தொடரும் தோழர்கள்

வியாழன், மே 18, 2017

எய்தவன்!

ஒரு பழமொழி....

எய்தவன்  இருக்க அம்பை நோவானேன்?

எந்த அம்பும் தானாகவே வில்லிலிருந்து புறப்பட்டு வந்து தாக்காது

வில்லில் நாணேற்றி அம்பை வைத்து எய்வதற்கு ஒருவன் தேவை.

அவன் எங்கு குறி பார்த்து எய்கிறானோ அங்கு சென்று தாக்கும் அந்த அம்பின் மீது குற்றமிலை.

அம்பினால் தாக்கியவன் மீதே குற்றம்.


ஒரு சிலையிலிருந்து பல சிலிமுகங்கள் எய்யலாம்
(சிலை இது,சிலிமுகம் இவை..வில்லிபாரதம்)

வெறும் ஓசையைக் கேட்டே மிருகம் நீர் குடிக்கிறது என்றெண்ணி அம்பெய்து ஒருவனைக் கொன்று சாபத்துக்கு ஆளானான் தசரதன்..

அவன் மகனோ மறைந்திருந்து அம்பெய்தி மாவீரன் வாலியை வீழ்த்தினான்.

இராமனின் அம்பு ஏழு மரங்களைத் துளைத்துச் செல்லவல்லது.

ஆனால் வாலியைத் துளைக்க இயலாதவாறு மார்பில் தைத்த அம்பை தடுத்து நிறுத்துகிறான் வாலி.

அம்பைப் பிடுங்கிப் பார்க்கிறான்.அம்பை நோவதற்காக அல்ல.

எய்தவன் யாரென்று காண.

அம்பில் ராமன் என்ற பெயரைப் பார்க்கிறான்.

இராமன் 'அவனெதிர் வந்தபோது சொல்கிறான்

வாய்மையும், மரபும், காத்து, மன்
      உயிர் துறந்த வள்ளல்,
தூயவன் மைந்தனே! நீ,
      பரதன்முன் தோன்றினாயே!
தீமைதான், பிறரைக் காத்து, தான்
      செய்தால் தீங்கு அன்று ஆமோ?
தாய்மையும் அன்றி, நட்பும்,
      தருமமும், தழுவி நின்றாய்!


இவ்வாறு உண்மையான அம்பு பற்றி மட்டும் பேசவில்லை இப்பழமொழி

மனிதர்களில் பலர் தங்களுக்குத் தேவையானதைப் பெற,தாங்களே எதிர் நிற்காமல் பிறர் மூலம் செயலைச் செய்ய வைக்கிறார்கள்.

தீங்கு செய்பவன் ஒருவனாக இருக்கலாம்.

ஆனால் பின்னிருந்து இயக்கியவன்,அம்பை எய்தவன் வேறு ஒருவன்.

சூத்திரதாரி1

இச்சொல் நமக்கு நினைவு படுத்துவது கண்ணனை.

அவனை விடப் பெரிய சூத்திரதாரி யார்.?

பார்த்தனுக்கு கர்ணனின் நாகாத்திரத்தால் ஆபத்து.

எவ்வாறு காப்பது ஒரு முறை தப்பித்தாலும் மீண்டும் கன்னன்(கண்ணன் அல்ல)  அதைச் செலுத்துவானாகில் விசயன் மடிவான்

என்ன செய்வது.

குந்தியிடம் கர்ணன் அவள் மகன் என்று சொல்லி அவனிடம் சென்று இரு வரங்கள் பெற்று வரச் சொல்கிறான்.

குந்தி அவ்வாறே செய்கிறாள்

பாண்டவர் பிழைக்க வழி பிறக்கிறது.

இங்கு குந்தி அம்பு;எய்தவன் கண்ணன்

(கர்ணன் படத்தில் இக்காட்சியில் சிவாஜியின் நடிப்பை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை...நடிகர் திலகம்) .

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் அம்புகளால் துன்புறுகிறோம்.

சில நேரங்களில்  எய்தவன் யாரெனத் தெரிகிறது ஆனால் எதுவும் செய்ய இயல்வதில்லை.பல நேரங்களில் யார் என்று தெரியாமலே போகிறது

அம்பை நொந்து கொண்டு விட்டு விடுகிறோம்!

27 கருத்துகள்:

  1. /எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?/

    உண்மைதான். ஆனால் சில சமயங்களில் நீங்கள் கூறியதுபோல் அம்பை எய்தவன் யாரெனத் தெரியாதபோது அம்பைத்தானே நொந்துகொள்ளவேண்டும்.

    ஒருவேளை அம்பை எய்தவன் யாரெனத் தெரிந்தாலும் அவன் சர்வ வல்லமை படைத்தவனாக இருந்துவிட்டால், நமக்கேன் வம்பு என்று அவனை விட்டுவிட்டு அம்பைத்தானே நொந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

    இந்த பதிவில் ‘உள் குத்து’ எதுவும் இல்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்மையில் வெளியான ஒரு படத்தின் பெயர் எய்தவன்.தலைப்புக்காக எழுதிய பதிவு.அவ்வ்ளவே!

      நீக்கு
  2. நல்ல சிந்தனை. இன்றைக்கு 'சிலிமுகம்' என்றால் அம்பு என்று தெரிந்துகொண்டேன்.

    வாழ்க்கையில் அம்புகளால் துன்பப்படுகிறோம். அதை எய்தவன் விதியா அல்லது அதற்குக் காரணமான நாமேவா?

    பார்த்தறியா மாந்தர்களை, இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்று தன் நடிப்பால் ரசிகர்களை நம்பவைத்தவர் நடிகர்திலகம்.

    பதிலளிநீக்கு
  3. பாவம் அம்பு என்ன செய்யும் எய்தவன் அன்பாய் இல்லாததே பிரச்சனை.

    பதிலளிநீக்கு
  4. பல சமயங்களில் எயப்பட்ட அம்பு தான் சிக்கிக் கொள்கிறது.. எய்பவன் எஸ்கேப்...

    பதிலளிநீக்கு
  5. எய்தவனைப் பிடிக்க முடியாது, ஒன்றும் செய்ய முடியாது என்றும் நமக்குத் தெரியும். அதனால்தான் அம்பையே நோக்கிறோம்.. அவன் எய்தவன். நாம் இயலாதவர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்லது விதியே என்றிருக்கிறோம்?!
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  6. ’சிலை’யின் பனமி சிலிமுகமா - இன்றுதான் அறிந்து கொண்டேன்.

    குந்தி போன்ற பல்வேறு அம்புகள் பற்றியுன் அறிந்துகொண்டேன்.

    பகிர்வுக்கு நன்றிகள் ஸார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே என் பின்னூட்டத்தில் எழுத்துப்பிழையாகியுள்ளது. மன்னிக்கணும்.

      ’சிலை’யின் பனமி சிலிமுகமா = தவறு

      ’சிலை’யின் பன்மை சிலிமுகமா = சரி

      நீக்கு
    2. சிலை..வில்
      சிலிமுகம்..அம்பு
      நன்றி வைகோ சார்

      நீக்கு
  7. பெரும்பாலும் அம்பைப் பெயர்த்தெடுக்கவும்
    இரணம் ஆற்ற ஆவனசெய்தலிலுமே
    மனம் கவன்ம் கொள்கிறது

    எய்தவனையும் அதற்குத்தூண்டியவனையும்
    ஏதும் செய்ய இயலாது எனும் ஆதங்கத்திலேயே

    அற்புதமான பதிவு

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  8. வித்தியாசமான அருமையான சிந்தனை ஐயா...

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. #அம்பில் ராமன் என்ற பெயரைப் பார்க்கிறான்#
    ஆகா ,ராமனுக்குத்தான் எவ்வளவு நல்ல மனசு ,எதிரியும் தன் பெயரைத் தெரிந்து கொள்ளட்டுமேன்று தன் பெயரை அம்பில் எழுதி இருக்காரே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்காலத்தில் வீரர்கள் அம்புகளில் பெயர் பொறிக்க்ப் பட்டிருக்கும்
      நன்றி

      நீக்கு
  11. பெரிய அரசியல்வாதி மீது லஞ்ச ஊழல் வழக்கு வந்தால், அவருடைய உதவியாளர் திடீரென்று இறந்து போகிறார் அல்லவா, அம்பைத்தானே நோகிறார்கள்! வில்லோடு நாளை சமாதானம் செய்துகொள்ளும் எண்ணமோ?

    இராய செல்லப்பா நியூஜெர்சி (மிகமிக விரைவில் சென்னை)

    பதிலளிநீக்கு