சென்ற கும்பமேளாவின்போது(2000-2001) நான் அலகாபாதில் பணி புரிந்து
கொண்டிருந்தேன். கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும்
மகாமகம் போன்றதுதான் இக் கும்பமேளா என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.ஒரு
அரசுடைமையாக்கப் பட்ட வங்கியில் முதன்மை மேலாளராகப் பணி புரிந்து வந்ததால் அரசு
அதிகாரிகளின் துணையுடன் முக்கிய நாட்களில் திரிவேணி சங்கமத்தில் எளிதாக நீராட
முடிந்தது.
இக் கும்பமேளா பற்றி எண்ணும்போதெல்லாம்,அதனுடன் சம்பந்தப்பட்ட பல
விஷயங்கள் சேர்ந்தே நினைவுக்கு வரும். முதலில் பிரமிக்க வைக்கும் அந்த மக்களின்
நம்பிக்கை.மாக மாதம் என்றழைக்கப் படும் அந்த மாதம் முழுவதும் பல ஊர்களிலிருந்து
கையில் மிகக் குறைந்த சமையல் சாதனங்கள், துணிமணி களுடன் வந்து,கிடைத்த
இடத்திலே தங்கி (பல நேரங்களில் வானமே கூரை) அந்த நடுக்கும் குளிரையும் பொருட்
படுத்தாமல் தினமும் நதியில் நீராடி கடவுளை நினைத்தே வாழும் அம்மக்களின் நம்பிக்கை.
(இரண்டு ஸ்வெட்டர் அணிந்தும் பகல் நேரத்தில் நடுங்கிக் கொண்டே வங்கியில் பணி
புரிந்து வந்தவன் நான்.)
அடுத்தபடியாக மூன்று கோடி மக்கள் வந்திருந்தும் எந்த விதமான அசம்பாவிதமும் நிகழாமல்
திறமையாக அனைத்தையும் கையாண்ட நிர்வாகம்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்தாலும் தவறாமல் சரியான நாளில் எங்கிருந்தெல் லாமோ
வரும் சாதுக்கள்கூட்டம்.
இவை அனைத்தையும் பின் தள்ளி இன்று நினைத்தாலும் என் மனத்தைப் பிசையும்,
கண்களில் கண்ணீர் வரவழைக்கும்,செய்தி.இதைப் பத்திரிகையில் படிக்கும்போதே என்
கண்களில் கட்டுப்பாடற்றுக் கண்ணீர் வழியத்தொடங்கியது.
அந்தத் திருவிழாவுக்குத் தங்கள் வயதான தாய்/தந்தையுடன் வந்த சிலர் அந்தக்
கூட்டத்தில் அவர்களைத் தனியே தவிக்க விட்டுச் சென்று விட்ட கொடுமை! எழுத்தறிவற்ற
பாமரர்களான அவர்கள் தங்களைப் பற்றி,தங்கள் ஊர் பற்றி, உறவினர் பற்றி எந்தத்தகவலும்
கொடுக்க இயலாதவர்களாய் , நடுங்கிக் கொண்டு, அறியாத ஒரு ஊரில்,கோடிக்கணக்கான
மக்கள் கூட்டத்தில், நிர்க்கதியாக நிற்கும் நிலையை எண்ணிப் பார்த்தால் உங்கள் நெஞ்சில்
ரத்தக்கண்ணீர் வரவில்லையா?ஏன் இந்த நிலை?இதற்குக் காரணம் வறுமையா? பெற்றோரைக்
கூட அநாதையாகத் தவிக்க விடும் அளவுக்கு அவ்வளவு கொடுமையானதா அவர்கள்
வறுமை?
என்ன செய்யப் போகிறோம் நாம்?
(இது ஒரு மீள் பதிவு)
இப்படியும் மனிதர்கள்!பெருமூச்சு விடுவது தவிர வேறென்ன செய்ய???
பதிலளிநீக்குபெற்றோரைக்
பதிலளிநீக்குகூட அநாதையாகத் தவிக்க விடும் அளவுக்கு அவ்வளவு கொடுமையானதா அவர்கள்
வறுமை?
கொடிது கொடிது...
வறுமை கொடிது...
வயிற்றில் பசி என்னும் தீ எரிந்துகொண்டிருக்கும் போது உறவாவது... அன்பாவது....
இதுதான் மறுக்கமுடியா உண்மை அன்பரே..
என்ன அநியாயம் ஐயா..படிக்கவே நெஞ்சு பதறுகிறதே..
பதிலளிநீக்குஇந்த கொடுமை கும்பமேளாவில் மட்டுமல்ல. இங்குகூட நடக்கிறது. சில நாட்களுக்கு முன் ஒருவர் தன் வயதான நோய்வாய்பட்ட தந்தையை பொது மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து வந்து ‘Out Patient’ வரிசை அருகே விட்டுவிட்டு ஓடியதாக செய்தித்தாளில் படித்தேன். மைய அரசு வயதான முதியோர்களுக்கான ‘சமூகபாதுகாப்பு திட்டம்’ ஒன்றை உடனே கொண்டு வரவேண்டும். அதற்கான நிதியை நன்கொடையாகவோ அல்லது ‘Education க்காக Surcharge’ வசூலிப்பதுபோல் வருமான வரியோடு சேர்த்து பெறலாம். இந்த நேரத்தில் ‘பானையிலே சோறு இருந்தால் பூனைகளும் சொந்தமடா’ எனக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய திரைபடப்பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குஇப்பணியும் மனிதர்களா..
பதிலளிநீக்குமனம் வலிக்கிறது!
புலவர் சா இராமாநுசம்
மனதைப் பிசைகிறது. என்ன செய்தும் பெற்றோரைக் காத்தல் பிள்ளைகளின் கடன் இல்லையா... எப்படி இப்படி இருக்க முடிகிறது?
பதிலளிநீக்குபெற்றோரை தவிக்க விடுவது வறுமையோ இயலாமையோ எதுவாங்க இருந்தாலுமே கொடுமையான விஷயம் சார்..
பதிலளிநீக்குஇன்றைய முதலாளித்துவ, வியாபாரமயமாகிவிட்ட உலகில் மனிதம் செத்துப் பலகாலமாகிவிட்டது.
பதிலளிநீக்குபக்தி என்ற போர்வையில் திரியும் மிருகங்களில் ஒரு சிறு அளவே நீங்கள் குறிப்பிட்டது... மதுரா என்ற ஊரில் கண்ணன் வாழ்ந்ததாக கூறப்படும் இடத்தில் எத்தனை இளம் விதவைகள் நிர்க்கதியாய் விடப்பட்டு..
பதிலளிநீக்குநெஞ்சில் ரத்தம், கண்ணில் கண்ணீர்.....
பதிலளிநீக்குபெற்றோரை தவிக்கவிடும் இவர்கள் நிலைமை இன்னும் மோசமாகுமே, உணர்வார்களா...???
பதிலளிநீக்குமனம் கனக்கச் செய்யும் பதிவு
பதிலளிநீக்குஇப்போது அவர்கள் விவரமாக நடந்து கொண்டதாக
எண்ணிக் கொள்ளலாம்
கடைசிக் காலங்களில் மனம்
அவர்களை சித்திரவதை செய்தே கொல்லும்
த.ம 4
பெற்றோரைக்கூட அநாதையாகத் தவிக்க விடும் அளவுக்கு//
பதிலளிநீக்குகேவலத்தின் உச்சம்...
மனிதர்களில் இப்படியும் இருக்கிறார்களே என எண்ணும்பொழுது மனம் வேதனை அடைகிறது ஐயா.
பதிலளிநீக்குtamil manam 5
திரு. நடனசபாபதி கூறிய மாதிரி அரசாங்கம் தான் இதை செய்ய வேண்டும். ஆனால் இந்த அரசு எப்படி இந்தியவை சுருட்டலாம் என்று அல்லவா ரூம் போட்டு யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குYoga.S.FR சொன்னது…
பதிலளிநீக்கு//இப்படியும் மனிதர்கள்!பெருமூச்சு விடுவது தவிர வேறென்ன செய்ய???//
வருத்தும் உண்மை.
நன்றி.
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
பதிலளிநீக்கு//பெற்றோரைக்
கூட அநாதையாகத் தவிக்க விடும் அளவுக்கு அவ்வளவு கொடுமையானதா அவர்கள்
வறுமை?
கொடிது கொடிது...
வறுமை கொடிது...
வயிற்றில் பசி என்னும் தீ எரிந்துகொண்டிருக்கும் போது உறவாவது... அன்பாவது....
இதுதான் மறுக்கமுடியா உண்மை அன்பரே..//
நன்றி ஐயா.
செங்கோவி கூறியது...
பதிலளிநீக்கு//என்ன அநியாயம் ஐயா..படிக்கவே நெஞ்சு பதறுகிறதே..//
ஆம்.நன்றி செங்கோவி.
வே.நடனசபாபதி கூறியது...
பதிலளிநீக்கு// இந்த கொடுமை கும்பமேளாவில் மட்டுமல்ல. இங்குகூட நடக்கிறது. சில நாட்களுக்கு முன் ஒருவர் தன் வயதான நோய்வாய்பட்ட தந்தையை பொது மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து வந்து ‘Out Patient’ வரிசை அருகே விட்டுவிட்டு ஓடியதாக செய்தித்தாளில் படித்தேன். மைய அரசு வயதான முதியோர்களுக்கான ‘சமூகபாதுகாப்பு திட்டம்’ ஒன்றை உடனே கொண்டு வரவேண்டும். அதற்கான நிதியை நன்கொடையாகவோ அல்லது ‘Education க்காக Surcharge’ வசூலிப்பதுபோல் வருமான வரியோடு சேர்த்து பெறலாம். இந்த நேரத்தில் ‘பானையிலே சோறு இருந்தால் பூனைகளும் சொந்தமடா’ எனக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய திரைபடப்பாடல் தான் நினைவுக்கு வருகிறது.//
நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்.
நன்றி சபாபதி அவர்களே.
புலவர் சா இராமாநுசம் கூறியது...
பதிலளிநீக்கு//இப்பணியும் மனிதர்களா..
மனம் வலிக்கிறது!//
நன்றி ஐயா.
கணேஷ் கூறியது...
பதிலளிநீக்கு// மனதைப் பிசைகிறது. என்ன செய்தும் பெற்றோரைக் காத்தல் பிள்ளைகளின் கடன் இல்லையா... எப்படி இப்படி இருக்க முடிகிறது?//
சரிதான். நன்றி கணேஷ்.
ஜ.ரா.ரமேஷ் பாபு கூறியது...
பதிலளிநீக்கு// பெற்றோரை தவிக்க விடுவது வறுமையோ இயலாமையோ எதுவாங்க இருந்தாலுமே கொடுமையான விஷயம் சார்..//
உண்மை.
நன்றி ரமேஷ் பாபு .
அம்பலத்தார் கூறியது...
பதிலளிநீக்கு//இன்றைய முதலாளித்துவ, வியாபாரமயமாகிவிட்ட உலகில் மனிதம் செத்துப் பலகாலமாகிவிட்டது.//
சரியே.
நன்றி அம்பலத்தார்.
suryajeeva கூறியது...
பதிலளிநீக்கு//பக்தி என்ற போர்வையில் திரியும் மிருகங்களில் ஒரு சிறு அளவே நீங்கள் குறிப்பிட்டது... மதுரா என்ற ஊரில் கண்ணன் வாழ்ந்ததாக கூறப்படும் இடத்தில் எத்தனை இளம் விதவைகள் நிர்க்கதியாய் விடப்பட்டு..//
நானும் பிருந்தாவன் சென்று அந்தக் கொடுமையைக் கண்டிருக்கிறேன்.
நன்றி சூரியஜீவா.
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு//நெஞ்சில் ரத்தம், கண்ணில் கண்ணீர்.....//
// பெற்றோரை தவிக்கவிடும் இவர்கள் நிலைமை இன்னும் மோசமாகுமே, உணர்வார்களா...???//
நாளையைப் பற்ரி அவர்கள் கவலைப்படவில்லை.
நன்றி மனோ.
Ramani கூறியது...
பதிலளிநீக்கு//மனம் கனக்கச் செய்யும் பதிவு
இப்போது அவர்கள் விவரமாக நடந்து கொண்டதாக
எண்ணிக் கொள்ளலாம்
கடைசிக் காலங்களில் மனம்
அவர்களை சித்திரவதை செய்தே கொல்லும்
த.ம 4//
அதை உணராமல் குற்றம் செய்கிறார்கள்.
நன்றி ரமணி.
ரெவெரி கூறியது...
பதிலளிநீக்குபெற்றோரைக்கூட அநாதையாகத் தவிக்க விடும் அளவுக்கு//
//கேவலத்தின் உச்சம்...//
உண்மை
நன்றி ரெவெரி.
M.R கூறியது...
பதிலளிநீக்கு//மனிதர்களில் இப்படியும் இருக்கிறார்களே என எண்ணும்பொழுது மனம் வேதனை அடைகிறது ஐயா.
tamil manam 5//
நன்றி ரமேஷ்.
Tamilan கூறியது...
பதிலளிநீக்கு//திரு. நடனசபாபதி கூறிய மாதிரி அரசாங்கம் தான் இதை செய்ய வேண்டும். ஆனால் இந்த அரசு எப்படி இந்தியவை சுருட்டலாம் என்று அல்லவா ரூம் போட்டு யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள்.//
சரியாகச் சொன்னீர்கள்.
நன்றி தமிழன்.
கேட்கவே கஷ்டமாக இருக்கிறது. மதுரா அருகே இருக்கும் பிருந்தாவனத்தில் எப்போதுமே இப்படி செய்வார்கள் - அதுவும் விதவைப் பெண்களை அப்படி தனியே விட்டுவிடுவார்கள்.... கஷ்டம்.... என்ன செய்வது இப்படிப் பட்டவர்களை.....
பதிலளிநீக்குசார் ரொம்ப பிசியோ... ஒரே மீள்ஸ் பதிவா வருது...
பதிலளிநீக்குபடிக்க படிக்க மனது தான் வலிக்கிறது
பதிலளிநீக்குவேடிக்கை மனிதர்களின் மற்றொரு முகம்.
பதிலளிநீக்குஅருமையாக வடித்திருக்கிறீர்கள்.
நன்றி ஐயா.
கொடுமை...
பதிலளிநீக்குஅண்ணே அநியாயம்...மனசு வலிக்கிறது!
பதிலளிநீக்கு>>Philosophy Prabhakaran சொன்னது…
பதிலளிநீக்குசார் ரொம்ப பிசியோ... ஒரே மீள்ஸ் பதிவா வருது...
அண்ணன் பரபரப்பா இயங்கிட்டு இருக்காரே , அதை பாராட்டுங்க!!
வெங்கட் நாகராஜ் கூறியது...
பதிலளிநீக்கு//கேட்கவே கஷ்டமாக இருக்கிறது. மதுரா அருகே இருக்கும் பிருந்தாவனத்தில் எப்போதுமே இப்படி செய்வார்கள் - அதுவும் விதவைப் பெண்களை அப்படி தனியே விட்டுவிடுவார்கள்.... கஷ்டம்.... என்ன செய்வது இப்படிப் பட்டவர்களை.....//
நானும் விருந்தாபன் சென்றிருக்கிறேன்.பாவம்!
நன்றி வெங்கட்.
Philosophy Prabhakaran கூறியது...
பதிலளிநீக்கு//சார் ரொம்ப பிசியோ... ஒரே மீள்ஸ் பதிவா வருது...//
இந்த வாரம் இது ஒன்றுதானே! மிகப்பழைய பதிவு.அப்போது அதிகம் பேரால் படிக்கப்படாத பதிவு.எனவே மீள் பதிவு!
நன்றி பிரபா.
வைரை சதிஷ் கூறியது...
பதிலளிநீக்கு//படிக்க படிக்க மனது தான் வலிக்கிறது//
நன்றி சதீஷ்.
மகேந்திரன் கூறியது...
பதிலளிநீக்கு//வேடிக்கை மனிதர்களின் மற்றொரு முகம்.
அருமையாக வடித்திருக்கிறீர்கள்.
நன்றி ஐயா.//
நன்றி மகேந்திரன்.
மாய உலகம் கூறியது...
பதிலளிநீக்கு// கொடுமை...//
நன்றி ராஜேஷ்.
விக்கியுலகம் கூறியது...
பதிலளிநீக்கு//அண்ணே அநியாயம்...மனசு வலிக்கிறது!//
நன்றி விக்கி.
சி.பி.செந்தில்குமார் கூறியது...
பதிலளிநீக்கு>>Philosophy Prabhakaran சொன்னது…
சார் ரொம்ப பிசியோ... ஒரே மீள்ஸ் பதிவா வருது...
//அண்ணன் பரபரப்பா இயங்கிட்டு இருக்காரே , அதை பாராட்டுங்க!!//
அப்படிச் சொல்லுங்க தம்பி!
நன்றி!
வணக்கம் ஐயா,
பதிலளிநீக்குசுயநலம் கொண்டவர்களினால் மனிதாபிமானம் பெறும் அவலத்தினை இப் பதிவு சொல்லி நிற்கிறது.
@நிரூபன்
பதிலளிநீக்குநன்றி.