தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜனவரி 20, 2015

திருமண வரவேற்பும்,விருந்துச் சாப்பாடும்!



ராமனாதன் சாப்பாட்டுப் பிரியன்.

ரசித்துச் சாப்பிடுபவன்.

அதுவும் கல்யாணச் சாப்பாடு ,முக்கியமாக வரவேற்பில் பரிமாறப்படும் உணவு—பன்னீர் பட்டர் மசாலா,சப்பாத்தி,.ஊத்தப்பம்,சட்னி,பிஸிபேளாபாத்,உருளைக் கறி, பப்படம் வெஜ்.பிரியாணி,வெங்காயப் பச்சடி,காலிப்பூ பக்கோடா,பால் பாயசம், சேனை வறுவல், வெறும் சாதம்,ரசம்,பகாளாபாத்,வத்தக் குழம்பு,மோர்மிளகாய்,ஐஸ்கிரீம் .குலாப்ஜாமுன்/ கேரட் அல்வா என்ற அந்த ஒரு கலவை அவனுக்கு மிக மிக பிடிக்கும்,ஆனால் ஒரு நிபந்தனை,எல்லாம் சுவை சரியாக இருக்க வேண்டும்!


என்னவோ தெரியவில்லை .சென்ற ஆண்டு முழுவதும் ஒரு திருமண அழைப்பிதழ் கூட அவனுக்கு வரவில்லை.உறவினர்கள்.நண்பர்கள் யாருக்கும் அவனுக்குத் தெரிந்து திருமணம் நடை பெறவில்லை.அதனால்,திருமணமாகாத நண்பர்களின் பெற்றோரை விட அதிகம் கவலைப்பட்டவன் ராமனாதன்தான்!இந்தத் தையிலாவது ஏதாவது அழைப்பு வரும் என எண்ணினான்,ஆனால் இன்று வரை நடக்கவில்லை.அவனது நீண்டகால ஏக்கம் அதிகமானது. ஒரு கல்யாணமாவது நடந்தால் போய் ஒரு பிடி பிடிக்கலாம் என ஆசைப் பட்டான்.


ஒருநாள்மாலை.வெளியில் சென்று வீடு திரும்பும்போது வழியில் இருக்கும் திருமண மண்டப வாசலில் இருவர் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.அவர்கள் அணிந்திருந்த சீருடையிலிருந்து அவர்கள் திருமணஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவர்கள் என தெரிந்தது.

அவர்களிடம் விசாரித்தான்”யார் சமையல்?”

“நளபாகம் நடேசன்தான்”

அந்தப்பெயரைக் கேட்டதும் அவன் நாக்கில் நீர் ஊற ஆரம்பித்து விட்டது.நளபாகம் நடேசன் சமையல் மிகப் பிரசித்தம்.அதன் சுவையில் மயங்கியவர் பலர்.ராமனாதன் அவர் பற்றி வெகுவாகக் கேள்விப் பட்டிருந்தாலும்,அவர் சமையல் சாப்பிடும் வாய்ப்புக் கிட்டியதில்லை.

எப்படியாவது இன்று இந்த இடத்தில் சாப்பிட்டால்………

ஆசை,ஆசை,ஆசை……

ஒரு முடிவுக்கு வந்தான்,

வீடு திரும்பும் வழியில் இருந்த கடையில் பரிசுப் பொருளை சுற்றிக்கட்டும் வண்ணக் காகிதம் வாங்கினான்.

வீடு திரும்பினான்.

பரணில் கிடந்த ஒரு காலி அட்டைப் பெட்டியை எடுத்தான்,

அதன் உள்ளே செய்திதாளைக் கசக்கி நிறைத்தான்.

வண்ணத்தாளால் சுற்றி ஒட்டினான்

மேலே ஒரு வெள்ளைத்தாளில் ”வாழ்த்துக்களுடன்-ராமனாதன்”(சொந்தப் பெயரை எழுதினால் என்ன நடந்து விடப்போகிறது) என்று எழுதி ஒட்டினான்.

எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

மண்டபத்தை அடைந்தான்

(நாளை சந்திப்போம்!)

8 கருத்துகள்:

  1. அடடா..... விபரீத விளையாட்டு! அவ்வளவு ருசியானவர் ஒரு 101 கூட செலவு பண்ண மாட்டாரோ!

    :))))

    பதிலளிநீக்கு
  2. சாப்பாடு...கிடைக்குமா...? கிடைக்காதா...? நாளை வரை பொறுத்திருப்போம்.

    பதிலளிநீக்கு
  3. நிச்சயம் அது திருமண விழா அல்ல என நினைக்கிறேன். என்ன நடக்க இருக்கிறது என்பதை பார்க்க/படிக்க நாளை வரை காத்திருக்க வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  4. சாப்பாட்டு ஆசை என்னவெல்லாம் செய்ய தோன்றுகிறது பாருங்கள்!

    பதிலளிநீக்கு
  5. நாளைக்கு வந்தால் சாப்பிடலாமா ஐயா.

    பதிலளிநீக்கு