அவர்கள் இருவரும் மிக,மிக மகிழ்ச்சியாக இருந்தனர்.
அந்த மகிழ்ச்சி அவர்கள் ஒவ்வொரு அசைவிலும் தெரிந்தது.
“ராணி!மறக்க முடியாத இண்டு மாதங்கள்! இல்லையா?”
”ஆம் ரவி!பூலோக சொர்க்கம்தான்.அந்தக் காட்டேஜும், வசதிகளும்,அபாரம். பணம் கொடுத்தாலும் இப்படி ஒரு வசதி கிடைக்க வேண்டுமே?”
”நீ சொல்வது சரிதான்.அந்தக் காலத்தில் ராஜாக்கள் இப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள்”
”ரவி!ராஜாக்கள் உல்லாசமாக வாழ்ந்திருந்தாலும்,அவர்களுக்கும் எவ்வளவோ,கவலைகள்,பிரச்சினைகள் இருந்திருக்கும்.நாம் அப்படியல்லவே?எந்த
விதமான கவலைகளும் இல்லாத வாழ்க்கை அல்லவா?”
”ஆம் ராணி!அந்த ரிசார்ட்டில்தான் எத்தனை வசதிகள்?என்ன சுவையான உணவு? எத்தனை பொழுது போக்கு அம்சங்கள்?எதை நாம் விட்டு வைத்தோம்?தினம் நீச்சல் குளத்தில்குளியல்!வாரம் ஒரு முறை மசாஜ்!கோல்ஃப்,பில்லியர்ட்ஸ் என்று பொழுது போக்கு.நல்ல பசி,நல்ல சாப்பாடுஅத்துடன் தினமும்,இரவில்……! என்று கண்களை சிமிட்டினான் ரவி.
ராணி முகம் சிவந்தாள்.”சீ!எப்போதும் அதே நினைவு!இப்போதுதான் கல்யாணம் ஆன மாதிரி.எனக்கு வயது 36,உங்களுக்கு 39.கல்யாணமாகி 10 ஆண்டுகளாகி விட்டன.நினைவிருக்கட்டும்!”
”10 வருடம் போனதே தெரியவில்ல ராணி.ஒரு விநாடி கூட துன்பம் இல்லாத, போரடிக்காத வாழ்க்கையல்லவா,நம்முடையது.விடுமுறையில் எல்லா நாடுகளையும் சுற்றி வந்து விட்டோம்.எல்லா வித உணவுகளையும் ருசி பார்த்து விட்டோம்!எல்லா விதமாகவும்….”
“ அய்யோ!செக்கு மாடு மாதிரி திரும்பவும் அங்கேயே வந்து நிற்கிறீர்களே!”
”நிறைய சம்பாதிதோம்,செலவழித்தோம்,சேமிக்கவும் செய்தோம்.எந்தக் குறையும் இல்லை ரவி” என்று சொல்லி விட்டு மெல்லிய குரலில் “குறை ஒன்றும் இல்லை” என்று பாட ஆரம்பித்தாள்.
ரவி ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தான்பாட்டு முடிந்தது.ரவி ராணியை அணைத்து,நெற்றியில்,கன்னத்தில் ,உதட்டில் முத்தமிட்டான்.அவளை அழைத்துச் சென்று கட்டிலில் அமர்த்திக் கொண்டான்.
“நினைத்துப் பார்க்கையில் எவ்வளவு நிறைவான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம் என்பது புரிகிறது,ராணி.இது போதும்.”
“ஆம் ரவி பத்தாண்டுகளில்,நூறாண்டு சந்தோசம் அனுபவித்து விட்டோம்.இது போதும்”
இருவரும் ஒருவர் கண்களை ஒருவர் ஆழப் பார்க்கின்றனர்,கண்கள் வழியாக மனதையே படிப்பது போல்.
”அப்படியென்றால்”
“ஆம் ரவி அதேதான்!இனி வாழ என்ன இருக்கிறது.முடித்துக் கொள்வோம்!”
ஒரு பேப்பர் எடுக்கின்றனர்.கடிதம் எழுதிகின்றனர்”எங்கள் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை.நிறைவாக வாழ்ந்து விட்டோம்.முடித்துக் கொள்கிறோம். உறவினர்களுக்குச் சொல்லி விடுங்கள்.எங்களுக்குச் சொந்தமான இந்த வீடு மற்றும் சில சொத்தெல்லாம் இணைத்திருக்கும் உயிலில் பிரித்துக் கொடுத்திருக்கிறோம்.
எங்கள் உடலை மின் மயானத்தில் தகனம் செய்ய வேண்டும்.அதற்காக ரூ.10000/- உறையில் போட்டு வைத்திருக்கிறோம்.செல்கிறோம்”
தூக்க மாத்திரைகளை ஒவ்வொன்றாக,ஒருவர் வாயில் மற்றவர் போடுகின்றனர்……………………
டைம்ஸ் ஆஃப் இந்தியா,8-10-2011.
பனாஜி
நிறைவாக வாழ்ந்த தம்பதி தற்கொலை!
.........................................................................................................................
பிற்சேர்க்கை: பின்னூட்டங்களைப் பார்க்கும்போது இந்தப் பிற்சேர்க்கை அவசியமாகப் படுகிறது.இது கதையல்ல நிஜம்.!இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த ஒரு செய்தியை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட கதை.கதை முடிவு கற்பனையல்ல!
திகட்ட திகட்ட வாழ்வது என்பது இது போலதானா?
பதிலளிநீக்குதுக்கத்தில் தற்கொலை அறிந்திருக்கிறேன்!
அதீத மகிழ்விலும் தற்கொலையா?
அதிர்ச்சிதான்!
நூறாண்டு வாழ்க என வாழ்த்துக்களுடன் இல்லறத்தில் இணைந்தவர்கள் பத்தாண்டுகளுடன் வாழ்வை முடித்துக்கொண்டது நிறைவாக உணரமுடியவில்லை -அவர்கள் நிறைவாக வாழ்ந்தாலும்!
பதிலளிநீக்குவாழ்கையின் சந்தோஷ தினங்களை கூறி கடைசியில் மனம் கணக்க வைக்கிறது இந்த சிறுகதை
பதிலளிநீக்குஅதிலும் கடைசி வரிகள்
//எங்கள் உடலை மின் மயானத்தில் தகனம் செய்ய வேண்டும்.அதற்காக ரூ.10000/- உறையில் போட்டு வைத்திருக்கிறோம்.செல்கிறோம்”//
யாதார்தமாய் படுகிறது எனக்கு
நன்றியுடன்
சம்பத்குமார்
காலை வணக்கம்!என்னங்க இது காலங்காத்தால?
பதிலளிநீக்குபத்து வருடம் நிறைவாக வாழ்ந்தாலும் தற்கொலை தேவைஇல்லாத முடிவு
பதிலளிநீக்குஉரைநடைகள் மிகவும் இயற்கையாக
பதிலளிநீக்குவந்துள்ளன
முடிவும் இயற்கையாக அமைந்து
விட்டது
புலவர் சா இராமாநுசம்
நிஜமாகவே நடந்ததா? உங்கள் கற்பனை கொஞ்சம் கலந்ததா? இப்படியும் நடக்குமா? நடக்க வாய்ப்பிருக்கிறதா? அட போங்கப்பா... கேள்வியா கேட்டுகிட்டு... கற்பனை அருமை நண்பரே
பதிலளிநீக்குகதையின் கான்செப்ட் எனக்கு பிடிக்கவில்லை.
பதிலளிநீக்குதிகட்டத் திகட்ட வாழ்ந்து அனுபவித்தாலும் தற்கொலை செய்துகொள்வது என்பது தவறான முடிவுதான் ஐயா...
பதிலளிநீக்குகதைக்குக் கூட நன்றாக இருக்காது இந்த முடிவு... :(
கோகுல் கூறியது...
பதிலளிநீக்கு//திகட்ட திகட்ட வாழ்வது என்பது இது போலதானா?
துக்கத்தில் தற்கொலை அறிந்திருக்கிறேன்!
அதீத மகிழ்விலும் தற்கொலையா?
அதிர்ச்சிதான்!//
இப்படியும் சிலர்.
நன்றி கோகுல்.
இராஜராஜேஸ்வரி கூறியது...
பதிலளிநீக்குநூறாண்டு வாழ்க என வாழ்த்துக்களுடன் இல்லறத்தில் இணைந்தவர்கள் பத்தாண்டுகளுடன் வாழ்வை முடித்துக்கொண்டது நிறைவாக உணரமுடியவில்லை -அவர்கள் நிறைவாக வாழ்ந்தாலும்!
இன்றைய செய்தியின் அடிப்படையில் புனையப்பட்ட கதையே
நன்றி.
சம்பத்குமார் கூறியது...
பதிலளிநீக்குவாழ்கையின் சந்தோஷ தினங்களை கூறி கடைசியில் மனம் கணக்க வைக்கிறது இந்த சிறுகதை
அதிலும் கடைசி வரிகள்
//எங்கள் உடலை மின் மயானத்தில் தகனம் செய்ய வேண்டும்.அதற்காக ரூ.10000/- உறையில் போட்டு வைத்திருக்கிறோம்.செல்கிறோம்”//
// யாதார்தமாய் படுகிறது எனக்கு//
இது உண்மைச் சம்பவம்
நன்றி.
Yoga.s.FR கூறியது...
பதிலளிநீக்கு//காலை வணக்கம்!என்னங்க இது காலங்காத்தால?//
செய்தி படித்தேன்,கதை பிறந்தது.
நன்றி.
வைரை சதிஷ் கூறியது...
பதிலளிநீக்கு// பத்து வருடம் நிறைவாக வாழ்ந்தாலும் தற்கொலை தேவைஇல்லாத முடிவு//
அவர்கள் அப்படி தீர்மானித்து விட்டார்களே!
நன்றி சதீஷ்.
புலவர் சா இராமாநுசம் கூறியது...
பதிலளிநீக்கு//உரைநடைகள் மிகவும் இயற்கையாக
வந்துள்ளன
முடிவும் இயற்கையாக அமைந்து
விட்டது//
நன்றி ஐயா!
suryajeeva கூறியது...
பதிலளிநீக்கு//நிஜமாகவே நடந்ததா? உங்கள் கற்பனை கொஞ்சம் கலந்ததா? இப்படியும் நடக்குமா? நடக்க வாய்ப்பிருக்கிறதா? அட போங்கப்பா... கேள்வியா கேட்டுகிட்டு... கற்பனை அருமை நண்பரே//
பதிவில் பிற்சேர்க்கை பாருங்கள்.
நன்றி சூரிய ஜீவா.
N.H.பிரசாத் கூறியது...
பதிலளிநீக்கு//கதையின் கான்செப்ட் எனக்கு பிடிக்கவில்லை.//
நான் என்ன செய்ய?பதிவில் பிற்சேர்க்கை பாருங்கள்.
நன்றி பிரசாத்
பதிலளிநீக்குஎனக்கு தெரிஞ்சு... இப்படி கஷ்டப்பட்டு காலம்பூரா வாழ்வது எதற்காக... நிம்மதியாக வாழமாட்டோமா நினைச்சதை அடைந்து சந்தோசப்படமாட்டோமா என ஏங்கி அடைந்து விட்டோமா எனில் அது கேள்வி குறி தான்.. ஆனால் பத்து வருடம் திருப்திகரமாக வாழ்ந்து இந்த முடிவை எடுத்திருக்கின்றனர்.. இதில் அதிர்ச்சியடைய எதுவும் இல்லை...
பதிலளிநீக்குவெங்கட் நாகராஜ் கூறியது...
பதிலளிநீக்கு//திகட்டத் திகட்ட வாழ்ந்து அனுபவித்தாலும் தற்கொலை செய்துகொள்வது என்பது தவறான முடிவுதான் ஐயா...
கதைக்குக் கூட நன்றாக இருக்காது இந்த முடிவு... :(//
நிஜத்திலேயே நடந்துவிட்டதே வெங்கட்?
நன்றி.
அவர்களது ஆதமாக்களும் எளிதாக சாந்தியடையும்... 100 ஆண்டுகள் வாழ்ந்து எவன் திருப்திகரமாக சாகிறான் யாராவது ஒருவரை உதாரணத்தை சொல்லுங்கள் பார்க்கலாம்... சோ அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமாய உலகம் கூறியது...
பதிலளிநீக்கு// எனக்கு தெரிஞ்சு... இப்படி கஷ்டப்பட்டு காலம்பூரா வாழ்வது எதற்காக... நிம்மதியாக வாழமாட்டோமா நினைச்சதை அடைந்து சந்தோசப்படமாட்டோமா என ஏங்கி அடைந்து விட்டோமா எனில் அது கேள்வி குறி தான்.. ஆனால் பத்து வருடம் திருப்திகரமாக வாழ்ந்து இந்த முடிவை எடுத்திருக்கின்றனர்.. இதில் அதிர்ச்சியடைய எதுவும் இல்லை...//
அவர்கள் வித்தியாசமானவர்கள்!
நன்றி ராஜேஷ்.
மாய உலகம் கூறியது...
பதிலளிநீக்கு// அவர்களது ஆதமாக்களும் எளிதாக சாந்தியடையும்... 100 ஆண்டுகள் வாழ்ந்து எவன் திருப்திகரமாக சாகிறான் யாராவது ஒருவரை உதாரணத்தை சொல்லுங்கள் பார்க்கலாம்...//
திருப்தி என்றுமே ஏற்படுவதில்லை!
//சோ அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்//
இங்கு ஏன்?
நல்ல கதை என்று பாராட்ட நினைத்தேன்.ஆனால் இது உண்மையான நிகழ்வை வைத்து எழுதப்பட்டது என்றதும்,மனம் ஏனோ சங்கடப்பட்டது. சிலசமயம் நிஜங்கள்,கதைகளை விட சோகத்தை தருகின்றன என்பது உண்மை.இருப்பினும் தங்களது எழுத்து நடைக்கு பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குபத்து வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கை திருப்த்தியடைந்து.. அதை முடித்துக் கொண்டது துரதிஷ்டவசமானது. தவிர்த்திருக்கலாம். அதே திருப்தியை இன்னும் பலருக்கு அவர்கள் வழங்க முடிந்திருக்குமானால் பாராட்டியிருக்கலாம்.உங்கள் கதையைப்பற்றியல்ல செய்தி என்ற அடிப்படையிலே இதைச் சொல்கிறேன்.
பதிலளிநீக்குவாழ்வதற்கு இன்னும் பயிற்ச்சி வேணுமோ...!!!
பதிலளிநீக்குபத்தாணு வாழ்ந்தவர்களுக்கு குழந்தைகள் இல்லையா...??? அதைப்பற்றி சொல்லவில்லையே தல....
பதிலளிநீக்குகுழந்தை இல்லாத காரணமாக இருக்கலாம் அல்லவா...??
பதிலளிநீக்குபெற்றோர் உறவினரின் அணுகுமுறை'யில் கூட தவறு இருப்பதாக தெரிகிறது...!!! எப்பிடியோ ரெண்டு உயிர் போனது அநியாயம்.
பதிலளிநீக்குதமிழ்மணம் ஏழு...
பதிலளிநீக்குஅவர்களின் குழந்தைகள் பற்றிய விபரங்கள் ஒன்றும் இல்லையே.இல்லாததினால் தான் இந்த முடிவோ?
பதிலளிநீக்குகருத்துரை எழுதியபோது
பதிலளிநீக்குஓட்டுப் பட்டை காணவில்லை
கனவே மீண்டும் வந்து ஓட்டளித்தேன்
புலவர் சா இராமாநுசம்
அண்ணே எல்லாம் கெடைச்சிட்டா பயணம் நிறைவை நோக்கி போகும்ங்கர விஷயம் உறைக்குது...இப்படியும் இருக்காங்க என்பது ஆச்சர்யமே!...பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குதற்கொலை செய்துகொள்வது தவறான முடிவு...
பதிலளிநீக்குஇவர்கள் செய்தி எமக்கு புதுமை
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ் மணம் 11
ம் ...
பதிலளிநீக்குஉண்மையான சம்பவத்தை மிகவும் நன்றாக சித்தரித்து உள்ளீர்கள் .தாமரை நெஞ்சம் படம் இறுதி காட்சி பார்த்த உணர்வு ! எந்த மன நிலையில் அந்த ஆதர்ஷ் தம்பதியர் இந்த முடிவினை தேர்ந்து எடுத்தார்களோ ? வாழ்கையில் தோல்வி அடைந்தவர்களும் , அதீத துன்பம் அனுபவிப்பவிர்களும் மட்டுமே பொதுவாக எடுக்கும் முடிவினை எந்த விதத்திலும் துன்பத்தினை காணாதவர்கள் எடுத்தது ஏன் என புரியவில்லை ! தன்னுடைய உணர்வுகளுக்கு மட்டுமே முக்யத்துவம் கொடுத்து தன்னை சார்ந்தவர்களின் உணர்வுகளை என் மதிக்க தவறினார்களோ ? வாசுதேவன்
பதிலளிநீக்குமுடிவு ரொம்ப கொடுமை
பதிலளிநீக்குஇன்று என் ப்ளாக் இல் ...
பதிலளிநீக்குதெரியுமா உங்களுக்கு ?
காலைலேயே பதிவை வாசித்துவிட்டேன் .மனபாரத்தினால் தாமதமான கருத்துரை இடுகிறேன் .செய்திதாளில் வந்த ஒரு செய்தியை வைத்து அருமையான சிறுகதை !!!!!!!!!சிறுகதை முடிவில் இது ஒரு உண்மை சம்பவம் என அறிந்ததும் அதிர்ந்தேன் .எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத வாழ்க்கை--------எல்லாம் கிடைத்தும் எதுவும் கிடைக்காதது போன்ற மாயை.இன்றைய அவசர உலகில் அனைவருக்கும் கூட்டுகுடும்ப கவுன்சிலிங் தேவைப்படுகிறது .கிடைக்குமா ?????????(தமிழ் வெப்துனியா-இந்த செய்தியை--சம்பவத்தை --- வெளியிட்டு இருக்கிறார்கள் .)
பதிலளிநீக்குமனதை வருடிவிட்டது
பதிலளிநீக்குவே.நடனசபாபதி சொன்னது…
பதிலளிநீக்கு// நல்ல கதை என்று பாராட்ட நினைத்தேன்.ஆனால் இது உண்மையான நிகழ்வை வைத்து எழுதப்பட்டது என்றதும்,மனம் ஏனோ சங்கடப்பட்டது. சிலசமயம் நிஜங்கள்,கதைகளை விட சோகத்தை தருகின்றன என்பது உண்மை.இருப்பினும் தங்களது எழுத்து நடைக்கு பாராட்டுக்கள்.//
நன்றி ஐயா.
த. ஜார்ஜ் கூறியது...
பதிலளிநீக்கு// பத்து வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கை திருப்த்தியடைந்து.. அதை முடித்துக் கொண்டது துரதிஷ்டவசமானது. தவிர்த்திருக்கலாம். அதே திருப்தியை இன்னும் பலருக்கு அவர்கள் வழங்க முடிந்திருக்குமானால் பாராட்டியிருக்கலாம்.உங்கள் கதையைப்பற்றியல்ல செய்தி என்ற அடிப்படையிலே இதைச் சொல்கிறேன்.//
என்ன செய்ய?
நன்றி ஜார்ஜ்.
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு//வாழ்வதற்கு இன்னும் பயிற்ச்சி வேணுமோ...!!!//
அவர்கள் வாழ்வே ஒரு பயிற்சிதான்.
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு//பத்தாணு வாழ்ந்தவர்களுக்கு குழந்தைகள் இல்லையா...??? அதைப்பற்றி சொல்லவில்லையே தல....//
செய்தியில் அத்தகவல் இல்லை.நான் நினைப்பது,அவர்கள் குழந்தைகள் வேண்டாம் என்று முன்கூட்டியே திட்டமிட்டிருப்பார்கள்.
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு//குழந்தை இல்லாத காரணமாக இருக்கலாம் அல்லவா...??//
நிச்சயம் இல்லை.அவர்கள் கடிதம் தெளிவாகச் சொல்கிறது ஏன் என்று.
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு// பெற்றோர் உறவினரின் அணுகுமுறை'யில் கூட தவறு இருப்பதாக தெரிகிறது...!!! எப்பிடியோ ரெண்டு உயிர் போனது அநியாயம்.//
யார் மீதும் தவறு இருப்பதாகத் தோன்றவில்லை.அவர்கள் இந்த முடிவை பல ஆண்டுகளுக்கு முன்பே எடுத்தே,வாழ்க்கையை முழுவதும் அனுபவித்திருக்க வேண்டும்.
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு// தமிழ்மணம் ஏழு...//
நன்றி மனோ.
சேக்காளி கூறியது...
பதிலளிநீக்கு//அவர்களின் குழந்தைகள் பற்றிய விபரங்கள் ஒன்றும் இல்லையே.இல்லாததினால் தான் இந்த முடிவோ?//
நாஞ்சில் மனோவின் பின்னூட் டத்தில் பதில் சொல்லியிருக்கிறேன். பாருங்கள்.
நன்றி.
புலவர் சா இராமாநுசம் கூறியது...
பதிலளிநீக்கு//கருத்துரை எழுதியபோது
ஓட்டுப் பட்டை காணவில்லை
கனவே மீண்டும் வந்து ஓட்டளித்தேன்//
நன்றி புலவர் அவர்களே.
விக்கியுலகம் கூறியது...
பதிலளிநீக்கு//அண்ணே எல்லாம் கெடைச்சிட்டா பயணம் நிறைவை நோக்கி போகும்ங்கர விஷயம் உறைக்குது...இப்படியும் இருக்காங்க என்பது ஆச்சர்யமே!...பகிர்வுக்கு நன்றி!//
நன்றி விக்கி.
ரெவெரி கூறியது...
பதிலளிநீக்கு//தற்கொலை செய்துகொள்வது தவறான முடிவு...//
நாம் என்ன செய்ய?
நன்றி ரெவெரி.
M.R கூறியது...
பதிலளிநீக்கு//இவர்கள் செய்தி எமக்கு புதுமை
பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ் மணம் 11//
நன்றி ரமேஷ்.
நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
பதிலளிநீக்கு// ம் ...//
ஓ!
நன்றி.
Vasu கூறியது...
பதிலளிநீக்கு//உண்மையான சம்பவத்தை மிகவும் நன்றாக சித்தரித்து உள்ளீர்கள் .தாமரை நெஞ்சம் படம் இறுதி காட்சி பார்த்த உணர்வு ! எந்த மன நிலையில் அந்த ஆதர்ஷ் தம்பதியர் இந்த முடிவினை தேர்ந்து எடுத்தார்களோ ? வாழ்கையில் தோல்வி அடைந்தவர்களும் , அதீத துன்பம் அனுபவிப்பவிர்களும் மட்டுமே பொதுவாக எடுக்கும் முடிவினை எந்த விதத்திலும் துன்பத்தினை காணாதவர்கள் எடுத்தது ஏன் என புரியவில்லை ! தன்னுடைய உணர்வுகளுக்கு மட்டுமே முக்யத்துவம் கொடுத்து தன்னை சார்ந்தவர்களின் உணர்வுகளை என் மதிக்க தவறினார்களோ//
அவர்கள் ஒரு தனி உலகில் வாழ்ந்திருக்கிறார்கள்.
நன்றி வாசு.
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
பதிலளிநீக்கு// முடிவு ரொம்ப கொடுமை//
நமக்கு.அவர்களுக்கில்லை.
நன்றி ராஜா.
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
பதிலளிநீக்கு//இன்று என் ப்ளாக் இல் ...
தெரியுமா உங்களுக்கு ?//
பார்க்கிறேன்.
K.s.s.Rajh கூறியது...
பதிலளிநீக்கு// மனதை வருடிவிட்டது//
நன்றி ராஜ்.
manoharan கூறியது...
பதிலளிநீக்கு//காலைலேயே பதிவை வாசித்துவிட்டேன் .மனபாரத்தினால் தாமதமான கருத்துரை இடுகிறேன் .செய்திதாளில் வந்த ஒரு செய்தியை வைத்து அருமையான சிறுகதை !!!!!!!!!சிறுகதை முடிவில் இது ஒரு உண்மை சம்பவம் என அறிந்ததும் அதிர்ந்தேன் .எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத வாழ்க்கை--------எல்லாம் கிடைத்தும் எதுவும் கிடைக்காதது போன்ற மாயை.இன்றைய அவசர உலகில் அனைவருக்கும் கூட்டுகுடும்ப கவுன்சிலிங் தேவைப்படுகிறது .கிடைக்குமா ?????????(தமிழ் வெப்துனியா-இந்த செய்தியை--சம்பவத்தை --- வெளியிட்டு இருக்கிறார்கள் //
மனதைப் பாதித்த செய்திதான்.
நன்றி மனோகரன்.
வித்தியாசமான கதை.நன்று அய்யா!
பதிலளிநீக்குshanmugavel கூறியது...
பதிலளிநீக்கு// வித்தியாசமான கதை.நன்று அய்யா!//
நன்றி சண்முகவேல்.
எங்கள் உடலை மின் மயானத்தில் தகனம் செய்ய வேண்டும்.அதற்காக ரூ.10000/- உறையில் போட்டு வைத்திருக்கிறோம்.செல்கிறோம்”
பதிலளிநீக்குதூக்க மாத்திரைகளை ஒவ்வொன்றாக,ஒருவர் வாயில் மற்றவர் போடுகின்றனர்……//////
துயரமான முடிவு!
//சோ அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்//
பதிலளிநீக்குஇங்கு ஏன்?//
ஆமாம் சார்... திருப்திகரமா வாழ்ந்து சந்தோசமா சாவுறாங்க அவங்களை வாழ்த்துவோம்....
அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.. இது தான் உண்மை... மனதில் சரி என படுகிறது அதனால் தான் ஓப்பனாக சொன்னேன்ன்ன்....
பதிலளிநீக்குமயானச் செலவுக்கான வைப்பு தான் இடிக்கிறது! i guess, இப்படியும் வாழலாம்!
பதிலளிநீக்குசேக்காளியின் கேள்வி ... கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.
ஏன் இந்த அவலம்?
பதிலளிநீக்குhttp://rathnavel-natarajan.blogspot.com/
Powder Star - Dr. ஐடியாமணி சொன்னது…
பதிலளிநீக்குஎங்கள் உடலை மின் மயானத்தில் தகனம் செய்ய வேண்டும்.அதற்காக ரூ.10000/- உறையில் போட்டு வைத்திருக்கிறோம்.செல்கிறோம்”
தூக்க மாத்திரைகளை ஒவ்வொன்றாக,ஒருவர் வாயில் மற்றவர் போடுகின்றனர்……//////
// துயரமான முடிவு!//
ஆம்.
நன்றி.
FOOD கூறியது...
பதிலளிநீக்கு//திகட்ட திகட்ட அனுபவித்தால், தித்திப்பும் திகட்டிடுமோ!//
இனி எதுவுமில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் போலிருக்கிறது.
நன்றி.
மாய உலகம் கூறியது...
பதிலளிநீக்கு//சோ அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்//
இங்கு ஏன்?//
//ஆமாம் சார்... திருப்திகரமா வாழ்ந்து சந்தோசமா சாவுறாங்க அவங்களை வாழ்த்துவோம்....//
ஓ!
மாய உலகம் கூறியது...
பதிலளிநீக்கு//அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.. இது தான் உண்மை... மனதில் சரி என படுகிறது அதனால் தான் ஓப்பனாக சொன்னேன்ன்ன்....//
சரியாகத்தான் சொன்னீர்கள்.
அவர்கள் ’குறையொன்றும் இல்லாதவர்கள்’!
நன்றி.
அப்பாதுரை கூறியது...
பதிலளிநீக்கு// மயானச் செலவுக்கான வைப்பு தான் இடிக்கிறது! i guess, இப்படியும் வாழலாம்!//
இறந்த பின்னும் யாருக்கும் செலவு வைக்க விரும்பவில்லை.
//சேக்காளியின் கேள்வி ... கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.//
அவர்கள் குழந்தை வேண்டாமெனத்திட்டமிட்டு வாழ்ந்தார்கள் என்றே நான் நினைக்கிறேன்.
நன்றி அப்பாதுரை.
பதிலளிநீக்குRathnavel கூறியது...
பதிலளிநீக்கு//ஏன் இந்த அவலம்?//
வாழ்க்கை பற்றிய அவர்கள் பார்வை வேறாகப் போய்விட்டது.
நன்றி ஐயா.
நானும் அந்த செய்தியைப் படித்தேன். மனதில் சோகம் அழுத்தியது. சோகத்திற்கான காரணம் அவர்களின் முடிவால் அல்ல, மெத்தப் படித்தவர்களாலும் வாழ்க்கையை புரிந்துக்கொள்ளவில்லையே என்பதால்.
பதிலளிநீக்குகதை சொல்லப்பட்டவிதம் நன்றாக இருந்தது. ஆனால் தலைப்பு "வாழாமல் முடித்தவர்கள்" என்று இருந்திருக்கலாம்
தற்கொலை தவறான பாதை...
பதிலளிநீக்குவாழ்க்கையில் அனைத்தையும் அனுபவித்து விட்டு, இனி வாழத் தேவையில்லை, தாம் இன்னும் இருந்தால் பிறருக்குச் சுமையாகி விடுவோம் எனும் நோக்கில் முடிவெடுத்திருக்கிறார்கள். வேதனையான வாழ்க்கை ஐயா.
பதிலளிநீக்குமகிழ்ச்சியை அனுபவித்த அனைவருக்கும் போதுமென்ற மனம் வந்து விடுவதில்லை. வித்தியாசமான செய்தி. அழகான நடையில் சொல்லியிருக்கிறீர்கள். நன்று!
பதிலளிநீக்குநிஜவாழ்விலும் சரி,கதைகளிலும் சரி,தற்கொலையைத் தவிர்த்தல் அவசியம் சார்!10 வருட நிறைவாக வாழ்ந்துவிட்டனரா????மகிழ்ச்சியே!!
பதிலளிநீக்குகுழந்தை இனி இல்லை என்பது திட்டவட்டமாக தெரிந்துவிட்டதுபோல??இருந்தாலும் 10 வருட வாழ்க்கை நிறைவடையுமா??
பதிலளிநீக்கு