தொடரும் தோழர்கள்

புதன், மே 17, 2017

இசை

”தன்னில் இசை இல்லாத,ஒருமித்த இனிய ஓசைகளினால் உணர்ச்சிஅடையாத,ஒருமனிதன்,துரோகி,தந்திரக்காரன் ,கெட்டவன்”(செகப்பிரியரின் வெனிஸ் வர்த்தகனிலிருந்து ஒரு மோசமான மொழி பெயர்ப்பு!)

மனித வாழ்க்கையில் இசை ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.பிறப்பு முதல் இறப்பு வரை நம் எல்லா விசேடங்களிலும்,இசை கலந்திருக்கிறது.தாலாட்டு முதல் ஒப்பாரி வரை.

இசையே பிடிக்காதவர்கள் மிகச் சிலரே இருப்பர்.சிலருக்கு கர்னாடக இசை,சிலருக்கு இந்துஸ்தானி இசை,சிலருக்கு மேற்கத்திய இசை,சிலருக்கு திரை இசை,சிலருக்கு நாட்டுப் பாடல் என்று ஏதாவது ஒன்றில் நாட்டம் இருக்கும்.

எனக்குக் கர்னாடக இசை.என் இசை ஆர்வத்துக்குத் தீனி அளித்தவர்கள் இருவர்.

ஒருவர் நண்பர்  பார்த்தசாரதி.என் தளத்தில் அவரது பல படைப்புகள் வெளி வந்துள்ளன.வானொலியிலோ,தொலைக்காட்சியிலோ நல்ல கச்சேரி இருந்தால் உடன் தொலைபேசுவார்.இசை விழா நேரத்தில் அவர் மியூசிக் அகாடமிக்கும் நான் நாரத கான சபாவுக்கும் செல்வது வழக்கம்.தினமும் கண்டிப்பாகக் கச்சேரி  பற்றிய உரையாடல்கள் நிகழும்..

அவர் சென்ற டிசம்பர் மாதம் காலமானார்.

நானும் இப்போதெல்லாம் பல காரணங்களால் கச்சேரி கேட்கும் மன நிலையில் இல்லை.

மற்றவர் எங்கள் வங்கியில் பணி புரிந்து என் போலவே விருப்ப ஓய்வு பெற்றவ பெண்மணி.பணியில் இருந்தபோது பழக்கமில்லை .பின்னாளில்,யாரோ சொல்லி சில ஆலோசனைகளுக்காக என்ன நாடி வந்தார்.நான் சொன்னவை சரியாக நடந்ததால் நம்பிக்கை மிகக் கொண்டார்.

 ஒரு முறை அவராகவே கச்சேரிக்கெல்லாம் போவீர்களா எனக் கேட்டு நாரதகான சபாவில் இசை விழாவின்போது சீசன் டிக்கட் கொடுத்தார்.ஆறாவது வரிசையில் இருக்கை.தொடர்ந்து சில ஆண்டுகள் கொடுத்தார்.பின்னர் என்னால் போக இயலாத நிலை உருவான போது வேண்டாம் எனச் சொல்லி விட்டேன்

 இன்று அவரது பையன் தொலைபேசி,நேற்று மதியம் அவர் மறைந்து விட்டார் என்ற தகவலைச் சொன்னான்

என் இசை ஆர்வத்துக்குத் துணை நின்ற இன்னொருவரும் மறைந்தார்.,

என் காதுகளில் இப்போது ஒலிப்பது முகாரியும்,சுபபந்துவராளியும் மட்டுமே!

13 கருத்துகள்:

  1. தங்களுக்கு இசை ஆர்வம் உண்டாக்கியவரில் ஒருவர் இறந்துவிட்டாரென்பது வருத்தத்திற்குரியது. ஆழ்ந்த இரங்கல்.

    பதிலளிநீக்கு
  2. முன்பை விட இப்போது வயது கூடக் கூட
    உடன் பழகியவர்கள்,பயணித்தவர்களின்
    இழப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது
    என்ன செய்வது ? தாங்கித்தான் ஆகவேண்டும்

    பதிலளிநீக்கு
  3. வேதனையான விடயம் அவர்களது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  4. இசை அனுபவமே தனி. அது நிறைய சமயத்தில் தனிமையில் நமக்கு அழுகையை உண்டாக்கும். நம் மனதை மலர வைக்கும். பல நினைவுகளை உண்டாக்கும். அர்த்தம் தெரிந்த பாடல்கள் பக்தியையும் உண்டாக்கும்.

    நமக்கு வாழ்க்கையில் சிலவற்றைக் காட்டிக் கொடுப்பவர்களை, கற்றுக்கொடுப்பவர்களை, அறிமுகப்படுத்துபவர்களை மறக்க இயலாதுதான்.

    பதிலளிநீக்கு
  5. இசை விஷயமாக தங்களுடன்
    இசைவாய்
    இருந்துள்ள
    இருவரும்
    இப்போது
    இல்லை என்பது மிகப்பெரிய சோகமாகும்.

    மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. ஒத்த வயதினர், ஒன்றாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் நமக்கு முன்பாகவே 'பயணம்' செய்வதை நாம் பார்த்துக்கொண்டிருப்பதன்றி வேறென்ன செய்ய இயலும்? நமது பயணம் தாமதப்படுவதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்!

    இராய செல்லப்பா நியூஜெர்சி (மிக விரைவில் சென்னை)

    பதிலளிநீக்கு
  7. ஒரு துயரச் செய்தி
    இசை பற்றி உரைக்க வைத்தாலும்
    நாம்
    துயர் பகிருவோம்

    பதிலளிநீக்கு
  8. இசையால் வசமாகா இதயமெது?

    நண்பர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
  9. அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களும்.

    பதிலளிநீக்கு
  10. தங்களின் கர்நாடக இசையின் ஆர்வத்திற்கு உரமூட்டிய திரு பார்த்த சாரதி அவர்களும் திருமதி விஜலக்ஷ்மி ரமணி அவர்களும் என்பது புதிய தகவல். திரு பார்த்தசாரதி அவர்களை நன்கு அறிவேன். திருமதி விஜயலக்ஷ்மி ரமணி அவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. ஆழ்ந்த இரங்கல். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் ! இசைதான் எப்போதும் தாலாட்டும் மூச்சு.

    பதிலளிநீக்கு