தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஜனவரி 25, 2015

ஹாலிடே ஜாலிடே!



ஜப்பானியர் ஒருவர் சென்னைக்கு வந்தார்.


விமான நிலையத்தில் டாக்ஸியில் ஏறி அடையாறு போகச் சொன்னார்.


டாக்ஸி புறப்பட்டு வேகமாகச் செல்லத் துவங்கியது.


அப்போது டாக்ஸியை முந்திக்கொண்டு ஒரு மோட்டார்சைக்கிள் வேகமாகச்  சென்றது


அதைப் பார்த்த ஜப்பானியருக்கு ஒரே ஆனந்தம்,”அது சுஸூகி மோட்டார்சைக்கிள்.எங்கள் நாட்டுத் தயாரிப்பு;எவ்வளவு வேகம் பாருங்கள்”என்று சத்தமாகச் சொன்னார்.


டாக்ஸி ஓட்டுநருக்குக் கடுப்பு.


அடையாறை அடைந்தனர்.


மீட்டர் ரூ.500 ஐக்காட்டியது.


ஜப்பானியர் :‘என்ன இவ்வளவா” என்றார்


ஓட்டுநர் சொன்னார்”உங்கள் நாட்டுத் தயாரிப்பான மோட்டார்சைக்கிள் மிக வேகமாகப் போகிறதென்று பெருமைப்பட்டீர்களே.எங்கள் நாட்டுத் தயாரிப்பான் இந்த மீட்டரின் வேகத்தைப் பார்த்தீர்களா?’ ”


:) :) :) :) :) :) :) :)

9 கருத்துகள்:

  1. மறுபேச்சு பேசாமல் அந்த ஜப்பானியன் விமானமேறி ஊருக்கு போயிருப்பாரே :)
    த ம 2

    பதிலளிநீக்கு
  2. மீட்டர் காட்டிய தொகை அதிகமென்று எவ்வாறு அந்த ஜப்பானியருக்குத் தெரியும்?

    பதிலளிநீக்கு
  3. ஹா...ஹா....ஹா...

    படித்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  4. ஹா... ஹா... அதோட அவரு ஊருக்கு கிளம்பியிருப்பாரு...

    பதிலளிநீக்கு
  5. எல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. என்ன நியாயமய்யா இது மீட்டர் மட்டும் ஓடியிருக்கு....
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
  7. ஐயா தங்களது பதிவு முன்பு எனக்கு உடன் மெயில் வரும் இப்பொழுது வருவதில்லையே... ஆகவே நான் வருவது தாமதமாகிறது...

    பதிலளிநீக்கு
  8. ஆஹா.... சென்னையின் பெருமைகளில் ஒன்று இந்த சூடு வைத்த ஆட்டோ மீட்டர் தானே!

    பதிலளிநீக்கு