மரணத்துக்கு வாடை உண்டா?
இப்போது சில நாட்களாக சங்கு என்ற சங்கரனின்
மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி.
பிண வாடை என்று சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறான்.
நாளிதழ்களில் படித்திருக்கிறான்,பூட்டிய
வீட்டிலிருந்து துர்நாற்றம் வீச,.திறந்து பார்த்தபோது அழுகிய நிலையில் பிணம் கிடந்ததாக.
மனிதன் என்று இல்லை;எல்லா உயிர்களுமே செத்து
அழுகினால் வாடைதான்.
ஆனால் மரணிக்க இருக்கும் ஒருவரிடமிருந்து
முன்பாகவே வாடை வருவது சாத்தியமா?
எப்படிப் பிறந்தது இந்தக் கேள்வி?
இரண்டு மாதங்களுக்கு முன்,நண்பன் ஒருவனின்
வீட்டுக்குச் சென்றிருந்தான்.
அவன் தாத்தா நோய்வாய்ப் பட்டிருந்தார்.வீட்டுக்குள்
நுழையும்போதே அந்த வாடை அவனைத் தாக்கியது.
தாத்தா இருந்த அறையை நெருங்கும்போது வாடை
அதிகமாயிற்று.
நண்பனிடம் கேட்டான்”ஏதோ வாடை வரவில்லை?”
”இல்லையே.டெட்டாலின் மணம் தவிர வேறெதுவும்
இல்லை” நண்பன்
அவன் சகோதரியும் அதை உறுதி செய்தாள்
அந்த வாடை தனக்கு மட்டுமே தெரிகிறதா?யோசித்தான்
வீடு திரும்பிய பின்னும் அதே கேள்வி.
மறுநாள் அந்தத் தாத்தா செத்துப் போனார்.
அவன் மனத்தில் ஒரு நெருடல்.
வாடைக்கும் இறப்புக்கும் சம்பந்தம் இருக்கிறதா?
நாட்கள் நகர்ந்தன
ஒரு நாள் பக்கத்து வீட்டு அம்மா அழைத்தாள்
“சங்கு .என் நாத்தனார் வந்திருக்காங்க,அவங்களுக்குக்
கொஞ்சம் உடம்பு சரியில்ல.ஒரு கட்டிலை எடுத்து இன்னொரு அறையில போடணும் .கொஞ்சம் உதவி
பண்ணேன்”
போனான்
வீட்டிற்குள் நுழையும்போதே வாடை!
அதே வாடை.
அதிர்ந்தான்
கட்டிலைப் போட்டு விட்டு வரும்போது அந்தப் புதிய பெண்மணி வந்தாள்.
வாடை அதிகமாகத் தாக்கியது.
சங்கரன் வேகமாக வெளியேறினான்
மீண்டும் குழப்பம்.
இரண்டு நாட்களுக்குப் பின், வந்திருந்த அந்தப்
பெண்மணி மரணம் அடைந்தாள் என்ற செய்தி வந்தது.
அப்படியென்றால் அது மரணத்தின் வாடையா?
முதல் முறை தற்செயல் எனலாம்
இரண்டாம் முறை ஒரு அதிசய ஒற்றுமை எனலாம்
மூன்றாம் முறையும் நடந்தால்?
நடக்காது எனச் சமாதானம் செய்து கொண்டான்
ஓரிரு மாதங்கள் கழிந்தன.
அவன் நண்பன் குடுமபத்துடன் ஒரு விசேட நாளன்று
வந்தான் .
அவர்கள் வரும்போதே வாடையும் வந்தது.
இதெல்லாம் பிரமை என்று சொல்லிக் கொண்டான்.
நண்பனின் பையன்,சிறுவன் அங்குமிங்கும் ஓடிக்
கொண்டிருந்தான்
அவனிருக்கும் தூரத்தைப் பொறுத்து வாடை அதிகமாவதும்
குறைவைதும் இவனுக்குத் தெரிந்தது.
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு
அவர்கள் புறப்பட்டனர் வாசல் வரை வழியனுப்பச் சென்றான்.அந்தச் சிறுவன் திடீரென, பாம்,பாம்
என் ஒலியெழுப்பிக் கொண்டு வீதியில் ஓடினான்,யாரும் தடுக்கும் முன்.
வேகமாக வந்த ஊர்தி ஒன்று மோதியது.
பையன் ரத்த வெள்ளத்தில்!
மரணத்தின் வாடைதானா அது?
(தொடரும்).
சங்கரன் இடத்தில் நானும் இருந்த ஒரு உணர்வு, இரண்டு மூன்று முறை அந்த வாடையை நானும் உணர்ந்திருக்கிறேன்...!
பதிலளிநீக்குபுயல் வேக வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மனோ.நலந்தானே?
நீக்குதங்களின் பதிவுக்கு முதல் முறையாக வருகிரேன் ஐயா இனி தொடர்கிறேன்.....
பதிலளிநீக்குபதிவு மரண பயத்தை உண்டாக்குகிறது ஐயா.
என்னக்கென்னவோ முன்பே நீங்கள் வந்ததாக நினைவு1
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி கில்லர்ஜி
செப்டம்பர் 20 ஆம் நாளன்று தாங்கள் எழுதிய ‘தம்பி இராமனா இராவணனா?’ என்ற பதிவிற்கான பின்னூட்டதில் எனக்குப் பிறகு இரண்டாவதாக வந்து தேவகோட்டை KILLERGEE அவர்கள் பின்னூட்டமிட்டிருந்தார். அதை மறந்திருப்பார் என எண்ணுகிறேன். உங்களுக்கு ஞாபகசக்தி அதிகம் ஐயா!
நீக்குஎன்னை விட உங்களுக்குத்தான் நினைவாற்றல் அதிகம்;பதிவு,தேதி எல்லாம் சொல்கிறீர்களே!நன்றி சார்
நீக்குஒருவேளை இது அவருக்கு மிகையான புலணுர்வு (Extra sensory perception) இருந்திருக்குமோ? காத்திருக்கிறேன் உண்மையை அறிய.
நீக்குஇருக்கலாம்.அடுத்து என்ன நடக்கும்?நானும் ஆவலோடு!
நீக்குநன்றி
உட்ம்பு முடியாமல் மரணத்தை எதிர் நோக்குபவர்கள் இருக்கும் இடத்தில் வாடை இருக்கும். இது வித்தியாசமாய்... சிறுவன் பிழைப்பானா என கவலையோடு அடுத்த பகிர்வுக்காக...
பதிலளிநீக்குசங்குவுக்கு வாடை வந்து விட்டதல்லவா?பையன் கதை முடிந்தது.இனி அடுத்த சுவாரஸ்யமான கேசைப் பார்ப்போம்!
நீக்குநன்றி குமார்
வாடை இல்லா மரணமும் உண்டு .என்பதற்கு விபத்து ,சுனாமி,படகு கவிழ்தல்.துப்பாக்கிச்சூடு.
பதிலளிநீக்குநோயாளிகள் மரணவாடை நானும் உணர்ந்திருக்கிறேன்.
சங்கரனுக்கு எல்ல மரணத்திலும் வாடை தெரிகிறது என்பதே இங்கு விசேடம்!
நீக்குதன்யவாத்!
இது ஓரளவிற்கு உண்மைதான் என்று தோன்றுகிறது! வாடை வருகிறதோ இல்லையோ உள்ளுணர்வு கூறுகிறது!
பதிலளிநீக்குஅனுபவங்களே சான்று .நன்றி சுரேஷ்.
நீக்குமிரட்டலான தொடக்கம்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
நீக்குஇது புதுசா இருக்கு...!
பதிலளிநீக்குபுதியன புகுதல் வழுவல!
நீக்குநன்றி டிடி
தலைப்பே அச்சுறுத்துகிறதே!
பதிலளிநீக்குநன்றி முரளி
நீக்குஆகா
பதிலளிநீக்குமிரட்டல் தலைப்பு ஐயா
தொடர்கிறேன்
நன்றி
நீக்குதம 9
பதிலளிநீக்கு