தொடரும் தோழர்கள்

சனி, அக்டோபர் 15, 2011

பரல்கள்!

ங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...

ணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தை பக்கத்துல போகச் சொன்னது?
--=-----

ல்ப் - எடிசன்

ரேடியோ - மார்கோனி

பை-சைக்கிள் - மேக் மில்லன்

போன் - க்ராஹாம் பெல்

க்ராவிடி - நியூட்டன்

கரண்ட் - பாரடே

எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

=====

ன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க

லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க.

-----------

மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?

என்ன தெரியலையா?

அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

=========

தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?

மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

==========

நான் ஒண்ணு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...

சொல்லட்டுமா?

பெருமாள் கோவில்' சுண்டல் போடுறாங்க...

ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....

=======================================


ஒரு கோபக்காரச் சிறுவன் இருந்தான்,எல்லோரிடமும் அவசியமின்றி கோபப் பட்டுக் கத்துவான்.அவன் தந்தை அவனிடம் ஒரு பை நிறைய ஆணிகளைக் கொடுத்துச் சொன்னார்”உனக்குக் கோபம் வரும்போதெல்லாம் ஒரு ஆணி எடுத்து நம் வீட்டிம் முன் இருக்கும் மர வேலியில் அடித்து வா”

முதல் நாள் அவன் 30 ஆணிகள் அடிக்க வேண்டி இருந்தது.நாட்கள் செல்லச் செல்ல அவன் தன் கோபத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அடக்கக் கற்றுக் கொண்டான்.அடிக்கும் ஆணிகளின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது. ஆணியை அடிப்பதை விடக் கோபத்தைக் கட்டுப்படுத்துவது எளிதாக இருப்பதாக அவன் உணர்ந்தான்.

ஒரு நாள் அவன் ஒரு ஆணி கூட அடிக்கவில்லை!

தன் தந்தையிடம் சென்று சொன்னான்.அவர் சொன்னார்”நல்லது.இதுபோலவே,கோபம் வராத நாட்களிலெல்லாம் தினம் ஒன்றாக அந்த ஆணிகளிப் பிடுங்கி வா.!”

நாட்கள் சென்றன.ஒரு நாள் எல்லா ஆனிகளும் எடுக்கப் பட்டு விட்டதைக் கண்டான். தந்தையிடம் சொன்னான்.

தந்தை அவனை அந்த வேலியருகே அழைத்துச் சென்றார்.வேலியைக்காட்டிச் சொன்னார், ”பார்,இந்த வேலியில் எத்தனை ஓட்டைகள்.உன் ஆணிகள் ஏற்படுத்தியவை.இனி வேலி முன் போல் தோற்றமளிக்காது.இது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும்.நீ பின்னால் எத்தனை முறை வருத்தம் தெரிவித்தாலும்,காயத்தின் வடு நீங்காது.இதை நீ எப்போதும் நினைவில் கொள்!”

=========================================

எழுபதுகளின் ஆரம்பத்தில்தான் புதுக்கவிதைகள் எனக்கு அறிமுகமாகின. அப்போது சில கவிதைகளை ரசிக்க முடிந்தது..சில என்ன சொல்கிறார்கள் என்றே புரியவில்லை.அப்போது படித்த அப்படிப்பட்ட ஒரு கவிதை

“ஆற்காட்டுச் சாலையிலே

மரங்களெல்லாம் விரல்கள்

அந்த விரல் மோதிரத்தை

யார் கழற்றிப் போனார்கள்”

இதைப் படித்தவுடன் நான் கிண்டலாக ஒரு கவிதை எழுதினேன்.

“ஏற்காட்டு மலையினிலே

மரங்களெல்லாம் மயிர்கள்

அந்த மயிர்க் கற்றைகளை

யார் பிடுங்கிப் போட்டார்கள்”

இப்போது படிக்கும்போது ஒரு பின்நவீனத்துவக் கவிதையாகத் தோன்றுகிறது.!!(அடிக்க வராதீங்க!)


45 கருத்துகள்:

  1. பின் நவீனத்துவம்னா என்னங்க. கொஞ்சம் சொல்லி கொடுங்களேன் அடுத்த பதிவில்

    பதிலளிநீக்கு
  2. suryajeeva கூறியது...

    //பின் நவீனத்துவம்னா என்னங்க. கொஞ்சம் சொல்லி கொடுங்களேன் அடுத்த பதிவில்//
    இதெல்லாம் சொன்னாப் புரியாதுங்க!தானாத்தான் தெரிஞ்சுக்கணும் ,என்னை மாதிரி,ஹி,ஹி!(யாருக்குத் தெரியும்?)
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ஹா ஹா ஹா ஹா சிரிப்போ சிரிப்பு முடியலை...!

    பதிலளிநீக்கு
  4. சின்னப்பையனின் கோபம் மட்டுமல்ல, நமக்கும் அது ஒரு பாடம்தான் இல்லையா...

    பதிலளிநீக்கு
  5. பின் நவீனத்துவம்... சொல்லிப் புரிவதில்லை-ன்னு சொல்லிட்டீங்களே... நானும் தெரிஞ்சுக்கலாம்னு நினைத்தேன்..

    பரல்கள் அருமை...

    பதிலளிநீக்கு
  6. ஹாஹா ஹாஹா ஹாஹா ஹா ஹா ஹா ஹா
    -- லூசுன்னு நெனைச்சா நெனச்சுட்டுப் போங்க சார்

    பதிலளிநீக்கு
  7. ஹாஹா ஹாஹா ஹாஹா ஹா ஹா ஹா ஹா
    -- லூசுன்னு நெனைச்சா நெனச்சுட்டுப் போங்க சார்

    பதிலளிநீக்கு
  8. எப்பிடீங்க,உங்களால மட்டும் இப்பிடீல்லாம் முடியுது????????

    பதிலளிநீக்கு
  9. நல்ல நகைச்சுவைகள் ஜயா..

    அப்பறம் சின்னப்பையன் கதை அருமை

    பதிலளிநீக்கு
  10. நல்ல அருமையான பதிவு

    ஹா.......ஹா......

    பதிலளிநீக்கு
  11. எப்படி அண்ணாச்சி இப்படி ஸ்கூல் பசங்க மாதிரி காமெடி பண்றீங்க ...

    பதிலளிநீக்கு
  12. புதுக்கவிதைகள் நவீன ஓவியங்கள் போல.அதை எழுதியவரோ அல்லது அந்த ஓவியத்தை வரைந்தவரோதான் அதை புரிந்துகொள்ளமுடியும் என்று படித்ததாக நினைவு. ஆனால் உங்கள் போட்டிக்கவிதை நன்றாகவே புரிகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. தேடிக் கொடுத்த பரல்-ஆகா
    தினமும் வலையில் வரல்
    பாடிக் கருத்துரை நானே-மிக
    படைத்திட செய்வேன் தானே

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  14. கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?/

    அருமையான பரல்களுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  15. வலைஞன் சொன்னது…

    //வணக்கம் நண்பரே

    உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

    http://www.valaiyakam.com///

    இணைத்து விட்டேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  16. மகேந்திரன் கூறியது...

    //சிரித்தேன் ரசித்தேன்...//
    நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  17. அம்பலத்தார் கூறியது...

    //நல்லதொரு பல்சுவை கதம்ப பதிவு.//

    நன்றி அம்பலத்தார்.

    பதிலளிநீக்கு
  18. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //ஹா ஹா ஹா ஹா சிரிப்போ சிரிப்பு முடியலை...!//
    :)

    பதிலளிநீக்கு
  19. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //சின்னப்பையனின் கோபம் மட்டுமல்ல, நமக்கும் அது ஒரு பாடம்தான் இல்லையா...//
    உண்மை மனோ.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //பின் நவீனத்துவம்... சொல்லிப் புரிவதில்லை-ன்னு சொல்லிட்டீங்களே... நானும் தெரிஞ்சுக்கலாம்னு நினைத்தேன்..

    பரல்கள் அருமை...//
    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  21. சிவகுமாரன் கூறியது...

    // ஹாஹா ஹாஹா ஹாஹா ஹா ஹா ஹா ஹா
    -- லூசுன்னு நெனைச்சா நெனச்சுட்டுப் போங்க சார்//
    நானும் சேர்ந்துக்கறேன்! ஹா,ஹா,ஹா!
    நன்றி சிவா.

    பதிலளிநீக்கு
  22. Yoga.s.FR கூறியது...

    // எப்பிடீங்க,உங்களால மட்டும் இப்பிடீல்லாம் முடியுது????????

    !! நன்றி Yoga.s.FR .

    பதிலளிநீக்கு
  23. FOOD கூறியது...

    //இப்படியும் கோபத்தைக் கட்டுபடுத்தலாமோ!//
    இதுவும் ஒன்று.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  24. K.s.s.Rajh கூறியது...

    // நல்ல நகைச்சுவைகள் ஜயா..

    அப்பறம் சின்னப்பையன் கதை அருமை//
    நன்றி ராஜ்.

    பதிலளிநீக்கு
  25. வைரை சதிஷ் கூறியது...

    // நல்ல அருமையான பதிவு

    ஹா.......ஹா......//
    நன்றி சதிஷ்.

    பதிலளிநீக்கு
  26. koodal bala கூறியது...

    //எப்படி அண்ணாச்சி இப்படி ஸ்கூல் பசங்க மாதிரி காமெடி பண்றீங்க ...//
    அப்படி என்ன வயசாயிடுச்சு எனக்கு!?
    நன்றி பாலா.

    பதிலளிநீக்கு
  27. வே.நடனசபாபதி கூறியது...

    // புதுக்கவிதைகள் நவீன ஓவியங்கள் போல.அதை எழுதியவரோ அல்லது அந்த ஓவியத்தை வரைந்தவரோதான் அதை புரிந்துகொள்ளமுடியும் என்று படித்ததாக நினைவு. ஆனால் உங்கள் போட்டிக்கவிதை நன்றாகவே புரிகிறது. வாழ்த்துக்கள்.//
    நன்றி சபாபதி அவர்களே.

    பதிலளிநீக்கு
  28. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    // தேடிக் கொடுத்த பரல்-ஆகா
    தினமும் வலையில் வரல்
    பாடிக் கருத்துரை நானே-மிக
    படைத்திட செய்வேன் தானே//
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  29. இராஜராஜேஸ்வரி கூறியது...

    // கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?/

    அருமையான பரல்களுக்குப் பாராட்டுக்கள்.//
    நன்றி இராஜராஜேஸ்வரி .

    பதிலளிநீக்கு
  30. நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...

    //அருமை.//

    நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு.

    பதிலளிநீக்கு
  31. உண்மையில் மற்ற பதிவுகளைவிட நீங்கள் சிறந்த நகைசுவை பதிவுகளையே போடலாம் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  32. ஏற்காட்டுக் கவிதை நன்றாகவே இருக்கிறது. இன்னும் மயிர்ப் பிடுங்கிக் கொண்டிருப்பது தான் வருத்தம். கவிதையை அப்போதே படித்திருக்க வேண்டுமோ?
    ஒரு ஜோக் ரொம்ப சிரிப்பு.

    பதிலளிநீக்கு
  33. மாலதி கூறியது...

    //உண்மையில் மற்ற பதிவுகளைவிட நீங்கள் சிறந்த நகைசுவை பதிவுகளையே போடலாம் பாராட்டுகள்//

    மற்றதெல்லாம் வேஸ்ட்ங்கறீங்களா?! நன்றி மாலதி.

    பதிலளிநீக்கு
  34. எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் கூறியது...

    //GOOD JOKES//
    நன்றி.

    பதிலளிநீக்கு
  35. அப்பாதுரை கூறியது...

    // ஏற்காட்டுக் கவிதை நன்றாகவே இருக்கிறது. இன்னும் மயிர்ப் பிடுங்கிக் கொண்டிருப்பது தான் வருத்தம். கவிதையை அப்போதே படித்திருக்க வேண்டுமோ?
    ஒரு ஜோக் ரொம்ப சிரிப்பு.//
    எது?பூக்காரியா?!
    நன்றி அப்பாதுரை.

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் ஐயா.

    வீக்கெண்டில் சிரித்து மகிழ்வதற்கேற்ற அசத்தலான ஜோக்ஸ்களை தந்திருக்கிறீங்க.

    குழந்தைக்குப் பக்கத்தில மேக்கப் இல்லாமல் எனும் ஜோக்கை நினைத்து நினைத்து சிரிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  37. பின் நவீனத்துவம் கலந்த கவிதை கலக்கல் ஐயா.

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் ஐயா,
    நல்லதோர் கவிதை,
    இவ் உலகின் யதார்த்த நிலையினை அழகுறச் சொல்லி நிற்கிறது.
    அன்னையால் கூட அகிலத்தின் பிணக்குகளைத் தீர்க்க முடியாதாம் எனும் உண்மை நிலையினைக் கவிதை உணர்த்தி நிற்கிறது.

    பதிலளிநீக்கு
  39. நகைச்சுவை அருமை !.......மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .........

    பதிலளிநீக்கு
  40. "
    எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

    "

    சூப்பர்


    இவை கவிதை அல்ல

    பதிலளிநீக்கு