தொடரும் தோழர்கள்

செவ்வாய், டிசம்பர் 09, 2014

உயிர்--கடைசிப் பகுதி





டாக்டர்!எப்படியிருக்கா?

அவங்களுக்கு வாழணுங்கற ஆசையே இல்லைன்னு நெனக்கிறேன்.பாக்கலாம்.

மூச்சு கொஞ்சம் கொஞ்சமாக அடங்குகிறதோ?

சர்மா வந்தாச்சா,

வந்துடுவார்;வர நேரம்தான்.

கனவு போல் காதில்.

ஏன்

சார்

யார்?

வாசலில் ஓர் ஆள்

வெளியிலிருந்து வரும் வெளிச்சத்தில் முகம் தெரியவில்லை

லோகநாத சர்மா வீடு......

இதுதான்

நீங்க யாரு

நெருங்கியதும் ...

ஏன்னா நீங்களா?

இல்லை இது இளைஞன்

அதிர்கிறாள்

எப்படி அவரைப் போலவே?

யார் இந்த இளைஞன்?

அவன் கேட்கிறான்

சித்திதானே

சித்தியா?

தலை சுற்றுகிறது.

அப்படியென்றால் தன்னை மணப்பதற்கு முன் வேறு ஒரு தொடர்பா?

அதன் மூலம் பிறந்தவனா?

ஈஸ்வரா,இவரா இப்படி.

கீழே விழுகிறாள்.

ஆஸ்பத்திரி

சர்மா வந்தாச்சு.

என்ன நடந்தது.

திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டா,இஞ்ச நிக்கற இவந்தான் எங்களைக் கூப்பிட்டான் .ஆஸ்பத்திரியில சேத்துட்டு ஒங்களுக்குத் தாக்கல் அனுப்பினோம்—பக்கத்து வீட்டு மாமி.

பார்த்தார் அவனை

திடுக்கிட்டார்

எப்படி என்னை மாதிரியே?

யாருப்பா நீ?

சங்கரராமன் பையன்.

சங்கரராமன்...அவர் உடன் பிறந்த அண்ணன்.பல ஆண்டுகளுக்கு முன் ஒரு கிறித்தவப் பெண்ணை மணந்து கொண்டு வீட்டினரால் விலக்கி வைக்கப்பட்டவன்

இத்தனை ஆண்டுகளாக அவனைப் பற்றி எதுவும் தெரியாது.

இப்போது...

கேள்விக் குறியோடு அவனைப் பார்த்தார்.

ஆறு மாசத்துக்கு முன்னால அம்மா போயிட்டாங்க.15 நாளைக்கு முன்னால அப்பாவும் காலமாயிட்டார்.சாகறத்துக்கு முன்னால உங்களை பத்திச் சொன்னார்.பாக்க வந்தேன்.
சித்தி என்னைப் பாத்த்து மயங்கி விழுந்துட்டா.பக்கத்து வீட்டில போய்ச் சொன்னேன்.

என்ன நடந்திருக்கும் என்று அவருக்குப் புரிவது போல் இருந்தது

ஐயோ இதோ பாருங்கோ.மாமிக்கு இழுக்கறது 

டாகடர் வந்தார்.

பார்த்தார்.

முயன்று பார்த்தார்.

சாரி.........

போய் விட்டாள்.

உண்மை தெரியாமலே போய் விட்டாள் .

8 கருத்துகள்:


  1. வந்த இளைஞன் சர்மாவின் அண்ணன் மகன் என சொல்லி அறிமுகப்படுத்தியிருக்கலாம்.அப்படி சொல்லியிருந்தால் ஒரு ஜீவன் உண்மையை அறியாது போகும் நிலை மாறியிருக்கும். அதானால் தான் அனுமன் இராமனிடம் சீதையைப் பார்த்ததை, சீதை என ஆரம்பிக்காமல் ‘கண்டேன் சீதையை’ என்றான் போலும்.
    எதிர் பாராத ஆனால் மனதை தொட்ட முடிவு. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னல் வேக வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

      நீக்கு
  2. உண்மை அறியாமல் போன உயிர்! வருத்தம்தான்!

    பதிலளிநீக்கு
  3. இவள் பார்த்து பார்த்து அவருக்கு பிடிக்குமென்று சமைத்ததிற்கும் , அவர் இவள் மேல் வைத்த அன்பிற்கும் அர்த்தமே இல்லாமல் போய்விட்டதே .எந்த வயதிலும் பெண் புத்தி பின் புத்திதான்!

    பதிலளிநீக்கு