நேரம் அதிகமில்லை.
என்ன செய்வதாயினும் விரைந்து செய்ய வேண்டும்.
இந்த மாப்பிள்ளை கவிதாவின் கழுத்தில் தாலி
கட்டுவதை எப்படியாவது தடுத்தேயாக வேண்டும்.
தாலிகட்டியபின் அவன் இறந்தால்தானே பிரச்சினை?
முன்பே,இன்றே இறந்து விட்டால்?
கவிதா தப்பித்துக் கொள்வாள்.
இது எப்படிச் சாத்தியமாகும்?தான்தான் ஏதாவது
செய்ய வேண்டும்
.........
இவ்வாறெல்லாம் அவன் எண்ணங்கள் நீண்டன.
கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான்.
மண்டபத்தை வீட்டு வெளியேறினான.
அவன் நண்பனின் மருந்துக்கடையை அடைந்தான்
“என்ன சங்கு இந்த நேரத்தில?”
”ராத்திரி சாப்பாட்டுக்கே மறக்காம வந்துடு;இதைச் சொல்லத்தான் வந்தேன்”
அவனுடன் பேசியவாறே கடை அலமாரிகளின் ஊடாக
நடந்தான்.
அதோ,அவன் நண்பன் முன்னொருநாள் காட்டிய போத்தல்…
“இது ஒரு மருந்துதான்.ஓரிரு துளிகள்தான்
ஒரு வேளைக்கு. 5 மி.லி சாப்பிட்டாக் கூட ஆள் காலி.
நண்பன் கவனிக்காதபோது அதை எடுத்தான்,பாக்கெட்டில்
மறைத்தான்;புறப்பட்டான்
”மறக்காம வந்துடு”
மண்டபத்துக்கு வந்தான்.
மாப்பிள்ளை அறை சென்றான்.
வந்தது முதல் அவரை
விட்டுப் பிரியாத தோழனுடன் பேசிக் கொண்டிருந்தார்.
“வெயிலா இருக்கே;ஜூஸ் கொண்டு வரட்டுமா?”
அவர் நண்பனைப் பார்க்க,நண்பன் தலை அசைத்தான்
சங்கு சென்றான்;சமையல்காரரிடம் சொல்லி இரண்டு
கிளாஸ் ஜூஸ் வாங்கிக் கொண்டான்.ஒரு கிளாசில் சந்தனப்பேலாவில் இருந்த சந்தனத்தை எடுத்து
ஒரு பொட்டு வைத்தான்,அடையாளத்துக்கு.அதில் யாரும் பார்க்காத போது மருந்தை ஊற்றினான்.
எடுத்துக் கொண்டு புறப்பட்டான்……………
மாப்பிள்ளை அறைக்குச் சென்றான்.
பொட்டு வைத்த கிளாஸை மாப்பிள்ளையிடமும்,மற்றதைத்
தோழனிடமும் கொடுத்தான்.
போயிட்டு வரேன் என்று சொல்லி வெளியே வந்தான்.
சிறிது நேரம் கழித்து மாப்பிள்ளை வேகமாக
ஓடி வந்தார்.
”யாராவது டாக்டரைக் கூப்பிடுங்களேன்;அவசரம்”
“என்ன ஆச்சு மாப்பிள்ள?”
”என் நண்பன் திடீரென்று மயங்கி விழுந்து
விட்டான்”
சங்கு அதிர்ந்தான்.
டாக்டருக்கு ஆளை அனுப்பி விட்டு மாப்பிள்ளை
அறைக்குச் சென்றான்
முதல் பார்வை காலி கிளாஸ்களின் மீது
விழுத்தது.
அப்படியென்றால்......
எப்படியோ கிளாஸை மாற்றிக் குடித்திருக்கிறார்கள்
இன்னொன்றை உணர்ந்தான்.
சிறிது நேரம் முன்பு கூட இருந்த அந்த
வாடை இப்போது இல்லை.
வாடைக்குக் காரனம் யார் என இப்போது
புரிந்தது!
இனி டாக்டர் வருவார்;அவன் இறந்தது உறுதியாகும்.
விஷத்தால் இறந்தான் என்பது தெரிய வரும்.
அதன் பின்………
..................
இப்போது அந்த வாடை
மீண்டும் மிக மெல்லியதாக வரத் தொடங்கியது.
அது ……………..
அவனிடமிருந்தேதான் என்பதை அவன் உணர்ந்தான்!
எதிர் பார்க்காத முடிவு. சூப்ப்ப்ப்ப்ப்ர் !
பதிலளிநீக்குமின்னல் வேகம்-நீங்களும்,வாசுவும்(வாசு தொலைபேசியில்)
நீக்குநன்றி சார்
இறுதியில் கொடுத்துள்ள டிவிஸ்டு சற்றும் எதிர்பாராதது.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்கு2,3 சேர்த்து படித்தேன்...
பதிலளிநீக்குமுடிவு அருமை...
மரண பயம் வந்துவிட்டது ஐயா...
பயம் ஏன்?
நீக்குநன்றி
அற்புதமான த்ரில்லர். குறும்படம் எடுக்கலாம்
பதிலளிநீக்குநன்றி முரளி
நீக்குஓ..... இதைதான் எதிர்பாராத மரணம் என்கிறார்களா....? எல்லாருடைய மரண வாசனையையும் சரியாக அறிந்துகொண்ட சங்கு, எப்படி தன மரண வாசனையை அறியாமல் போனான்..?
பதிலளிநீக்குநன்றி மா..மா
நீக்குவாடை ---அனைவருக்கும் வரும்.நல்ல பதிவு.
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குஓரளவு முடிவை ஊகிக்க முடிந்தது! ஆனாலும் அசத்தல் முடிவு! பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்குஓ.. மை காட்!
பதிலளிநீக்குஅற்புதம்.
நன்றி ஸ்ரீராம்
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
இறுதியில் சொல்லி முடித்த விதம் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
நீக்குபிரமாதம்!
பதிலளிநீக்குநன்றி அப்பாதுரை
நீக்குமிகவும் அருமை. இறுதியில் உள்ள ட்விஸ்ட் - fantastic
பதிலளிநீக்குநன்றி நாகராஜன்
நீக்குசூப்பர்...!
பதிலளிநீக்குகண்டிப்பாக ஒரு திரைப்படம் வரலாம்...!
நன்றி டிடி
நீக்குஅருமை ஐயா
பதிலளிநீக்குஅருமை
நன்றி ஜெயக்குமார்
நீக்குநல்லது நெனச்சி கடைசியில அவனே காலி. இதெல்லாம் தேவையா அவனுக்கு?
பதிலளிநீக்குநன்றி ரீகன் ஜோன்ஸ்
நீக்குithai padiththapin NIGHT SHyamalin SIXTH SENSE gyabagam vanthathu.
பதிலளிநீக்குஅபடம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்;ஆனால் பார்த்ததில்லை!
நீக்குநன்றி