மூன்று பதிவுகளாக
“மரண வேட்டை” என்ற தலைப்பில் ஒரு சிறுகதை வெளியிட்டிருந்தேன்.
பதிவில் கருத்துச் சொன்னவர்கள் தவிர, நண்பர்கள்
பலரும் தொலைபேசி மூலம் பாராட்டைத் தெரிவித்தார்கள்
சிலர் ஒரு கருத்துச் சொன்னார்கள்,இக்கதை குறும்படமாக/முழுநீளத் திரைப்படமாக ஆக்க ஏற்றது
என்று.
ஒரு கதையைப் படிக்கும்போது ஏற்படும் தாக்கம்
என்பது வேறு. அதே தாக்கம் அக்கதை படமாகும்போது ஏற்படுமா என்பதே
கேள்வி.
கதையின் மையமாகச் சொல்லப்பட்ட செய்தி வெறும்
கருத்தாக இன்றி,காட்சி மூலம் வெளிப் படுத்தப்
படக்கூடியதாக இருத்தல் அவசியம்.
சினிமா என்பது ஒரு காட்சி ஊடகம்;ஒரு பக்க வசனத்தில் சொல்லமுடியாத செய்தியை ஒரு சிறு காட்சி மூலம் சொல்லி விடமுடியும்.அவ்வாறு காட்சிப்படுத்த இயலாதென்றால் அதன் தாக்கம் மிகக்குறைவாகவே இருக்கும்.
இந்த
“மரண வாடை” என்ற கதையில் முக்கியமான,மையக் கருத்து என்ன?
நாயகனின் அபூர்வத் திறமை;
இறக்க இருப்பவரின் அண்மையில் அவன் உணரும் ஒரு வாடை;அதுவே மரண வாடை.
இந்த வாடையை திரையில் எப்படிச் சொல்வது.வாடையைக் காட்சிப்படுத்த
முடியாது.வெறும் வசனத்தின் மூலமே வெளிப்படுத்த முடியும்.அவ்வாறு செய்கையில் அதன் தாக்கம் நீர்த்துப் போகிறது.
இது போன்ற ஒரு பிரச்சினைதான் திரு.கோவி மணிசேகரனுக்கும் ஏற்பட்டதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்.அவரது “தென்னங்கீற்று” நாவலைத் திரைப்படமாக்க வேண்டும் என அவர் விரும்பியபோது
,ஒரு தயாரிப்பாளர்”வயதுக்கு வராத நாயகி என்று திரும்பத் திரும்பச் சொல்கிறீர்களே,அதைத்
திரையில் எப்படிக் காட்டுவது ”என்று கேட்டாராம்.(பின்னாளில் அது படமாக்கப்பட்டது,திரு
கோவி அவர்களின் இயக்கத்திலேயே)
எனவே ”மரண வாடை”க்கான திரைக்கதை எழுத வேண்டும் என்றால் ஒரு மாற்றம்
செய்ய வேண்டும்.இறக்க இருப்போரின் அண்மையில் வாடையை உணராமல்,நாயகனுக்கு ஏதோ பயங்கர உருவம் தெரிவதாக(மற்றவர்க்குத் தெரியாத) மாற்றி அமைக்கலாம்.”டம்” என்ற ஒலியுடன் அந்த உருவம் தோன்றும்போதெல்லாம்,பார்ப்பவர்கள்
அதிர்வார்கள்தானே!!
இதைத் தவிர இன்னும் சிறிது சரக்குச் சேர்க்க
வேண்டும்.
முறைப்பெண்ணின் மீது கொண்ட நேசம்.அவள் வீட்டில்
ஏற்காதது இவற்றை விரிவு படுத்த வேண்டும்.
இந்த அனுபவம் அவனுக்கு ஏன் ஏற்படுகிறது
என்பதற்கு ஏதாவது ஒரு இறப்புடன் அவனுக்கு ஏற்பட்ட பயங்கர நிகழ்வைக் காரனமாகக்
காட்டலாம்.
இப்படி எத்தனையோ செய்யலாம்!
என்ன செய்தாலும் படம் பப்படம்தான்!
The person about to meet his end could b shown as skeleton visible only to the protagonist
பதிலளிநீக்குஅது முடியாது வாசு.வாடை யாரிடமிருந்து வருகிறது என்பதே இங்கு சஸ்பென்ஸ் ஆகி விட்டது.எனவே இறப்பவர் எலும்புக்கூடாகத் தெரிந்தால் ..?
நீக்குநன்றி
Oh... I overlooked this important point. This goes to show that you could definitely become a good script writer.. may be a way could be found out. like inserting text the way they do sometimes in some movies ( when Hero is released say after 4 years in prison ) to indicate passage of time .Vasudevan
நீக்குநீங்கள் சொல்வது சரியே. கதை வேறு. திரைக்கதை வேறு. கதையை படமாக எடுக்கும்போது நமக்கு பிடிக்கவில்லையென்றாலும் சில மசாலாக்களை சேர்க்கவேண்டும், படம் பார்ப்போருக்காக. திரு சுஜாதா அவர்களின் ‘கரையோரம் செண்பகப்பூ’ என்ற அருமையான தொடர் படமாக எடுத்தபோது சிதைக்கப்பட்டு வெளிவந்தபோது கதையில் இருந்த சுவாரஸ்யம் படத்தில் இல்லை. எனவே உங்களின் கதையை படமாக்குவது கடினம் என்றே எண்ணுகிறேன் நான்.
பதிலளிநீக்குவணக்கம் !
பதிலளிநீக்குஎன் செல்லத் தாத்தாவின் அழைப்பை ஏற்று இன்று அத்தனை
ஆக்கங்களிற்கும் என் தமிழ்மண ஓட்டை மட்டும் போட்டு விட்டுச்
செல்கின்றேன் விரைவாக வந்து ஆக்கங்களைப் படித்துப் பின்
ரசித்துக் கருத்தையும் இட்டுச் செல்வேன் .தயவு கூர்ந்து இந்தப்
பேத்திக்கு அவகாசம் தாருங்கள் விரைந்தோடி வருவேன் மீண்டும் .
மிக்க நன்றி தாத்தா பகிர்விற்கு .
சில கதைகள் படிப்பதற்கும் ரசிப்பதற்கும் நன்றாகஇருக்கும்
பதிலளிநீக்குஆனால் அதையே திரையில் காட்டினால், ரசிப்புத் தன்மை குறைந்து விடும்
தங்களின் கதையும் அதைப் போன்றுதான் என்று எண்ணுகின்றேன்
நன்றி ஐயா
தம +1
வணக்கம் ஐயா இருப்பினும் தாங்கள் வசனம் எழுதினால் பட்படம் நன்றாகவே பொரியும் என்றே நினைக்கின்றேன்.
பதிலளிநீக்கு'மரண 'வாடை என்பதால் குறும்படக் கதையை எதிர்பார்க்கும் கோவை 'ஆவி 'யின் முடிவுக்கே விட்டு விடுவோம் :)
பதிலளிநீக்குத ம 6
குறும்படம் எடுக்கலாம் என்ற கருத்தை நான்தான் தெரிவித்தேன் முழு நீல படம் எடுக்க முடியாது . ஆனால் குறும்படம் எடுக்க முடியும் . மரண வாடையை மூக்கு உணரமுடியாதே தவிர அந்த உணர்வை சரியான இசை மூலம் மனதில் ஏற்படுத்த முடியும் என்றே நினைக்கிறேன்.ஊதுவத்திப் புகையை முகம் தெரியாத பிணத்தையும் இசையோடு காண்பித்தால் அந்த உணர்வு ஏற்படுத்த முடியும். குறும்படம்.நடிப்பவரின் சரியான பாடி லாங்க்வேஜ் அந்த உணர்வை உண்டாக்கும்.. .அப்படியும் திருப்தி இல்லையென்றால் வாடைக்கு பதிலாக மரண ஓசை என்று மாற்றிக் கொள்ளலாம்.
பதிலளிநீக்குசில கதைகள் படங்களாக்கப்பட்டு தோல்வியை தழுவி இருப்பது நிஜமானாலும் முயன்று பார்க்கலாம்! நல்லதொரு கரு! திரைக்கு ஏற்றார்போல சில மாற்றங்கள் செய்தால் படமாகும் என்று தோன்றுகிறது! இப்போதே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்! நன்றி!
பதிலளிநீக்குமசாலுக்குவா பஞ்சம் நம் திரைப்படங்களில்..!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
நானும் கதையை படித்தேன்.... நன்றாக உள்ளது தனபாலன் அண்ணா சொல்வது போல..
மசாலுக்குவா பஞ்சம்.நம் திரைப்படங்களில்
இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-