தொடரும் தோழர்கள்

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

ஒயினும் சிரிப்பும்!


 
இன்று ஞாயிற்றுக்கிழமை.எல்லோரும் விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருக்கும் நாள்.இப்போது  கருத்தார்ந்த பதிவு எதுவும் போட்டு  மனநிலையைக் கெடுக்கக் கூடாது. எனவே  கழி மகிழ்வான ஒரு குட்டிப் பதிவு!  
............................................................................................................................................


ஒரு ஒயின் தொழிற்சாலையில் வழக்கமாக ஒயினைச் சுவைத்துக் கருத்துச் சொல்லும் நபர் திடீரென்று இறந்து விட்டார்.அந்த வேலைக்கு புதிய நபர் தேர்வு நடை பெற்றது.அழுக்காக உடை அணிந்த  ஒரு குடிகாரனும் வந்திருந்தான்.அவனை எப்படியாவது வெளியே அனுப்ப எண்ணினார் மேலாளர்.ஒரு கோப்பை ஒயின் அவனிடம் கொடுக்கப்பட்டது


“நாசிக்கில் விளையும் திராட்சை.மூன்று வருடம் பழையது.மரப் பீப்பாயில் வைக்கப்பட்டது”அவன் சொன்னான்


இன்னொரு கோப்பை ஒயின் கொடுக்கப்பட்டது.அவன் குடித்தபின் சொன்னான்” உயர்ந்த  ஃபிரான்ஸ் திராட்சை.ஆறு ஆண்டு பழையது”


இவ்வாறு  மேலும்  இரண்டு கோப்பைகளைக்குடித்துச் சரியாகக் கூறினான்.மேலாளர் தன் பெண் செயலரிடம் ரகசியமாக ஏதோ சொல்லி அனுப்பினார்.


ஒரு கோப்பையில் அந்தப்பெண் தனது சிறுநீரைக் கொண்டு வந்து கொடுத்தாள்.குடித்து விட்டு அவன் சொன்னான்.


“25 வயதான பெண்.மூன்று மாதம் கர்ப்பம்.இந்த வேலையை எனக்குக் கொடுக்கவில்லையென்றால்,கர்ப்பத்துக்குக் காரணம் யார் என்பதை எல்லோரிடமும் சொல்லி விடுவேன்”


வேலை அவனுக்குத்தான் கொடுக்கப்பட்டது என்பதை சொல்லவும் வேண்டுமா!
          


41 கருத்துகள்:

  1. ஞாயிற்றுக்கிழமை, relax mood-ல் இருப்பதாக நினைக்கிறேன்.
    திருவல்லிக்கேணி ஸ்டார் திரையரங்கம் அருகில் டாக்டர் மதனி என்ற மருத்துவர் மஞ்சட்காமாலைக்கு சிறந்த மருந்து கொடுப்பவர். (இப்போது காலமாகிவிட்டார்) அவரிடம் இரத்த பரிசோதனையெல்லாம் கிடையாது. காலையின் முதல் சிறுநீரை ஒரு வெள்ளை பாட்டிலில் கொண்டுசென்று அவருக்கு முன் உள்ள ஒரு டேபிளில் வைத்துவிடவேண்டும். நோயாளியையும் அவர் கொண்டுவந்த சிறுநீரையும் பார்த்து அவர் மருந்து கொடுத்துவிடுவார். குணமும் ஆகிவிடும். அப்போது ஒருவருக்கு சந்தேகம் வந்தது. எப்படி இவர் மருந்து கொடுக்கிறார்? என்று. மருத்துவரை பரிசோதிக்க நினைத்து, குதிரையின் சிறுநீரை ஒரு பாட்டிளில் பிடித்துக் கொண்டு போய் அவர் முன்னால் வைத்துவிட்டு அமர்ந்தார் நண்பர். உடனே டாக்டர் கேட்டார், "என்னப்பா கொள்ளு ரொம்ப சாப்டியா" என்று. இப்படியும் நடந்துள்ளது

    பதிலளிநீக்கு
  2. சைதை அஜீசும் நீங்களும் ஒரு மார்கமா தான் இருக்கீங்க போல...

    பதிலளிநீக்கு
  3. செம... செம.... குடிகாரன் என்றால் அவ்வளவு எகத்தாளமா? ரொம்பவே தெளிவு

    பதிலளிநீக்கு
  4. அடாடா... இப்படியும் ஒரு ‌உணரும் சக்தியா... ஹாலி‌டே மூடுக்கு அருமையான கதை கொடுத்தீர்‌கள்!

    பதிலளிநீக்கு
  5. ஆஹா சிரிப்பை அடக்க முடியலையே தல ஹா ஹா ஹா ஹா....

    பதிலளிநீக்கு
  6. ரசிச்சி சிரிச்சேன், சிரிச்சி ரசிச்சேன்...!!!

    பதிலளிநீக்கு
  7. அட யாருங்க அந்த ஆளு!
    மனுஷன் வாழ்க்கையை ரொம்ப டேஸ்ட் பண்ணி வாழ்வார் போலிருக்கு.

    நிச்சயம் ரிலாக்சான பதிவு!நன்றி!

    பதிலளிநீக்கு
  8. செம ‘ஹாட் தல...

    சிரிப்பு துணுக்கு அசத்தல்...

    பதிலளிநீக்கு
  9. வாய் விட்டு சிரிக்க வைத்துவிட்டீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  10. @சைதை அஜீஸ்
    வியக்கவைக்கும் திறமையாளர்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  11. @கவிதை வீதி... // சௌந்தர் //
    :) நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  12. கதை அருமை ,அவனது நாக்கை இன்சூரன்ஸ் பண்ணி வச்சிருப்பான் ஹா ஹா

    த.ம 7

    பதிலளிநீக்கு
  13. @M.R
    கட்டாயம் இன்சூர் பண்ண வேண்டியதுதான்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  14. ஹா ஹா ஹா .
    யப்பாடா வாய் விட்டு சிரிச்சு எத்தனை நாளாச்சு?
    சைதை அஜீஸின் டாக்டருக்கு கொஞ்சமும் குறைந்தவனில்லை உங்க குடிமகன்.

    பதிலளிநீக்கு
  15. திருடனுக்கு தேள் கொட்டியது போல் என்பார்களே அது இது தான் வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  16. ஐயா..
    சிறு நீரையும் கண்டு பிடிக்கிறாங்களே..
    ஹி...ஹி....

    பதிலளிநீக்கு