உள்ளே…வெளியே
உள்ளே…வெளியே
தொடர்ந்து
எப்படியிருக்கா?
அப்படியேதான்
மூச்சு
மட்டும் வந்துண்டிருக்கு.
வேற
எந்த விதமான அசைவும் இல்ல
கிருஷ்ணா!இன்னும்
எத்தனை நாளோ?
கிருஷ்ண
ஜயந்தி
கோலம்
வீடெல்லாம்
கிருஷ்ணன் கால்
ஆனால்
அழித்து விளையாட ஒரு கிருஷ்ணன் இல்லை
கிருஷ்ணா நீ பேகனே பாரோ
எத்தனை முறை பாடியும் கிருஷ்ணன் வரவில்லை
கிருஷ்ணா நீ பேகனே பாரோ
எத்தனை முறை பாடியும் கிருஷ்ணன் வரவில்லை
ஆத்தில
கட்டாயம் புகை வரணும்.
கட்டாயம்.
அம்மாவின்
பழக்கங்கள்
எனவே
உப்பு,வெல்லச்சீடை, முறுக்கு,
முறுக்கு
மாவில் சூப்பி கூட
யாருக்கு?
எதற்கு?
முன்பெல்லாம்
அண்டை அசலுக்குப் பகிர்வாள்.
பின்
அதுவும் இல்லை.
இரண்டு
பேர் தின்ன எவ்வளவு வேண்டும்?
நவராத்திரி.
அண்டை
வீடுகளில் கொலு
கலர்
கலர் ஆடைகளில் பட்டாம்பூச்சிகள் போல் அழைக்க வரும் பெண்கள்.
இவளை
அழைக்காமல் இல்லை.
இவள்
பாடினால் கொலுவுக்கு அழகு.
குழந்தை
சம்பந்தமான விழா என்றால் மட்டுமே அழைப்பதில்லை
ஆனாலும்
குதூகலங்களில் மனம் ஒன்ற மறுக்கிறது
பண்டிகை
என்றாலே மனம் சோர்வாகிறது
ஆனால்
விட முடியவில்லையே
போகியன்று
போளி,சங்கராந்தியன்று சக்கரைப் பொங்கல்,பிள்ளையார் சதுர்த்திக் கொழுக்கட்டை,திருவாதிரைக்
களி,கூட்டு.
எல்லாமே
அவருக்குப் பிடிக்குமே!
ஆனால்
மனம் ஒன்றிச் செய்வது காரடையார் நோன்புக் கொழுக்கட்டை மட்டுமே.
அவருக்கான
நோன்பு.
எத்தனை
ஜன்மம் எடுத்தாலும் இவரே ஆத்துக்காரரா வரணும்.
காஞ்சி
மடம்
மகா
பெரியவா முன்னால்
இவா
லோகநாத சர்மா.போஸ்ட்மாஸ்டரா இருக்கார்
பெரியவாளின்
தீட்சண்யப் பார்வை
சம்ஸ்கிருத்த்தில்
பாண்டித்யம் உண்டோ?
எப்படித்தெரியும்?
அவர்
மகான்.
அவருக்குத்
தெரியாததா?
கொஞ்சம்
படிச்சிருக்கேன்.
குழந்தைகள்
?
அழுகை
அடக்க முடியவில்லை
பெரியவாளின்
கருணைப் பார்வை.
கீதையெல்லாம்
நன்னாப்படிச்சிருப்பேயில்லயா
படிச்சிருக்கேன்.
பார்யாளுக்குக்
கொஞ்சம் எடுத்துச் சொல்லு
எல்லாம்
அவன் பாத்துக்கறான்.
இருக்கறவாளுக்குக் கொஞ்சம்;இல்லாதவாளுக்கு லோகமே கொழந்தைகள்தான்.
இருக்கறவாளுக்குக் கொஞ்சம்;இல்லாதவாளுக்கு லோகமே கொழந்தைகள்தான்.
மனம்
சாந்தி.
(தொடரும்)
இருக்கவாளுக்கு கொஞ்சம்! இல்லாதவாளுக்கு லோகமே குழந்தைகள்! உண்மையான வாக்கு! அருமை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு//இருக்கவாளுக்குக் கொஞ்சம்;இல்லாதவாளுக்கு லோகமே கொழந்தைகள்தான்.//
பதிலளிநீக்குஅதானே..... ஆனாலும் அப்படி இருந்துவிட முடிவதில்லை.
மனப்பக்குவம் - சிரமம்...
பதிலளிநீக்குஇருக்கவாளுக்குக் கொஞ்சம்;இல்லாதவாளுக்கு லோகமே கொழந்தைகள்தான்
பதிலளிநீக்குகீதைவாக்கு! அருமை
திண்டுக்கல்லாரின் கருத்தோடு உடன்படுகின்றேன்.
பதிலளிநீக்கு