பாணம் தொடுத்ததால்
’தயா’ இன்றி எரித்து விட்டான் முக்கண்ணனும்
ரதி தன்’ நிதி’யான மாரன் உயிர் வேண்ட
பதியான அவன் உயிர் தந்தான் பரமன்.
இதுவே மாரனின் கதை.
ஒரு சித்தர் பாடல்—கொசுறு
“மாமன் மகளோ மச்சினியோ நானறியேன்,
காமன் கணையெனக்கு, கனலாக வேகுதடி,
மாமன் மகளாகி மச்சினியும், நீயானால்
காமன் கணை மூன்றும், கண் விழிக்க வேகாவோ.”
(மன்னிக்கவும்.தலைப்பில் ஒரு எழுத்துப் பிழை நேர்ந்து விட்டது.எல்லாம் வல்லின,இடையினக் குழப்பம்தான்.மா
ரன் என்று எழுதுவதற்குப் பதில்,மா
றன் என்று எழுதிவிட்டேன்.மாறன் என்ற சொல் பாண்டியனைக் குறிக்குமாம்!)