தொடரும் தோழர்கள்

புதன், ஆகஸ்ட் 07, 2013

ஒரு பொன்மாலைப் பொழுதும்,ஒரு பெண்ணின் அழைப்பும்!



மாலை நேரம்.

மணி 5.30த் தாண்டி விட்டது.

வழக்கம் போல் கடைக்குபோய்விட்டு அப்படியே சிறிது தூரம் நடந்து விட்டு வரலாம் என வீதியில் நடந்து சென்று கொண்டிருக்கிறேன்.

ஓரிடத்தில் நன்கு உடை அணிந்த ஒரு பெண்ணும்,ஆணும் நின்று கொண்டிருக்கிறார்கள்.

இருவர் கையிலும் ஒரு பை, சில கவர்கள்.

அவர்களைத் தாண்டும்போது என்னருகில் வருகின்றனர்.

அந்தப் பெண் சொல்கிறாள்”சார்! புதிதாக ஒரு காபி ஷாப் திறந்திருக்கிறோம்.இதோ அதற்கான அழைப்பிதழ்.அவசியம் வருகை தரவேண்டும்.இந்த அழைப்பிதழைக் கொண்டு வந்தால் இரண்டு ஐஸ் டீ இலவசம்”

கவரை வாங்கி உள்ளிருக்கும் அழைப்பிதழை எடுத்துப் பார்க்கிறேன்.

“ஓ!கடற்கரை அருகிலா?மாலை மட்டுமா?”கேட்கிறேன்

அந்தப் பெண் சொல்கிறாள்”இல்லை சார்.காலை 9 மணி முதல் இரவு வரை”

சரி நாளை மாலை நடையின்போது போய்ப் பார்த்து விட்டு(ஓசி ஐஸ் டீ!) வரலாம் என்று தீர்மானித்து “அவசியம் வருகிறேன்” என்கிறேன்.

அந்தப்பெண் கையிலிருக்கும் பையிலிருந்து ஒரு சிறிய அட்டைப் பெட்டியை எடுத்து “ஒரு சிறு அன்பளிப்பு”என்று சொல்லிக் கொடுக்கிறாள்.

வாங்கிக் கொண்டு நன்றி தெரிவித்து நகரத் தொடங்குகிறேன்.

அப்போது இன்னொரு இளைஞன் வந்து “சார்!ஒரு புகைப்படம்”என்கிறான்.கையில் கேமிரா.
 ”அதெல்லாம் வேண்டாம்” நான்.

“சார்!உங்களைப்போல சிலருடன் போட்டோ எடுத்துக் கொண்டுபோனால்தான் ,நாங்கள் சந்தித்ததை நம்புவார்கள்;கமிசன் கிடைக்கும்;ப்ளீஸ் சார்”

சம்மதித்து நான் நிற்கிறேன்.”மாதவி”என்று அழைக்கிறான் கேமிரா இளைஞன்.

அந்தபெண் என் அருகிலும்,முதல் இளைஞன் அவளுக்கு அந்தப்பக்கமும் நிற்க புகைப்படம் எடுக்கப்படுகிறது.

"சார்!உங்கள் ஃபோன் நம்பர்”

கைபேசி நம்பரைச் சொல்கிறேன்

“நன்றி சார்” என்கிறார்கள் கோரஸாக.

நான் வீட்டை நோக்கிப் புறப்படுகிறேன்
............................................................................
இது இன்றைய மாலை நிகழ்வு!

அதற்குப்பின் என்ன நடக்கலாம் என்பதைக் கற்பனை செய்து ஒரு சிறுகதையாக எழுத உங்களால் முடியுமா?

என் இடத்தில் உங்களை இருத்திக் கொள்ளுங்கள்!

நான் மனதுக்குள் என் கதையை முடிவு செய்து விட்டேன்.

ஓரிரு நாட்களுக்குப் பின் வெளியிடுவேன்.

அதற்குள் நீங்களும் உங்கள் கற்பனைக்குதிரையைத் தட்டி விடுங்களேன்.

இது போட்டியல்ல!

சும்மா ஒரு ஜாலி!

33 கருத்துகள்:

  1. கற்பனைக் குதிரையைத் தட்டிவிட முயற்சிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  2. ஒரு பொன்மாலைப் பொழுதும்,ஒரு பெண்ணின் அழைப்பும்!

    இதுவே கதை ..!

    பதிலளிநீக்கு
  3. புதுசு புதுசா யோசிக்கறீங்க தல! :)

    கதைகளை படிக்கும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்தால் மட்டும் போதாது!
      எழுதுங்கள்!
      நன்றி வெங்கட்

      நீக்கு
  4. ஐஸ் டீ இலவசமா ? அதுவும் பக்கத்துலேயே விடுவோமா என்ன ? வாங்க ஆளுக்கொரு டீ குடிச்சுட்டு வருவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டீயைக் குடிச்சுட்டு சுறு சுறுப்பாக் கதையை முடிச்சு வையுங்க மனோ!

      நீக்கு
  5. நல்ல ஐடியாதான்... இதையே ஒரு தொடர்பதிவாக்கிறலாம் போல:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் நினைத்தேன்;ஆனால் விருப்பமுள்ள எவரும் எழுதட்டுமே என விட்டு விட்டேன்
      நன்றி ஜோசப் சார்

      நீக்கு
  6. க்ரைம் நாவல் போல் ஏதேனும் விவகாரம் ஐஸ் டீக்கு பின்னால் இருக்குமோ...:))

    படிக்க காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. போட்டோவும் எடுத்துக்கொண்டு, போன் நம்பரும் கொடுத்துள்ளீர்கள். பல்வேறு தொல்லைகள் தொடர உள்ளன. உங்களுக்கு மட்டுமல்ல. கற்பனைக்கதைகளை எழுதும் எல்லோருக்குமே. ;)

    பதிலளிநீக்கு
  8. கதைகளை விரைவாக எழுதுங்கள்... படிக்க ஆவலாய் இருக்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஒரு முடிவுதான் எழுதுவேன்.
      மற்றதெல்லாம் நீங்கள்தான் எழுதவேண்டும்!
      நன்றி குமார்

      நீக்கு
  9. சுவாரஸ்யமாய் தொடங்கி எங்களை முடிக்க சொல்லிவிட்டீர்களே! முயற்சித்து பார்க்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. கொஞ்சம் தாமதமாக வந்தாலும், இங்கிருந்தே படிக்கிறேன்... கற்பனையை பறக்க விட்டுட்டேன்

    பதிலளிநீக்கு
  11. படித்துவிட்டேன். தொடர்கிறேன் அகப்பட்டவர் என்ன ஆனார் என அறிய .

    பதிலளிநீக்கு
  12. யார் யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை. அதன் 'பின்விளைவை' இப்போது சொல்லலாமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவைதாம் அவை!

      http://chennaipithan.blogspot.com/2013/08/blog-post_7.html
      http://chennaipithan.blogspot.com/2013/08/blog-post_9.html--வே.நடனசபாபதி
      http://chennaipithan.blogspot.com/2013/08/blog-post_16.html.சென்னைபித்தன்
      http://chennaipithan.blogspot.com/2013/08/blog-post_17.html-வாசுதேவன்
      http://chennaipithan.blogspot.com/2013/08/blog-post_19.html-ரூபக்ராம்

      நீக்கு