தொடரும் தோழர்கள்
வியாழன், அக்டோபர் 13, 2011
வங்கத்திலோடி வரும் நீரின் மிகையால்......
ஒரு முறை இரு அரசர்கள் போருக்குத் தயாராக ரோஹிணி நதிக் கரையில் படைகளை அணிவகுத்து நிறுத்தினர்.இதை அறிந்த புத்தர் அங்கு விரைந்து சென்று படைகளுக்கு நடுவில் நின்றார்.அச்சண்டைக்குக் காரணத்தைக் கேட்டறிந்தார்.இரு மன்னர்களும் அந்நதி நீர் முழுவதும் தமக்கே என்றனர்.புத்தர் அம்மன்னர்களைப் பார்த்துப் பேசலானார்.
அந்நதியிலிருந்து சிறிது நீர் எடுத்து "இந்நீரின் மதிப்பு என்ன?" என வினவினார்.மன்னர்கள் பதிலளித்தனர்-இயற்கையில் இலவசமாகக் கிடைக்கும் நீருக்குப் பெரிய மதிப்பேதும் இல்லை என்று.
புத்தர் கேட்டார்,"மன்னர்களே,உங்கள் மதிப்பு என்ன?"
"அதிகம்"அவர்கள் பதில்.
"அரசிகளின் மதிப்பென்ன?"புத்தர் வினவினார்.இருவரும் பதிலளித்தனர்"நான் என் ராணியை மிக நேசிக்கிறேன்.அவ்ள் மிக மதிப்பு வாய்ந்தவள்."
"உங்கள் படைகளின் மதிப்பென்ன?"
"என் படை வீரர்கள் எனக்கு மிக முக்கியமானவர்கள்.மிக மதிப்பு வாய்ந்தவர்கள்"
புத்தர் கேட்டார்"மன்னர்களே!மதிப்பு வாய்ந்த உங்கள் உயிரை,நீங்கள நேசிக்கும் உங்கள் அரசியின் உயிரை,முக்கியமான வீரர்களின் உயிர்களைக் கடலில் சென்று வீணாகும் இந் நதி நீருக்காகத் துறக்கப் போகிறீர்களா?இந்த ஆற்றில் உங்கள் ரத்த ஆற்றைக் கலக்கப்போகிறீர்களா?சிந்தியுங்கள்"
மன்னர்கள் தங்கள் ஆயுதங்களை நழுவ விட்டனர்.இருவரும் கலந்து பேசி ஒரு நல்ல முடிவுக்கு வந்தனர்.நதி நீரைப் பங்கிட்டுக் கொண்டனர்.
அன்று ஒரு புத்தர் இருந்தார்.அவர் அறிவுரைகளைக் கேட்டு நடக்கும் அறிவும்,பணிவும் அம்மன்னர்களுக்கு இருந்தது.
ஆனால் இன்று?எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்.பொது நலனைப் பற்றி நினைக்க யாரும் தயாராக இல்லை.இன்றைய குறு நில மன்னர்கள் தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் பொது நலனைப் புறக்கணிக்கிறார்கள்.
கால இயந்திரத்தில் ஏறி அந்தக்காலத்துக்குப் போக முடியுமா ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ம் ...
பதிலளிநீக்குகருத்து மிக்க குட்டி கதை ...
பதிலளிநீக்குஇலவசமாய் கிடைப்பது அனைத்தும் விலை மதிக்க முடியாதது என்பது என் எண்ணம்..
பதிலளிநீக்குஅருமை ஐயா ,நல்ல கருத்து
பதிலளிநீக்குத.ம 4
puththar arumaiyana kelviyaithan keettirukkirar
பதிலளிநீக்குசிந்திக்க வைக்கும் பகிர்வு.
பதிலளிநீக்குநம்ம தமிழ்நாடு கர்நாடகா கேரளா இதானே இப்போ தண்ணிக்காக மன்னர்களை போல் அடித்துக் கொள்கிறார்கள் அரசியல் ஆதாயத்திற்காக நல்ல உவமை அருமை நண்பரே
பதிலளிநீக்குஎல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்.பொது நலனைப் பற்றி நினைக்க யாரும் தயாராக இல்லை.இன்றைய குறு நில மன்னர்கள் தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் பொது நலனைப் புறக்கணிக்கிறார்கள்.
பதிலளிநீக்குமுத்தாய்ப்பான வரிகள் நிதர்சன்மான அற்புதம்.
முன்பு சொல்பவனும் ஞானியாய் இருந்தான்
பதிலளிநீக்குகேட்பவனும் அறிவுள்ளவனாய் இருந்தான்
செயல்படுபவனும் அடங்குபவனாய் இருந்தான்
இப்போது எல்லாம் தலைகீழ்
அருமையான் அபதிவு
த.ம 6
அருமையான கதை ஐயா
பதிலளிநீக்குபொதுநலன் என்பது சுத்தமாக நீர்த்துப் போன
இப்புவியில் அன்றோ புத்தர்களாய் சிலர் அவனித்து
பொதுநலன் வியாபித்தனர். கேட்பதற்கும் தயாராய் இருந்தனர்..
இன்று யாருக்கு சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்காய்
பயனற்று போகிறது..
கதை நன்று ஐயா
வருத்தத்திற்குரிய உண்மை ஐயா.
பதிலளிநீக்குவணக்கம் ஐயா, நலமா?
பதிலளிநீக்குவிவாத மேடை கொஞ்சம் ரணகளமாகியதால் வர முடியவில்லை.
சிந்திதுச் செயற்பட்டால் எத்தகைய அழிவுகளையும் தடுக்கலாம் எனும் நீதியினை விளக்கி நிற்கும் அருமையான கதை.
அடுத்த உலகப்போர் மூண்டால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்கிறார்கள்.சரியான சமயத்தில் மறைமுகமாக எச்சரித்து இருக்கிறீர்கள்.நல்ல பதிவு.
பதிலளிநீக்குநல்ல ஒரு குட்டிக்கதை ஜயா.பல விடயங்களைச்சொல்கின்றது
பதிலளிநீக்குநல்ல கதை ஐயா... காலச்சக்கரத்தில் ஏறிப் போக முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்....
பதிலளிநீக்குஐயா! இன்று புத்தரும் இல்லை
பதிலளிநீக்குபுத்தியும் இல்லை!
அருமை!
த.ம.ஓ 13
புலவர் சா இராமாநுசம்
தண்ணீர்ப் பிரச்னை, இலவசத்துக்கு என்றும் மதிப்பில்லை போன்ற பல விஷயங்களை மறைபொருளாய் உணர்த்தியது புத்தர் கதை. அருமை.
பதிலளிநீக்குஅண்ணே அருமையான் பதிவு!
பதிலளிநீக்குஅருமையான கதை.
பதிலளிநீக்குநல்ல அறிவுரை !
பதிலளிநீக்குநமக்குதான் பொருமையில்லையே, யோசிக்கவும் மாட்டார்கள்...!!!
பதிலளிநீக்குஅருமையான சாட்டையடி பதிவு தல...!!!
பதிலளிநீக்குநண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
பதிலளிநீக்கு// ம் ...//
ஓ!
நன்றி.
கந்தசாமி. கூறியது...
பதிலளிநீக்கு// கருத்து மிக்க குட்டி கதை ...//
நன்றி.
suryajeeva கூறியது...
பதிலளிநீக்கு//இலவசமாய் கிடைப்பது அனைத்தும் விலை மதிக்க முடியாதது என்பது என் எண்ணம்..//
சரி.நன்றி.
M.R கூறியது...
பதிலளிநீக்கு//அருமை ஐயா ,நல்ல கருத்து
த.ம 4//
நன்றி ரமேஷ்.
வைரை சதிஷ் கூறியது...
பதிலளிநீக்கு//puththar arumaiyana kelviyaithan keettirukkirar//
நன்றி சதீஷ்.
shanmugavel கூறியது...
பதிலளிநீக்கு// சிந்திக்க வைக்கும் பகிர்வு.//
நன்றி சண்முகவேல்.
காட்டு பூச்சி கூறியது...
பதிலளிநீக்கு//நம்ம தமிழ்நாடு கர்நாடகா கேரளா இதானே இப்போ தண்ணிக்காக மன்னர்களை போல் அடித்துக் கொள்கிறார்கள் அரசியல் ஆதாயத்திற்காக நல்ல உவமை அருமை நண்பரே//
நன்றி காட்டு பூச்சி.
இராஜராஜேஸ்வரி கூறியது...
பதிலளிநீக்குஎல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்.பொது நலனைப் பற்றி நினைக்க யாரும் தயாராக இல்லை.இன்றைய குறு நில மன்னர்கள் தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் பொது நலனைப் புறக்கணிக்கிறார்கள்.
//முத்தாய்ப்பான வரிகள் நிதர்சன்மான அற்புதம்.//
நன்றி இராஜராஜேஸ்வரி.
Ramani கூறியது...
பதிலளிநீக்கு//முன்பு சொல்பவனும் ஞானியாய் இருந்தான்
கேட்பவனும் அறிவுள்ளவனாய் இருந்தான்
செயல்படுபவனும் அடங்குபவனாய் இருந்தான்
இப்போது எல்லாம் தலைகீழ்
அருமையான் அபதிவு//
நன்றி ரமணி.
அன்று ஒரு புத்தர் இருந்தார்.அவர் அறிவுரைகளைக் கேட்டு நடக்கும் அறிவும்,பணிவும் அம்மன்னர்களுக்கு இருந்தது.
பதிலளிநீக்குசிந்திக்க வைக்கும் பகிர்வு.
மகேந்திரன் கூறியது...
பதிலளிநீக்கு//அருமையான கதை ஐயா
பொதுநலன் என்பது சுத்தமாக நீர்த்துப் போன
இப்புவியில் அன்றோ புத்தர்களாய் சிலர் அவனித்து
பொதுநலன் வியாபித்தனர். கேட்பதற்கும் தயாராய் இருந்தனர்..
இன்று யாருக்கு சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்காய்
பயனற்று போகிறது..
கதை நன்று ஐயா//
நன்றி மகேந்திரன்.
செங்கோவி கூறியது...
பதிலளிநீக்கு//வருத்தத்திற்குரிய உண்மை ஐயா.//
நன்றி செங்கோவி.
நிரூபன் கூறியது...
பதிலளிநீக்கு// வணக்கம் ஐயா, நலமா?
விவாத மேடை கொஞ்சம் ரணகளமாகியதால் வர முடியவில்லை.
சிந்திதுச் செயற்பட்டால் எத்தகைய அழிவுகளையும் தடுக்கலாம் எனும் நீதியினை விளக்கி நிற்கும் அருமையான கதை.//
நன்றி நிரூ.
வே.நடனசபாபதி கூறியது...
பதிலளிநீக்கு//அடுத்த உலகப்போர் மூண்டால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்கிறார்கள்.சரியான சமயத்தில் மறைமுகமாக எச்சரித்து இருக்கிறீர்கள்.நல்ல பதிவு.//
நன்றி சபாபதி அவர்களே.
K.s.s.Rajh கூறியது...
பதிலளிநீக்கு//நல்ல ஒரு குட்டிக்கதை ஜயா.பல விடயங்களைச்சொல்கின்றது//
நன்றி ராஜ்.
FOOD கூறியது...
பதிலளிநீக்கு//பதில் சொல்ல முடியாத கேள்வி.//
நன்றி ஐயா.
வெங்கட் நாகராஜ் கூறியது...
பதிலளிநீக்கு//நல்ல கதை ஐயா... காலச்சக்கரத்தில் ஏறிப் போக முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்....//
நன்றி வெங்கட்.
புலவர் சா இராமாநுசம் கூறியது...
பதிலளிநீக்கு// ஐயா! இன்று புத்தரும் இல்லை
புத்தியும் இல்லை!
அருமை!
த.ம.ஓ 13//
நன்றி ஐயா.
கணேஷ் கூறியது...
பதிலளிநீக்கு//தண்ணீர்ப் பிரச்னை, இலவசத்துக்கு என்றும் மதிப்பில்லை போன்ற பல விஷயங்களை மறைபொருளாய் உணர்த்தியது புத்தர் கதை. அருமை.//
நன்றி கணேஷ்.
விக்கியுலகம் கூறியது...
பதிலளிநீக்கு//அண்ணே அருமையான் பதிவு!//
நன்றி விக்கி.
DrPKandaswamyPhD கூறியது...
பதிலளிநீக்கு// அருமையான கதை.//
நன்றி ஐயா.
koodal bala கூறியது...
பதிலளிநீக்கு//நல்ல அறிவுரை !//
நன்றி பாலா.
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு//நமக்குதான் பொருமையில்லையே, யோசிக்கவும் மாட்டார்கள்...!!!//
உண்மை.
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு//அருமையான சாட்டையடி பதிவு தல...!!!//
நன்றி மனோ.
ரிஷபன் கூறியது...
பதிலளிநீக்கு//அன்று ஒரு புத்தர் இருந்தார்.அவர் அறிவுரைகளைக் கேட்டு நடக்கும் அறிவும்,பணிவும் அம்மன்னர்களுக்கு இருந்தது.
சிந்திக்க வைக்கும் பகிர்வு.//
நன்றி ரிஷபன்.
அருமையான சிந்தனைக் கதை. புத்தர் போதனை புற்றுக்குள் போனதால் தான் இன்று அநீதிகளால் உலகு பொத்தலாகி உள்ளது. வாழ்த்துகள் சகோதரரே!.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com