தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013

நிறவெறி காரணமாக ஒரு கொலை!



என் அறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

எதிர் அறைக்குப் புதிதாக ஒருவன் குடி வந்தான் போலிருக்கிறது.

கம்பிகளின் வழியே அவனைப் பார்த்தேன்.

முதல் பார்வையிலேயே அவனை எனக்குப் பிடிக்காது போயிற்று.

காரணம் அவன் நிறம்!

அப்படி ஒரு வெள்ளை!

என் காதுபட பலர் அந்த நிறத்தைப் பாராட்டிப் பேசக் கேட்டேன்.

ஆனால் எனக்கு அந்த நிறத்தைப் பார்த்தால் இனம் புரியாத வெறுப்பும் எரிச்சலும்தான் வந்தது.

என்ன சோகை பிடித்த மாதிரி நிறம்.

வடக்கிலிருந்து வந்தவனாக இருப்பானோ?

அவன் பெரும்பாலும் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தது எரிச்சலை மேலும் அதிகப் படுத்தியது.

அவனைப் பார்க்கப் பார்க்க வெறுப்பும் அதிகமாகியது!

சில மாதங்கள் கழிந்தன!

ஒரு நாள் .............

உறங்கிக் கொண்டிருந்த நான் ஏதோ கெட்ட கனவு கண்டு கண் விழித்தேன்.

திடுக்கிட்டேன்.

எனக்கு மிக அருகில் அவன்;என் முகத்தையே உற்றுப் பார்த்தபடி.

அவசரமாக எழுந்து நகர்ந்தேன்.

அவன் என்னை பின் தொடர்ந்தான்.

நின்றேன்.

அவனை நேருக்கு நேர் பார்த்து முறைத்தேன்.

அவன் அதை லட்சியம் செய்யாமல் என் மீது பாய்ந்தான்.

இத்தனை நாள் வெறுப்பும் ஒன்று சேர்ந்து என் கைகளில் பலமாக வந்த்து.

என் நீண்ட நகங்களால்  அவன் முகத்தில் பிராண்டினேன்

வேகமாகத் தள்ளினேன்.

அவன் தள்ளிப் போய் தரையில் தலை பலமாக அடிபட விழுந்தான்.

எழுந்திருக்கவேயில்லை.

வெளியிலிருந்து கூச்சல்”அய்யய்யோ!கொன்னுட்டா!

அருகில் சென்று முகர்ந்து பார்த்தேன்.

ஆம் !இறந்து விட்டான்!

இனித் தொந்தரவு இல்லை!

.......சத்யா

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி.........
ஏழு வயது சத்யாவைக் கூடுவதற்காகப் போன மூன்றரை வயது செம்பியன்,அவளால் தாக்கப் பட்டுப் படு காயமடைந்து மரணமடைந்தான்!செம்பியன் என்பது வெள்ளைப் புலி.சத்யா என்பது வங்கப் புலி.நடந்த இடம் சென்னை மிருக்காட்சி சாலை.


18 கருத்துகள்:

  1. இந்தச்செய்தியை நானும் செய்தித்தாளின் விபரமாகப் படித்தேன்.

    ஆனாலும் என்ன பிரயோசனம்?.

    உங்களால் மட்டுமே இதை அழகாக இப்படி ச்ஸ்பென்ஸ் கொடுத்து எழுத முடிந்துள்ளது. ;)

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    பதிலளிநீக்கு
  2. இனிய வணக்கம் ஐயா ..
    நலமா??
    செய்தியை கதையாக்கிய விதம் மிகவும் அழகு..

    பதிலளிநீக்கு
  3. செய்தியை கதையாக மாற்றுவதென்பது ஒரு கலை. அதில் நீங்கள் மன்னர் என்பதை நீங்கள் மறுபடியும் நிரூபித்துவிட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  4. திக் திக்...... சஸ்பென்ஸ்... சூப்பர் அய்யா...

    பதிலளிநீக்கு

  5. அடடா இப்பிடிஎல்லாமும் கதை எழுதலாமா ?

    ஹா ஹா ஹா ஹா சூப்பர் தல...!

    பதிலளிநீக்கு
  6. சூப்பர்ங்க... அருமையான திகில் கதை... அதுவும் இத்துனூண்டு செய்தியிலருந்து....

    பதிலளிநீக்கு
  7. சூப்பர்ங்க, அருமையான திகில் கதை... அதுவும் இத்தனூண்டு செய்தியிலருந்து... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. சுருக்கமா ஒரு த்ரில்லர் படிச்ச உணர்வு சூப்பர்

    பதிலளிநீக்கு
  9. வல்லவருக்கு புல்லும் ஆயுதம் என்பது சரிதான்
    நாங்க எல்லாம் ஈட்டி கிடைச்சும் உபயோகிக்கத் தெரியாம
    முதுகு சொரிந்து கொண்டிருக்கிறோம்
    நிகழ்வை சொல்லிச் சென்றவிதம் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. ஒரு செய்தியை அழகிய கதையாக மாற்றியிருக்கிறீர்கள்...

    பதிலளிநீக்கு
  11. முதல்லயே அது பூனையா இருக்குமோனு டவுட்டு..இப்போல்லாம் உங்க பதிவுகளை ரொம்ப உஷாராப் படிக்க வேண்டியிருக்கு.

    பதிலளிநீக்கு
  12. சிந்தனை புதுமை. குட்டி த்ரில் படம் பார்த்த அனுபவம். நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு