தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஆகஸ்ட் 04, 2013

ஹாலிடே!ஜாலிடே!! (பதினாறு வயதினிலே!)



நான் குதிரைப் பந்தயத்துக்குப் போயிருந்தேன்.

முதல் பந்தயத்தில் 2ஆம் நம்பர் குதிரை மீது பணம் கட்ட எண்ணினேன்.

அப்போது”நம்பர் 6”என்று ஒரு குரல் கேட்டது.

ஏதோ பிரமை என்று ஒதுக்கி விட்டு 2 இல் கட்டப் போனேன்

மீண்டும் குரல்”நம்பர் 6” என்றது.

குரல் வந்த திசையில் பார்த்தேன்.

ஒரு தவளை இருந்தது. அதுதான் பேசியிருக்குமோ!

கட்டிப் பார்க்கலாமே.

ரூ.1000 கட்டினேன்.—ஒன்றுக்கு 10 விலையில்

6 வென்றது எனக்கு 10 ஆயிரம் கிடைத்தது.

எனக்கு ஆச்சரியம்.

அடுத்தரேஸ் ஆரம்பிக்கும் முன் தவளையைப் பார்த்தேன்.

நம்பர் 8 என்றது.

யோசிக்காமல் 8 இன் மீது 10000 கட்டினேன்.

அது ஒரு தொத்தல் குதிரை எனவே ஒன்றுக்கு 20 விலை!

8 வென்றது.எனக்கு 2 லட்சம் கிடைத்தது.

எனக்கு மிக மிக மகிழ்ச்சி.

தவளையையும் எடுத்துக் கொண்டு,5 நட்சத்திர ஒட்டலில் ஒரு அறைஎடுத்தேன்.

தவளையிடம் கேட்டேன்”உனக்கு எப்படி நன்றி சொவது என்றே தெரியவில்லை!உனக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும்;நீயே சொல்,என்ன வேண்டும்?”

தவளை சொன்னது “என்னை முத்தமிடு”

இவ்வளவு செய்த தவளைக்கு நாம் இது கூடச் செய்யக் கூடாதா?

தவளையை முத்தமிட்டேன்.

முத்தமிட்டுக் கொண்டிருக்கும்போதே  அது என் அணைப்பில் ஒரு பதினாறு வயது அழகிய 
பெண்ணாக மாறியது.

அப்போதுதான் மைலார்ட் போலிஸ் உள்ளே வந்து எங்களைப் பிடித்தது!...........”

(நான் சொல்வதெல்லாம் உண்மையைத் தவிர வேறொன்றில்லை!”

..............கைதான ஒருவரின் வாக்குமூலம்!!

ஹா,ஹா,ஹா!

12 கருத்துகள்:

  1. சூப்பர்ங்க. வாய் விட்டுச் சிரித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. இப்போ மீண்டும் தவளையை பார்த்தீர்களா?

    பதிலளிநீக்கு
  3. போயும் போயும் தவளையை ........

    இரண்டு கோடி கொடுத்தாலும் விரும்பிப்பார்க்கவோ தொடவோ மாட்டேன் ஐயா, நான்

    ஒருசில ஜந்துக்களைக்கண்டால் எனக்கு ஒரே அருவெறுப்பு. அதில் தவளையும் ஒன்று.

    படைப்பு படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

    ஹாலிடே!ஜாலிடே!! (பதினாறு வயதினிலே!) அல்லவா! அதனால் இருக்குமோ ;)))))

    நீங்காத நினைவலைகள் பகிர்வுக்கு வாழ்த்துகள், ஐயா.



    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. கக்கு!இது ரெண்டாவது தடவை!எனவே பொறுத்தோம்! :)))
      நன்றி

      நீக்கு
  5. பதிவின் ஆரம்பத்தைப் படித்தபோது நீங்கள் தான் குதிரைப் பந்தயத்திற்கு போயிருந்தீர்களோ என நினைத்தேன்.வழக்கம்போல் ஏமாந்தேன்! கேழ்வரகில் நெய் வடிகிறதென்று சொல்பவதை நிஜமென்று நம்பி கேட்பவர்கள் இருக்கும்போது இது போல்தான் நடக்கும்.

    பதிலளிநீக்கு
  6. அதிஷ்டம் என நினைப்பது சில நேரங்களில் ஆபத்தாய் முடிவதும் உண்டு என்பதை விளக்கிய வரிகள் .

    பதிலளிநீக்கு
  7. The Princess and the Frog படத்தின் உல்டா போல உள்ளது உங்கள் உண்மைக் கதை :)

    பதிலளிநீக்கு
  8. அடப்பாவமே இப்பிடியெல்லாமா பீலா விடுவாயிங்க, ஹோட்டலுக்கு உள்ளே போயி பெண்ணா மாறினதுனால பிரச்சினை இல்லை அதே வீட்டில் பெண்ணாக மாறி இருந்தால் அவரின் நிலைமை என்ன ?

    ஹா ஹா ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு