தொடரும் தோழர்கள்

திங்கள், அக்டோபர் 03, 2011

திருமணம் என்னும் பந்தம்!

நம்ம டாக்குட்டரோட ஒரு படம் நினைவிருக்கிறதா?படத்தின் பெயர்

’பிரியமானவளே’ என்று நினைக்கிறேன்.அது ஒரு தெலுங்குப் படத்தின்

ரீமேக் எனச் சொல்கிறார்கள் .அதில் திருமணம் என்ற நிரந்தர உறவை

விரும்பாத நாயகன்,நாயகியை ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் மணம்

செய்து கொள்வான்.இந்தக் கதை இப்போது அசலாகிறது.

மெக்சிகோ நாட்டில்(மெக்சிகோ என்றதுமே சுஜாதாவின் சலவைக்காரி

ஜோக் நினைவுக்கு வரக்கூடாது!) புதிதாக ஒரு சட்டம் இயற்று

கிறார்களாம். .


திருமணம் என்பது ஒரு வாழ்நாள் பந்தம் என்பதை மாற்றி மணம்

செய்து கொள்பவர்கள் விருப்பத்துக்கேற்ப திருமண உறவுக்கான

காலத்தைத் தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை வழங்கப்

போகிறார்கள்.


திருமண ஒப்பந்தத்துக்கான குறைந்த பட்சக்காலம் இரண்டு ஆண்டுகளாக

இருக்கும்.

அவர்கள் அந்தக்காலத்தில் மகிழ்ச்சியாக இருந்து உறவை

நீட்டிக்க விரும்பினால்,அவ்வாறு செய்து கொள்ளலாம். இல்லையெனில்,

ஒப்பந்த காலத்துடன் பிரச்சினையின்றி உறவு முடிவுக்கு

வந்து விடும்.


திருமண உறவில் கசப்பு ஏற்பட்டபின், மண விலக்குக்காக வழக்குத்

தொடர்ந்து நீண்டகால சிக்கல்களில் மாட்டிக் கொள்வது இதனால்

தவிர்க்கப்படும்.


இது எப்படியிருக்கு?!

...............................


திருமணம் பற்றி எழுதியவுடன் திருமணம் பற்றிச் சில செய்திகள்

நினைவுக்கு

வருகின்றன!------


”எல்லா ஆண்களும் கட்டாயம் மணம் செய்து கொள்ள வேண்டும்;

ஏனென்றால் மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கையாகி விடாது!”


”பிரம்மச்சாரிகளுக்கு அதிக வரி விதிக்க வேண்டும்;அவர்கள்

மட்டும் மகிழ்ச்சியாக இருப்பது அநியாயம்!”


”பணத்துக்காக மணந்து கொள்ளாதீர்கள்.அதை விட மலிவாகக்

கடன் கிடைக்குமே!”


புதிதாக மணம் முடித்தவர்கள் சிரித்தால்,எல்லோருக்கும்

ஏனென்று தெரியும்;பத்து வருடங்கள் மணவாழ்க்கை

முடித்தவர்கள் சிரித்தால் அனைவரும் எப்படி என்று

வியக்கிறார்கள்!


காதலுக்குக் கண்ணில்லை;ஆனால் திருமணம் கண்ணைத்

திறந்து விடும்!


ஒரு ஆண் தன் மனைவிக்காகக் கார்க் கதவைத்திறந்தால்,ஒன்று

மனைவி புதிதாக இருக்க வேண்டும் அல்லது கார் புதிதாக

இருக்க வேண்டும்!



கணவன்: நமது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாட

எங்கே செல்ல விரும்புகிறாய்?

மனைவி:இது வரை செல்லாத புதிய இடத்துக்கு.

கணவன்:சமையலறை?!


ஒரு தம்பதி கேட்டதைக் கொடுக்கும் கிணற்றுக்கு வந்தார்கள்.முதலில்,

கணவன் ஒரு காசைக் கிணற்றுக்குள் போட்டு விட்டு ஏதோ வேண்டிக்கொண்டான்.

அடுத்தது மனைவி காசைப் போட்டுக்

கிணற்றுக்குள் குனிந்தாள்,அதிகம் குனிந்ததால் கிணற்றுக்குள்

விழுந்து விட்டாள்.கணவன் அதைக்கண்டு அதிர்ச்சியடைந்தான்.

பின் உரக்கச் சொன்னான்.”உண்மை!உண்மை! கேட்டது உடனே

கிடைக்கிறது!!”


லிமெரிக்

..............

”கண்ணன் ஒரு வேலையில்லாத ஆளு

கல்யாண ஆசை வந்தது ஒரு நாளு

ராதா கிட்ட சொன்னான் ஆசை

கிடைத்தது அவனுக்கு நல்ல பூசை

இப்போ செய்வதில்லை அவன் ஓசை!”









73 கருத்துகள்:

  1. கணவன் மனைவியாக இருக்கும் வரை சரி தான், அப்பா அம்மாவாக மாறி விட்டால் சிக்கல் தான்

    பதிலளிநீக்கு
  2. இப்படி இருந்தால் எப்படிங்க...

    அப்புறம் திருமண பந்தமே அர்த்தமற்று போய்விடும்..

    பதிலளிநீக்கு
  3. /////
    ”எல்லா ஆண்களும் கட்டாயம் மணம் செய்து கொள்ள வேண்டும்;

    ஏனென்றால் மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கையாகி விடாது!”
    ////////

    அப்ப ஜனங்க சந்தோசமா இருந்தா தங்களுக்கு பிடிக்காது...

    என்ன ஒரு கொள்கை..

    பதிலளிநீக்கு
  4. திருமணம் சார்ந்த நகைச்சுவை, துணுக்குகள் கவிதை அனைத்தும் அசத்தல்..

    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  5. அண்ணன் என்ன சொல்ல வர்றாரு>? கல்யாணம் பண்ணலாமா? வேணாமா?

    பதிலளிநீக்கு
  6. ஒப்பந்தம் நல்லாத்தான் இருக்கு பாஸ்! :-)

    ஜோக்ஸ் எல்லாம் செம்ம! :-)

    என்னை மாதிரியே யோசிக்கிறீங்களே! உண்மைய சொல்லுங்க நீங்க 'யூத்' தானே?

    ப்ரோபைல்ல இருக்கிறது யாருபோட்டோ? சொல்லுங்க.. சொல்லுங்க.... சொல்லுங்க! :-)

    பதிலளிநீக்கு
  7. இணையத்தில் உலவும்போது ஒரு நகைச்சுவை படித்தேன் அன்பரே..

    நம்ம ஆட்சி மாறுனதால திமுக ஆட்சில கொண்டுவந்த திட்டங்கள் எதுவும் செல்லுபடியாகாது...
    அரசு அறிவிப்பு.....

    இலவச திருமணங்களும் செல்லுபடியாகாது..

    கணவர்கள் கொண்டாட்டம்!
    மனைவியர் திண்டாட்டம்!

    என்று..

    பதிலளிநீக்கு
  8. ”எல்லா ஆண்களும் கட்டாயம் மணம் செய்து கொள்ள வேண்டும்; ஏனென்றால் மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கையாகி விடாது!”


    ஒரு நண்பன் திருமண அழைப்பிதழ் தந்த நண்பனிடம் சொன்னான்..

    டேய் நிச்சயமாக வந்து கலந்துக்குறேன்டா..

    உன்னோட சந்தோசத்துல பங்கெடுத்த நா..

    உனக்கு ஒரு துன்பம்னா எப்படிடா கலந்துக்காமப் போவேன்..

    பதிலளிநீக்கு
  9. ”எல்லா ஆண்களும் கட்டாயம் மணம் செய்து கொள்ள வேண்டும்; ஏனென்றால் மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கையாகி விடாது!”


    ஒரு நண்பன் திருமண அழைப்பிதழ் தந்த நண்பனிடம் சொன்னான்..

    டேய் நிச்சயமாக வந்து கலந்துக்குறேன்டா..

    உன்னோட சந்தோசத்துல பங்கெடுத்த நா..

    உனக்கு ஒரு துன்பம்னா எப்படிடா கலந்துக்காமப் போவேன்..

    பதிலளிநீக்கு
  10. அதிகம் சந்தோஷமாக இருப்பது பிரம்மச்சாரிகள்தான் என்று சொல்லப்படுவது உண்மைதானா? ஒப்பந்தம் என்பது மிக அபத்தமான யோசனை என்றே கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. அதெல்லாம் சரி. மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்தான் என்ன?

    பதிலளிநீக்கு
  12. ஐயா...பதிவில் ஹை லைட் லிமரிக்!
    ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  13. திருமணச் சட்டம் பற்றிய புதிய தகவலோடு, திருமண உறவினை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் எனும் ஐடியாக்களையும் சொல்லியிருக்கிறீங்க.

    லிமரிக் சூப்பர் ஐயா.

    பதிலளிநீக்கு
  14. ரெண்டு வருசத்துக்குள்ள குழந்தை பொறந்துட்டா, அரசாங்கமே குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளுமா?

    பதிலளிநீக்கு
  15. இன்று என் வலையில்
    நாஞ்சில் மனோ Vs கருண் Vs சி.பி – யார் அதுல பெரிய ஆள்?

    பதிலளிநீக்கு
  16. மேலைய நாகரீகம் எங்கே
    போய் முடியுமோ தெரியாது
    மற்றவை அனைத்தும்
    சிறப்பே!
    ஓ.9
    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  17. அப்போ டாகுடருக்கு மெக்சிக்கோவிலேயும் சிலை வெச்சிடுவாங்க.......

    பதிலளிநீக்கு
  18. ”எல்லா ஆண்களும் கட்டாயம் மணம் செய்து கொள்ள வேண்டும்;

    ஏனென்றால் மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கையாகி விடாது!”///////

    அண்ணனும் அதுக்காகத்தான் கல்யாணம் பண்ணீங்களா?ஹா ஹா ஹா !!!!

    பதிலளிநீக்கு
  19. திருமணம் பற்றி நல்ல தகவல்கள் ஜயா........

    ஆமா நீங்களும் டாகுத்தருக்கு எதிர்டீமா.ஹி.ஹி.ஹி.ஹி..

    பதிலளிநீக்கு
  20. எங்களைப்போன்ற வாலிபர்களுக்கு அவசியமான பதிவு வாழ்த்துக்கள்..!

    பதிலளிநீக்கு
  21. அண்ணே எப்பிடி இப்பிடி ஹஹஹா!

    பதிலளிநீக்கு
  22. ஐயோ தல, பின்னிட்டீங்க போங்க ரசிச்சி சிரிச்சேன்....

    பதிலளிநீக்கு
  23. எனக்கும் ஒரு மொரோக்கோ நண்பி இருக்கிறாள், இந்த சுஜாதா ஜோக்கை சொன்னால் அடிக்க வருகிறாள் ஹி ஹி....

    பதிலளிநீக்கு
  24. suryajeeva கூறியது...

    //கணவன் மனைவியாக இருக்கும் வரை சரி தான், அப்பா அம்மாவாக மாறி விட்டால் சிக்கல் தான்//
    சரியே!
    நன்றி சூர்யஜீவா.

    பதிலளிநீக்கு
  25. கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

    //இப்படி இருந்தால் எப்படிங்க...

    அப்புறம் திருமண பந்தமே அர்த்தமற்று போய்விடும்..//
    காலம் செய்யும் கோலம்!

    பதிலளிநீக்கு
  26. கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

    /////
    ”எல்லா ஆண்களும் கட்டாயம் மணம் செய்து கொள்ள வேண்டும்;

    ஏனென்றால் மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கையாகி விடாது!”
    ////////

    //அப்ப ஜனங்க சந்தோசமா இருந்தா தங்களுக்கு பிடிக்காது...

    என்ன ஒரு கொள்கை..//
    இன்பமும் துன்பமும் கலந்ததுதானே வாழ்க்கை?

    பதிலளிநீக்கு
  27. கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

    // திருமணம் சார்ந்த நகைச்சுவை, துணுக்குகள் கவிதை அனைத்தும் அசத்தல்..

    வாழ்த்துக்கள்..//
    நன்றி சௌந்தர்.

    பதிலளிநீக்கு
  28. திருமணம் செய்து கொள்ளாமலேயே, ஒப்பந்தம் செய்துகொண்டு வாழும்(?) முறையை நம் நாட்டில் முதன் முதல் குஜராத் தான் ஆரம்பித்து வைத்தது என நினைக்கிறேன்.

    நல்ல வேளை இந்த தொற்று வியாதி நாட்டில் அதிகமாக பரவவில்லை. என்னதான் சொன்னாலும் திருமண பந்தம் ஒப்பந்தம் ஆக மாறுவது ஆரோக்கியமானது அல்ல.

    இருப்பினும் தங்களது பதிவு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது உனமை.

    பதிலளிநீக்கு
  29. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    //அண்ணன் என்ன சொல்ல வர்றாரு>? கல்யாணம் பண்ணலாமா? வேணாமா?//
    அவங்கவங்க சௌகரியம்!
    நன்றி சிபி.

    பதிலளிநீக்கு
  30. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //சூப்பர்.,

    கலக்கல் ஜோக்..//
    நன்றி கருன்.

    பதிலளிநீக்கு
  31. ஜீ... கூறியது...

    //ஒப்பந்தம் நல்லாத்தான் இருக்கு பாஸ்! :-)

    ஜோக்ஸ் எல்லாம் செம்ம! :-)

    என்னை மாதிரியே யோசிக்கிறீங்களே! உண்மைய சொல்லுங்க நீங்க 'யூத்' தானே?

    ப்ரோபைல்ல இருக்கிறது யாருபோட்டோ? சொல்லுங்க.. சொல்லுங்க.... சொல்லுங்க! //
    சந்தேகமே வேண்டாம்,நான் ‘யூத்’ தாங்க,உள்ளத்தளவில்!
    நன்றி ஜீ.

    பதிலளிநீக்கு
  32. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

    //இணையத்தில் உலவும்போது ஒரு நகைச்சுவை படித்தேன் அன்பரே..

    நம்ம ஆட்சி மாறுனதால திமுக ஆட்சில கொண்டுவந்த திட்டங்கள் எதுவும் செல்லுபடியாகாது...
    அரசு அறிவிப்பு.....

    இலவச திருமணங்களும் செல்லுபடியாகாது..

    கணவர்கள் கொண்டாட்டம்!
    மனைவியர் திண்டாட்டம்!

    என்று..//
    அருமை!

    பதிலளிநீக்கு
  33. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...

    ”எல்லா ஆண்களும் கட்டாயம் மணம் செய்து கொள்ள வேண்டும்; ஏனென்றால் மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கையாகி விடாது!”


    //ஒரு நண்பன் திருமண அழைப்பிதழ் தந்த நண்பனிடம் சொன்னான்..

    டேய் நிச்சயமாக வந்து கலந்துக்குறேன்டா..

    உன்னோட சந்தோசத்துல பங்கெடுத்த நா..

    உனக்கு ஒரு துன்பம்னா எப்படிடா கலந்துக்காமப் போவேன்..//
    நல்ல ஜோக்!
    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  34. கணேஷ் கூறியது...

    //அதிகம் சந்தோஷமாக இருப்பது பிரம்மச்சாரிகள்தான் என்று சொல்லப்படுவது உண்மைதானா? //
    இருக்கலாம்!

    //ஒப்பந்தம் என்பது மிக அபத்தமான யோசனை என்றே கருதுகிறேன்.//
    ஏதோ புதிதாக முயற்சி செய்கிறார்கள்!
    நன்றி கணேஷ்.

    பதிலளிநீக்கு
  35. Nagasubramanian கூறியது...

    //அதெல்லாம் சரி. மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்தான் என்ன?//
    அய்யோ!இங்க சொல்லக்கூடாதுங்க!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  36. நிரூபன் கூறியது...

    // ஐயா...பதிவில் ஹை லைட் லிமரிக்!
    ரசித்தேன்//

    நன்றி நிரூ!

    பதிலளிநீக்கு
  37. நிரூபன் கூறியது...

    //திருமணச் சட்டம் பற்றிய புதிய தகவலோடு, திருமண உறவினை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் எனும் ஐடியாக்களையும் சொல்லியிருக்கிறீங்க.

    லிமரிக் சூப்பர் ஐயா.//

    மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  38. செங்கோவி கூறியது...

    //ரெண்டு வருசத்துக்குள்ள குழந்தை பொறந்துட்டா, அரசாங்கமே குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளுமா?//

    ஒப்பந்தத்திலேயே இதையும் சேர்த்துக் கொள்வார்களோ?

    நன்றி செங்கோவி.

    பதிலளிநீக்கு
  39. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    //அருமையான பதிவு//
    நன்றி ராஜா.

    பதிலளிநீக்கு
  40. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    //இன்று என் வலையில்
    நாஞ்சில் மனோ Vs கருண் Vs சி.பி – யார் அதுல பெரிய ஆள்?//
    பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
  41. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    //மேலைய நாகரீகம் எங்கே
    போய் முடியுமோ தெரியாது
    மற்றவை அனைத்தும்
    சிறப்பே!
    ஓ.9//
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  42. பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

    //அப்போ டாகுடருக்கு மெக்சிக்கோவிலேயும் சிலை வெச்சிடுவாங்க.......//
    அங்கேயும் பாலாபிஷேகமா?!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  43. Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...

    ”எல்லா ஆண்களும் கட்டாயம் மணம் செய்து கொள்ள வேண்டும்;

    ஏனென்றால் மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கையாகி விடாது!”///////

    //அண்ணனும் அதுக்காகத்தான் கல்யாணம் பண்ணீங்களா?ஹா ஹா ஹா !!!!//

    ஆமாங்க!வாழ்க்கைன்னா எல்லாம் இருக்கணும்ல!
    நன்றி பவுடர் ஸ்டார்.

    பதிலளிநீக்கு
  44. K.s.s.Rajh கூறியது...

    //திருமணம் பற்றி நல்ல தகவல்கள் ஜயா........

    ஆமா நீங்களும் டாகுத்தருக்கு எதிர்டீமா.ஹி.ஹி.ஹி.ஹி..//

    ஒரு ஜாலிதான்.
    நன்றி ராஜ்.

    பதிலளிநீக்கு
  45. Nirosh கூறியது...

    // எங்களைப்போன்ற வாலிபர்களுக்கு அவசியமான பதிவு வாழ்த்துக்கள்..!//

    நன்றி நிரோஷ்.

    பதிலளிநீக்கு
  46. விக்கியுலகம் கூறியது...

    //அண்ணே எப்பிடி இப்பிடி ஹஹஹா!//
    அப்படித்தான்,ஹா,ஹா!
    நன்றி விக்கி.

    பதிலளிநீக்கு
  47. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    // ஐயோ தல, பின்னிட்டீங்க போங்க ரசிச்சி சிரிச்சேன்....//

    நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  48. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    // காலம் கலிகாலம் தல.....!!!//
    கரெக்ட்!

    பதிலளிநீக்கு
  49. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //எனக்கும் ஒரு மொரோக்கோ நண்பி இருக்கிறாள், இந்த சுஜாதா ஜோக்கை சொன்னால் அடிக்க வருகிறாள் ஹி ஹி....//
    தைரியம் அதிகம்தான் உங்களுக்கு!

    பதிலளிநீக்கு
  50. ”கண்ணன் ஒரு வேலையில்லாத ஆளு
    கல்யாண ஆசை வந்தது ஒரு நாளு
    ராதா கிட்ட சொன்னான் ஆசை
    கிடைத்தது அவனுக்கு நல்ல பூசை
    இப்போ செய்வதில்லை அவன் ஓசை!”

    நிஜமாவா சொல்லுறீங்க நம்பவே முடியல்ல ஹி..ஹி ..ஹி ..
    மிக அழகாக திருமண பந்தம்பற்றிச் சொன்னீர்கள் .மிக்க
    நன்றி ஐயா பகிர்வுக்கு .எல்லா ஓட்டும் போட்டுட்டேன் .

    பதிலளிநீக்கு
  51. திருமணம் சார்ந்த நகைச்சுவை, துணுக்குகள் கவிதை அனைத்தும் அருமை

    பதிலளிநீக்கு
  52. நல்ல கல்யாண சாப்பாடு..முதல் பந்தியில்...

    பதிலளிநீக்கு
  53. //திருமணம் என்பது ஒரு வாழ்நாள் பந்தம் என்பதை மாற்றி மணம்
    செய்து கொள்பவர்கள் விருப்பத்துக்கேற்ப திருமண உறவுக்கான
    காலத்தைத் தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை வழங்கப்
    போகிறார்கள்.//

    அன்பு நண்பருக்கு முதல் வருகை.இனிமேல் முற்றிலும் தொடர்கிறேன்


    இந்த நிலை இந்தியாவிற்க்கு கொண்டு வேண்டாமென்பது என் எண்ணம்

    பதிலளிநீக்கு
  54. அம்பாளடியாள் சொன்னது…

    ”கண்ணன் ஒரு வேலையில்லாத ஆளு
    கல்யாண ஆசை வந்தது ஒரு நாளு
    ராதா கிட்ட சொன்னான் ஆசை
    கிடைத்தது அவனுக்கு நல்ல பூசை
    இப்போ செய்வதில்லை அவன் ஓசை!”

    // நிஜமாவா சொல்லுறீங்க நம்பவே முடியல்ல ஹி..ஹி ..ஹி ..
    மிக அழகாக திருமண பந்தம்பற்றிச் சொன்னீர்கள் .மிக்க
    நன்றி ஐயா பகிர்வுக்கு .எல்லா ஓட்டும் போட்டுட்டேன் .//


    நன்றி அம்பாளடியாள்.

    பதிலளிநீக்கு
  55. மகேந்திரன் கூறியது...

    // திருமணம் சார்ந்த நகைச்சுவை, துணுக்குகள் கவிதை அனைத்தும் அருமை//
    நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  56. ரெவெரி கூறியது...

    //நல்ல கல்யாண சாப்பாடு..முதல் பந்தியில்...//

    நன்றி ரெவெரி.

    பதிலளிநீக்கு
  57. கோகுல் கூறியது...

    //கலக்கிட்டிங்க போங்க!//
    நன்றி கோகுல்.

    பதிலளிநீக்கு
  58. சம்பத்குமார் கூறியது...

    //திருமணம் என்பது ஒரு வாழ்நாள் பந்தம் என்பதை மாற்றி மணம்
    செய்து கொள்பவர்கள் விருப்பத்துக்கேற்ப திருமண உறவுக்கான
    காலத்தைத் தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை வழங்கப்
    போகிறார்கள்.//

    //அன்பு நண்பருக்கு முதல் வருகை.இனிமேல் முற்றிலும் தொடர்கிறேன்//

    நன்றி சம்பத்குமார்.


    //இந்த நிலை இந்தியாவிற்க்கு கொண்டு வேண்டாமென்பது என் எண்ணம்//
    நமது கலாச்சாரமே வேறல்லவா?

    பதிலளிநீக்கு
  59. கலக்கலோ கலக்கல்

    தமிழ் மணம் 20

    பதிலளிநீக்கு
  60. டாக்குட்டரோட படக்கதை மெக்சிகோவில் சட்டமாக போகுதா,,

    அது தெலுங்குப்பட ரீமேக் இல்ல ஹிந்திப்பட ரீமேக் ஆனால் எது முன்ன வந்ததுன்னு தெரியாது ஹிந்தியில் அனில்கபூர்..

    //மெக்சிகோ என்றதுமே சுஜாதாவின் சலவைக்காரி
    ஜோக் நினைவுக்கு வரக்கூடாது!// ஹா ஹா..

    கடைசியில் சொன்ன கிணறு ஜோக் சூப்பர்,,

    பதிலளிநீக்கு
  61. @Nagasubramanian,

    மெக்சிகோ சலவைக்காரி ஜோக் -
    http://manappal.blogspot.com/2009/04/blog-post_29.html

    பதிலளிநீக்கு
  62. FOOD கூறியது...

    // கல்யாண வாழ்க்கை அனைவருக்கும், கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்தானா!//

    :) :(
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  63. M.R கூறியது...

    //கலக்கலோ கலக்கல்

    தமிழ் மணம் 20//
    நன்றி ரமேஷ்.

    பதிலளிநீக்கு
  64. Riyas கூறியது...

    டாக்குட்டரோட படக்கதை மெக்சிகோவில் சட்டமாக போகுதா,,

    அது தெலுங்குப்பட ரீமேக் இல்ல ஹிந்திப்பட ரீமேக் ஆனால் எது முன்ன வந்ததுன்னு தெரியாது ஹிந்தியில் அனில்கபூர்..

    //மெக்சிகோ என்றதுமே சுஜாதாவின் சலவைக்காரி
    ஜோக் நினைவுக்கு வரக்கூடாது!// ஹா ஹா..

    //கடைசியில் சொன்ன கிணறு ஜோக் சூப்பர்,,//
    நன்றி ரியாஸ்.

    பதிலளிநீக்கு
  65. Tamilan கூறியது...

    @Nagasubramanian,

    //மெக்சிகோ சலவைக்காரி ஜோக் -
    http://manappal.blogspot.com/2009/04/blog-post_29.html//
    நாகசுப்பிரமணியன் சார்பில் நன்றி!!

    பதிலளிநீக்கு
  66. திருமணம் என்னும் பந்தம்... திருமணம் பற்றி சொன்ன விஷயங்கள் :)

    லிமெரிக் - சூப்பர்....

    பதிலளிநீக்கு
  67. வெங்கட் நாகராஜ் கூறியது...

    // திருமணம் என்னும் பந்தம்... திருமணம் பற்றி சொன்ன விஷயங்கள் :)

    லிமெரிக் - சூப்பர்....//
    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  68. இன்னும் தீர்மானமாகவில்லை. catholic communityல் இது போன்ற தீர்வுகள் மிகக் கடினம்.

    பதிலளிநீக்கு
  69. அருமையான பதிவு

    https://www.tamilantech.com/?m=1

    பதிலளிநீக்கு