தொடரும் தோழர்கள்
வியாழன், டிசம்பர் 11, 2014
இன்றும்,என்றும் வாழ்வான் பாரதி!
//நோயாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்
அந்தணனாம் சங்கரா சார்யன் மாண்டான்
அதற்கடுத்த விராமா நுஜனும் போனான்
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர்புகழு மிராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்!--// ( பாரதி)
ஆம்!
பாரதிக்குச் சாவில்லை!
இன்னும் வாழ்கிறான் நம்முடன்.
காலனைச் சிறுபுல்லென மதித்துக்
காலருகே வந்தால் அவனை மிதிக்கவும்
எண்ணிய வீரனுக்குச் சாவேது?
காலத்தைக் கடந்து அவன் கவிதை வாழும்
உடன் அவனும் வாழ்வான்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பாட்டுக்கொரு புலவனான பாரதிக்கு பிறந்த நாளான இன்று அவரை இதைவிட சிறப்பாக வாழ்த்த முடியாது. வாழ்த்துக்கள் அவரைமறந்தவர்களுக்கு நினைவூட்டியமைக்காக!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
பாரதியின் பிறந்த நாள் கவிதை மிக அருமையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
முத்தமிழ் உள்ளவரை முண்டாசுக் கவி வாழ்வார்!
பதிலளிநீக்குஆமாம் பாரதி என்று வாழ்வார்:)
பதிலளிநீக்குபாரதி பிறந்ததினக் கவிதை அருமை.
பதிலளிநீக்குஇருக்கும் வரையில் ஏழ்மையில் உழன்றவன்
பதிலளிநீக்குஇறந்த பின்னும் நிலையாய் நிற்பவன்
வீரனுக்குச் சாவேது?
பதிலளிநீக்குபாரதி வாழ்கிறார்..
// இன்னும் வாழ்கிறான் நம்முடன் // ஆம்...
பதிலளிநீக்குபாரதியின் சிறப்பான பாடலை கொண்டு அவரை புகழ்ந்து நினைவு கூறியமை சிறப்பு! நன்றி!
பதிலளிநீக்கு