தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஆகஸ்ட் 09, 2013

ஒ.பொ.பொ.ஒ.பெ.அ.--கதையின் இரு முடிவுகள்




நேற்றே சொன்னபடி நண்பர் வே.நடனசபாபதி அனுப்பிய கதை முடிவுகள்  .........

//ஒரு பொன்மாலைப் பொழுதும்,ஒரு பெண்ணின் அழைப்பும்!

இந்த கதையின் முடிவை நான் இருவிதமாக தந்திருக்கிறேன்.

முதல் முடிவு,
(என் கமெண்ட்:-வயிற்றில் புளியைக் கரைத்த முடிவு!)

கையில் கிடைத்த பரிசுடன், நாளை மாலை சுவைக்கப் போகும் ஐஸ் டீயை மனதில் சுவைத்தபடி வீடு திரும்பினேன். மறுநாள் காலை நல்ல உறக்கத்தில் இருக்கும்போது யாரோ பட படவென கதவைத்தட்டும் சத்தம் கேட்டு கதைவைத் திறந்தால் நான்  தங்கியிருந்த அடுக்ககத்தின் குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவரும் செயலரும் கையில் அன்றைய நாளேட்டுடன் நிற்பதைக் கண்டேன்,

வாருங்கள். வாருங்கள் என அவர்களை உள்ளே அழைத்தபோது, அவர்கள்  இறுகிய முகத்தோடு, ‘நாங்கள் வருவது இருக்கட்டும். இதைப் பார்த்தீர்களா?’என அந்த நாளேட்டைக் காண்பித்தனர்.

அதில் நான் முதல் நாள் சந்தித்த அந்த பெண்ணுடனும் இளைஞனுடனும் எடுத்துக்கொண்ட புயகைப்படம் வெளியாகியிருந்தது. அதைப் பார்த்த எனக்கு ஒரே சந்தோஷம். அட! நாம் எடுத்துக்கொண்ட புகைப்படம் நாளேட்டுகளிலெல்லாம் வந்துள்ளதே என்று.

ஆமாம். என் படம் தான் வெளியாகியிருக்கிறது இதற்கென்ன? என்றேன் 

அதற்கு அவர்கள். கீழே உள்ள செய்தியைப் படியுங்கள். என்றனர்.

ஆவலோடு படித்தபோது, அதில் காவல் துறையினரின் அறிவிப்பு என்ற தலைப்பில் வெளியாகியிருந்த செய்தியை படித்தபோது நான் மயக்கம் போடாத குறைதான்.   

அதில் படத்தில் உள்ள பெண் கொலையுண்டு இருப்பதாகவும், கடைசியாக அவளோடு இருந்த ஆண் நண்பர்கள் இருவர் (படத்தில் உள்ளவர்கள் ) மாயமாகிவிட்டனர் என்றும், அவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடிவருவதாகவும், அவர்களை காண்போர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

அதைப்பார்த்த நான், ‘அய்யயோ. எனக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இல்லை.’ என சொல்ல ஆரம்பித்தபோது, தலைவரும் செயலரும், ‘சார். நாங்கள் எங்கள் கடமையை செய்யப்போகிறோம். அதாவது காவல்துறைக்கு நீங்கள் இங்கு வசிப்பதைச் சொல்லப் போகிறோம். என்று சொல்லிவிட்டு கைப்பேசி மூலம் காவல் துறையை தொடர்புகொள்ளத் தொடங்கினர்.

நானும்  என் தலைவிதியை நொந்தபடி கைபேசியைத் தேடினேன் எனது வழக்கறிஞரை தொடர்புகொள்ள.

இரண்டாவது முடிவு.

(என் கமெண்ட்: -என் தலையில் முட்டாள் குல்லாய் மாட்டிய முடிவு!)


கையில் கிடைத்த பரிசுடன், நாளை மாலை சுவைக்கப் போகும் ஐஸ் டீயை மனதில் சுவைத்தபடி வீடு திரும்பினேன்.

 மறுநாள் காலை நல்ல உறக்கத்தில் இருக்கும்போது யாரோ பட படவென கதவைத்தட்டும் சத்தம் கேட்டு கதைவைத் திறந்தால் நான்  தங்கியிருந்த அடுக்ககத்தின் குடியிருப்போர் நல சங்கத்தின் செயலர் கையில் அன்றைய நாளேட்டுடன் நிற்பதைக் கண்டேன்.

என்ன சார், காலை வேளையில்?’ என்றபோது அவர் சிரித்துக்கொண்டே அந்த நாளேட்டை நீட்டினார். அதில் நான் முதல் நாள் சந்தித்த அந்த பெண்ணுடனும் இளைஞனுடனும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியிருந்தது.

அதோடு வெவ்வேறு நபர்களுடன் அந்த  பெண்ணும் இளைஞனும் நிற்பதுபோல் படங்கள் வெளியாகி இருந்தன. 

அந்த படங்களுக்கு கீழே,’இலவசமும் நம் மக்களும் என்ற தலைப்பில் வெளியாகியிருந்த செய்தியில், இலவசமாக கிடைக்கும் என்றால் நமது மக்கள் விஷத்தைக் கூட பெற்றுக் கொள்வார்கள் என்று சொல்லப்படுவது உண்மையா என சோதிக்க ஒரு அரசு சாரா நிறுவனம் ஒரு சர்வே நடத்தியதாகவும் அதில் சந்தித்த அநேகர் இலவசத்தைப் பெற ஒத்துக் கொண்டதையும்,அவர்களில் சிலரது  புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதாக சொல்லப்பட்டிருந்தது.

நானும் அசட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே அவரை அனுப்பிவிட்டு என்னை நொந்து கொண்டேன். புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததற்காக. //

கலக்கிட்டீங்க நடனசபாபதி சார்!



19 கருத்துகள்:

  1. இருவேறு எல்லைகளில் பொன்னான கதைகள்..!

    பதிலளிநீக்கு
  2. ஹா ஹா ஹா.. முதல் முடிவை விட இரண்டாவது கலக்கல்....

    பதிலளிநீக்கு
  3. நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடனசபாபதி அவர்களே உங்களுக்கு நல்ல கற்பனை... வாழ்த்துக்கள்

      நீக்கு
    2. வாழ்த்துக்கு நன்றி திரு ரூபக் ராம் அவர்களே!

      நீக்கு
  4. இரண்டு கற்பனைக் கதைகளுமே ஜோராகவே உள்ளன. முதல் கதை முதல் தரமான கதை ! ;)

    சுருக்கமாகவும் சுவையாகவும் எழுதியுள்ள திரு வே. நடனசபாபதி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    வெளியிட்ட தங்களுக்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கு நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!

      நீக்கு
  5. அருமையான முடிவுகள்...
    முன்னது திகில் கலந்த கதை...
    பின்னது மக்கள் னிலை சொல்லும் கதை

    பதிலளிநீக்கு
  6. ரெண்டாவது முடிவுதான் ரியலிசத்தோட இருக்கு. சூப்பர்.

    பதிலளிநீக்கு
  7. Both the endings visualized by Mr.Nadanasabapathy are superb.
    while one mocks at Indian mentality of hankering after any thing that is available free cost, the other ending would have definitely caused several sleepless nights, and infact many writers of crime stories would have heaved a sigh of relief that he has not chosen to be their competitor.

    Hidden talent of Mr.Sababpathy in weaving interesting thrillers has been exposed thanks to your experience. I wish Mr.Sabapathy develops this into a full fledged thriller and serializes in his blog along with his regular blogs. By the way what was the ending you had visualized. vasudevan

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கும் என் மேல் வைத்துள்ள நம்பிக்கைக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

      நீக்கு
  8. இரண்டுமே சிறப்பு! நீங்க எழுதி வெச்சமுடிவையும் வெளியிட்டு இருக்கலாம்! நன்றி!

    பதிலளிநீக்கு

  9. ஹா ஹா ஹா ... ஒரு க்ரைம் ஒரு காமெடி.... உங்க முடிவு என்னவோ ?

    பதிலளிநீக்கு
  10. இரண்டுமே அருமையான கதை.....

    உங்க முடிவு என்னன்னு இன்னும் எழுதலையே....

    பதிலளிநீக்கு
  11. நான் தந்துள்ள கதையின் முடிவுகளைப் பாராட்டியுள்ள திருமதி இராஜராஜேஸ்வரி, திரு ஸ்கூல் பையன் திரு சே.குமார், திரு டிபிஆர்.ஜோசப், திரு S.சுரேஷ், திரு வெங்கட் நாகராஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!


    திரு சென்னை பித்தன் அவர்களை, அவர் எழுத நினைத்திருந்த முடிவை தெரிவிக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. திரு சென்னைப்பித்தன் ஒரு நல்ல பத்திரிகை ஆசிரியராக திகழக்கூடும். வலைமனையில் இத்தகைய முயற்சி புதிது. பாராட்டுக்கள். அதோடு எங்கள் வீட்டில் இன்னொரு கதாசிரியரை (என் தம்பி)உருவாக்கி எங்களுக்கு இனம் காட்டியதற்கும் சென்னைப்பித்தன் அவர்களுக்கு நன்றி. கதை முடிவுகள் இரண்டுமே நன்றாகக் கற்பனை செய்யப் பட்டுள்ளன.திரு.டிபி.ஆர் ஜோசப் குறிப்பிட்டிருப்பதுபோல இரண்டாவது முடிவுதான் யதார்த்தமாகவும், சமூக விழிப்பணர்வைத் தூண்டுவதாகவும் உள்ளது.

    பதிலளிநீக்கு
  13. திரு சென்னைப்பித்தன் ஒரு நல்ல பத்திரிகை ஆசிரியராக திகழக்கூடும். வலைமனையில் இத்தகைய முயற்சி புதிது. பாராட்டுக்கள். அதோடு எங்கள் வீட்டில் இன்னொரு கதாசிரியரை (என் தம்பி)உருவாக்கி எங்களுக்கு இனம் காட்டியதற்கும் சென்னைப்பித்தன் அவர்களுக்கு நன்றி. கதை முடிவுகள் இரண்டுமே நன்றாகக் கற்பனை செய்யப் பட்டுள்ளன.திரு.டிபி.ஆர் ஜோசப் குறிப்பிட்டிருப்பதுபோல இரண்டாவது முடிவுதான் யதார்த்தமாகவும், சமூக விழிப்பணர்வைத் தூண்டுவதாகவும் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //திரு சென்னைப்பித்தன் ஒரு நல்ல பத்திரிகை ஆசிரியராக திகழக்கூடும்.//

      என்னைக் கொஞ்சம் மேலே பறக்க விட்டிருக்கிறீர்கள்!
      திரு.நடனசபாபதி அவர்களின் பன்முகத்திறமை பற்றி நான் புதிதாக என்ன சொல்லி விடப்போகிறேன்?
      தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஐயா!

      நீக்கு