அந்த நர்சரிப் பள்ளியில் தன் நான்கு வயது மகனை அன்றுதான்சேர்த்திருந்தாள் ரமா. பையனை வகுப்பில் விட்டு விட்டு வெளியியில் வரும்போது எதிர்ப் பட்ட அவனை உடனே அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.இந்தப் பத்தாண்டுக் காலத்தில் அவன் நிறையவே மாறியிருந்தான்.முன் தலையில் வழுக்கை விழுந்திருந்தது;காதோரம் நரைத்திருந்தது.மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தான்.சற்றே மெலிந்திருந்தான். இத்தனையும் மனதுள் வாங்கி அவள் அவனை அடையாளம் கண்டு கொண்ட அதே நேரத்தில்-அவனும் அவளை அறிந்து கொண்டான்.அவன் அறிந்த ரமா வேறு .இப்போது கொஞ்சம் தடித்திருந்தாள்.ஆனால் இன்னும் அழகாகவே இருந்தாள்.
அவனுடன் பேசுவதா என அவள் தயங்கியபோது அவன் கேட்டான்”ரமாதானே நீ.....ங்கள்?”
அவள் ஆமென்று தலையசைத்தாள்.
“பத்து வருசத்துக்கப்புறம் பார்க்கிறோம்.நெனச்செ பார்க்காத சந்திப்பு.நான் சமீபத்தில்தான் இந்த ஊருக்கு மாற்றலாகி வந்தேன்.நீங்க எத்தனை வருசமா இந்த ஊர்ல இருக்கீங்க?” அவன் சரளமாகப் பேச முயற்சி செய்தான்,பழசையெல்லாம் மறந்தவன் போல்.
ஆனால் ரமாவின் பேச்சில் ஒரு விதத் தயக்கம் இருந்தது.சுருக்கமாய்ச் சொன்னாள்”ஒன்பது ஆண்டுகள்”
”இங்கே,ஸ்கூல்லே... “என்று அவன் இழுக்கும்போதே அவள் சொன்னாள்.என் பையனைச் சேர்த்திருக்கேன்.--சிறிது தயங்கினாள்.பின் கிண்டலாய்க் கேட்டாள்”ஆமாம்,நீங்க இங்கே எப்படி?நிச்சயமாக உங்க குழந்தையை விடுவதற்காக இருக்க முடியாது,அப்படி ஒரு சுமை உங்களுக்குப் பிடிக்காதே!”
அவள் வார்த்தைகள் ஏற்படுத்திய வேதனையை அவன் தன் புன்முறுவலால் மறைத்தான்.
“நீங்க சொல்றது சரிதான்.எனக்குக் குழந்தை இல்லே.மாமா வந்தாத்தான் போவேன் என்று என் தங்கை பையன் அடம் பிடித்தான் அவனை விட வந்தேன்.என்மேல அவனுக்கு ரொம்பப் பிரியம்.எந்த விதமான பொறுப்புகளும்-மனைவி உட்பட-இல்லாததால் நானும் அவனை மிக நேசிக்கிறேன்.”
”குழந்தைகள்கிட்டப் பிரியமா இருக்கக் கூட முடியுமா உங்களாலே?”
வார்த்தைகள் சவுக்கடியாய் விழுந்த வேகத்திலே அவன் மனம் நொந்து தலை குனிந்தான்.
ரமாவுக்குத்தான் அந்த மாதிரிப் பேசி இருக்க வேண்டாம் எனத் தோன்றியது.
“மன்னிச்சிடுங்க.பழசை மனசில் வச்சுப் பேசிட்டேன்.நீங்க ஏன் கல்யாணம் செய்துக்கலே?”
அவன் நிமிர்ந்து அவளைத் தீர்க்கமாகப் பார்த்தான்.பின் ஒரு முடிவுக்கு வந்தவனாகப் பேச ஆரம்பித்தான்.
“ரமா!ஒரு உண்மையை நான் உன் கிட்ட--மன்னிக்கணும்,பழசைப் பத்திப் பேசும்போது, பழைய மாதிரித்தான் பேச வருது--சொல்லப் போறேன்.நம்ம பழக ஆரம்பிக்கும் முன்னாலே, ஒருநாள் கிரிக்கெட் ஆடும்போது பட்ட அடி கொஞ்சம் பிரச்சினை குடுத்துகிட்டே இருந்தது , நம்ம கடைசி சந்திப்புக்கு ரெண்டு நாள் முன்னாலே சோதனைக்குப் போனப்பத்தான் தெரிஞ்சது--நான் தகப்பனாகும் தகுதியை இழந்துவிட்டேங்கறது.உன்னைக் கல்யாணம் செய்துகிட்டுக் குழந்தையில்லாத ஒரு வாழ்க்கையை நான் உனக்குக் கொடுக்க விரும்பலே.உண்மையை உன்கிட்டச் சொல்லியிருந்தா,நீ,எனக்காக,நம் காதலுக்காக,உன் குழந்தை ஆசையை ஒதுக்கி விட்டுக் கல்யாணத்துக்குத் தயாராகியிருப்பே.அதை நான் விரும்பலை.அதனால்தான் குழந்தைகளையே காரணமாக்கி உங்கிட்டேருந்து பிரிஞ்சேன். நான் செஞ்சது சரிதான் என்பது இப்ப உறுதியாகி விட்டது.”
அவன் பேசும்போது அவள் பலவித உணர்ச்சிகளால் தாக்கப்பட்டவளாய் நின்றிருந்தாள் சோகம்,எள்ளல்,விரக்தி ஆகிய உணர்ச்சிகள் அவள் முகத்தில் தோன்றி மறைந்து,பின் அவள் முகம் உணர்ச்சிகளேயற்று இறுகியது.
அவன் பேசி முடித்ததும் “போவோமா?” என்று கேட்டவாறே நகர ஆரம்பித்தாள்.
கேட்டுக்கு வெளியே நின்றிருந்த காரை நெருங்கினாள்.
கேட்டாள்”நீங்க எங்கே போகணும் ?உங்களை இறக்கி விட்டுட்டுப் போறேன்”
“நன்றி.நான் என் ஸ்கூட்டரில் போகிறேன்” என்று சொன்னவன் பின் கேட்டான்”உனக்கு எத்தனை குழந்தைகள் ரமா?”
உணர்ச்சியற்று இருந்த அவள் முகத்தில் ஒரு முறுவல் மலர்ந்தது.
காரின் கதவைத் திறந்தவாறே பதிலளித்தாள்
“இப்பப் பள்ளிக்கூடத்தில் விட்டிருக்கும் பையன்தான் எங்கள் ஒரே மகன்--------தத்து எடுக்கப் பட்டவன்!
காரில் ஏறி அவள் போய் விட்டாள்.
அவன் உறைந்து நின்றான்!
சவுக்கடி...
பதிலளிநீக்குமுதல் கிளைமாக்ஸ் முடிந்து விட்டது என்று நினைத்தால் மறுபடியும் ஒரு ட்விஸ்ட்...
எதிர்பார்க்கவில்லை தத்து பிள்ளையை..
இதை ஒரே கதையாக போட்டால் வம்சி சிறுகதை போட்டிக்கு அனுப்பி வைக்கலாம் என்று நினைக்கிறேன்.. அல்லது முதல் பதிவில் இதற்க்கான இணைப்பை கொடுத்து விடவும்...
பதிலளிநீக்குத.ம.1
பதிலளிநீக்குஜயா சூப்பர்..அதிலும் கதையின் முடிவு சான்சே இல்ல பிரமாதம்..மிகவும் ரசித்தேன் நல்ல ஒரு காதல் கதையை படித்த உணர்வு.
பதிலளிநீக்குநன்றி ஜயா
எதிர்பாராத முடிவு. ஆனால் மனதை தொட்ட முடிவு. கதை மிக அருமை.
பதிலளிநீக்கு--தத்து எடுக்கப் பட்டவன்!
பதிலளிநீக்கு"விதி !
நல்ல ரெண்டு பாக சிறுகதை...வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குநெகிழ்ச்சி...
பதிலளிநீக்குகனமான கதை சார்
பதிலளிநீக்குஅண்ணே விதி இவ்வளவு கொடியதா!
பதிலளிநீக்குசரியான முடிவு அய்யா! தமிழ்மணத்துக்கு அனுப்பிவிட்டேன்.
பதிலளிநீக்குமனம் திறந்து பேசியிருந்தால் இந்த பிரிவு ஏற்பட்டு இருக்காதே....??
பதிலளிநீக்குநெஞ்சை உருக்கிய கதை தல...!!!
பதிலளிநீக்குயோகிக்க முடியாத கிளைமாக்ஸ் அருமை சார் மிகவும் பிடித்துள்ளது வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமுதல் ட்விஸ்ட் எதிர்பார்த்தது..இரண்டாவது ட்விஸ்ட் எதிர்பாராதது..
பதிலளிநீக்குகலக்கிட்டீங்கய்யா.
அவன் உறைந்து நின்றான்!
பதிலளிநீக்குஅவன் மட்டுமா?
நல்லா எழுதியிருக்கீங்க.
பதிலளிநீக்குசில முடிவுகள் இப்படித்தான் முரணா வந்து வாட்டும்.
விதி... நிச்சயம் விதிதான்...
பதிலளிநீக்குகதையைப் படித்ததும் விதியின் வலிமை புரிந்தது....
நல்ல சிறுகதைப் பகிர்வுக்கு நன்றி.
@suryajeeva
பதிலளிநீக்குநன்றி.
இது பற்றி எனக்குத்தெரியாது.பார்க்கிறேன்.
@நண்டு @நொரண்டு
பதிலளிநீக்குமிக்க நன்றி
@K.s.s.Rajh
பதிலளிநீக்குநன்றி.
@வே.நடனசபாபதி
பதிலளிநீக்குநன்றி.
@இராஜராஜேஸ்வரி
பதிலளிநீக்குநன்றி.
@ரெவெரி
பதிலளிநீக்குநன்றி.
@கவிதை வீதி... // சௌந்தர்
பதிலளிநீக்குநன்றி.
@ஜ.ரா.ரமேஷ் பாபு
பதிலளிநீக்குநன்றி.
@விக்கியுலகம்
பதிலளிநீக்குநன்றி.
@shanmugavel
பதிலளிநீக்குநன்றி
@MANO நாஞ்சில் மனோ
பதிலளிநீக்குநன்றி.
@காட்டு பூச்சி
பதிலளிநீக்குநன்றி.
@செங்கோவி
பதிலளிநீக்குநன்றி.
@கோகுல்
பதிலளிநீக்குநன்றி.
@FOOD
பதிலளிநீக்குநன்றி.
@அப்பாதுரை
பதிலளிநீக்குநன்றி.
@வெங்கட் நாகராஜ்
பதிலளிநீக்குநன்றி
நான் ரொம்ப லேட்..
பதிலளிநீக்குஅருமையான முடிவு. அந்த தத்துப் பிள்ளை விஷயம்... சான்ஸே இல்லை. விதியின் விளையாட்டு! அருமையான சிறுகதை!
பதிலளிநீக்குஉங்கள் இந்தப் பதிவைப் பார்க்கும் முன் கரண்ட் கட் தொடர்பான பதிவைப் பார்த்ததால் பின்னூட்டத்தில் குழப்பி விட்டேன். மன்னிச்சூ...
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
பதிலளிநீக்கு//நான் ரொம்ப லேட்..//
தேர்தல் நேரம் இல்லையா?!
நன்றி கருன்.
கணேஷ் கூறியது...
பதிலளிநீக்கு//அருமையான முடிவு. அந்த தத்துப் பிள்ளை விஷயம்... சான்ஸே இல்லை. விதியின் விளையாட்டு! அருமையான சிறுகதை!
உங்கள் இந்தப் பதிவைப் பார்க்கும் முன் கரண்ட் கட் தொடர்பான பதிவைப் பார்த்ததால் பின்னூட்டத்தில் குழப்பி விட்டேன். மன்னிச்சூ...//
புரிந்துகொண்டேன் கணேஷ்!
நன்றி!
வணக்கம் ஐயா,
பதிலளிநீக்குவித்தியாசமான ஒரு கரு.
கதை நகர்வும் அருமை,.
கல்யாணம் ஆகா விட்டாலும் குழந்தையினை வளர்க்கலாம் எனச் சொல்லி நச்சென்று முகத்தில் அறைந்திருக்கிறது இறுதி வரிகள்.
நிரூபன் கூறியது...
பதிலளிநீக்கு//வணக்கம் ஐயா,
வித்தியாசமான ஒரு கரு.
கதை நகர்வும் அருமை,.
கல்யாணம் ஆகா விட்டாலும் குழந்தையினை வளர்க்கலாம் எனச் சொல்லி நச்சென்று முகத்தில் அறைந்திருக்கிறது இறுதி வரிகள்.//
நன்றி நிரூ.