தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஆகஸ்ட் 30, 2013

சந்திப்போமா?!



 பதிவர் திருவிழா 2013
ஒரு வாரமாகக் கழுத்து வலி.

எனவே பதிவேதும் எழுதவில்லை.

திருவிழாவுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இடையில் இருக்கும் நிலையில் எல்லோரையும் போல் என் எதிர்பார்ப்பும் கூடிக் கொண்டே போகிறது.

அனைத்துப் பதிவர்களின் ஈடுபாடும்,பங்களிப்பும் பிரமிக்க வைக்கிறது.

பதிவர்கள் அனைவரும் ஒரு குடும்பம் என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது

நிகழ்ச்சி நிரலை காணும்போது ’ஒரு நாள் போதுமா’ என்று பாடத் தோன்றுகிறது.

சென்ற ஆண்டு ஒரு புத்தக வெளியீடு.

இந்த ஆண்டு நான்கு புத்தகங்கள்!

அடுத்த ஆண்டு?

இப்போதே பல பதிவர்கள் தங்கள் படைப்புகளை அடுத்த திருவிழாவில் வெளியிடும் திட்டங்களில் இறங்கியிருப்பார்கள்.

புத்தக வெளியீட்டுக்கே ஒரு நாள் ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு,திருவிழா இரண்டு நாள் நிகழ்ச்சியாகக் கூட மாறலாம்!

நினைக்கும்போதே மிக மகிழ்ச்சியாக இருக்கிறது

இப்போது வரவிருக்கும் விழாவில் கடைப்பிடிக்க வேண்டிய சில நாகரிகங்கள்......

1.அரங்கத்தில் புகைபிடித்தலை தவிர்த்துக் கொள்ளவும்.

2.
மது அருந்திவிட்டு அரங்கிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளவும்.

3.
பெண் பதிவர்களின் அனுமதியின்றி அவர்களை புகைப்படம் எடுப்பதை தயவுகூர்ந்து தவிர்த்துக் கொள்ளவும்.அனுமதியோடு புகைப்படம் எடுக்கும் பட்சத்தில் அவர்கள் அனுமதியில்லாமல் வலையில் பதிவதை தவிர்த்துக் கொள்ளவும்.

4.
ஒவ்வொரு பதிவரும் சபை நாகரீகத்தை கடைபிடிக்கவும்.

ஞாயிறன்று சந்திப்போம்!

13 கருத்துகள்:

  1. உடம்பைப் பார்த்துக் கொள்ளவும் பித்தரே

    பதிலளிநீக்கு
  2. நான்கும் நன்றாகச் சொன்னீர்கள். எல்லா பதிவர்களும் இதை மனதில் கொள்ளவேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. முக்கியமான கடைப்பிடிக்க வேண்டிய நாகரிகங்கள்.....

    பதிலளிநீக்கு
  4. சென்று வருக! புகழ் கொண்டு வருக!! பதிவர் விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. அனைத்துப் பதிவர்களின் ஈடுபாடும்,பங்களிப்பும் பிரமிக்க வைக்கிறது.

    பதிவர்கள் அனைவரும் ஒரு குடும்பம் என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது

    இனிய வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  6. இந்த ஆண்டு கூட்டத்தின் சிறப்பம்சமே புத்தக வெளியீடுதான். அதுவும் நான்கு புத்தகங்கள். வலைத்தளங்களில் எழுத வரும் பலருக்கும் இந்த கனவு நிச்சயம் இருக்கும். நம்முடைய எழுத்தையும் நான்கு பேர் படித்து பாராட்ட வேண்டுமே என்ற ஏக்கம் இல்லாதவர் இருக்க முடியாது. அதை எட்டிப் பிடிக்கும் வாய்ப்பு கைகூடுவதென்பது அத்தனை எளிதல்ல. ஆகவே இந்த மாநாட்டில் தங்களுடைய முதல் படைப்பை வெளியிடும் நான்கு பதிவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். பாராட்டுவதுடன் நின்றுவிடாமல் நான்கு புத்தகங்களையும் மாநாட்டுக்கு வரும் அனைவருமே வாங்கிச் செல்வது அவர்களை ஊக்குவிப்பதோடு நாளை நமக்கும் அத்தகைய வாய்ப்பு கிடைக்கும் நாளில் நம்முடைய படைப்புகளையும் வாங்க ஆள் இருப்பார்களே?

    பதிலளிநீக்கு
  7. அப்பாடா.............கிட்டத்தட்ட ஏழு,எட்டு மாதங்களாக ஐயா ப்ளாக் பார்க்கவே முடியல.இன்னிக்கு சரியா இருக்கு.///விழா சிறப்புற வாழ்த்துக்கள்,கடந்த ஆண்டு போல் இவ்வாண்டும் அனைவரும் கூடி,ஒழுக்கம் பேணி விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்!

    பதிலளிநீக்கு
  8. Good advice and it seems very much needed too. Hope and trust the same will be abided by the participants.

    பதிலளிநீக்கு
  9. பதிவர் திருவிழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  10. புலவர் ஐயா அவர்களின் புத்தக வெளியீட்டின் போது
    நடந்ததை நினைவு கூர்ந்தேன் .
    சிரிப்புத் தான் வந்தது.

    பதிலளிநீக்கு