தொடரும் தோழர்கள்

வெள்ளி, அக்டோபர் 07, 2011

இதுதான் காதல்!இதுவே காதல்!-----

”காதல் என்பது எது வரை,கல்யாண காலம் வரும் வரை “என்று சொல்கிறது ஒரு திரைப்படப் பாடல்.

காதலித்து மணம் புரிந்தவர்களின் காதல்,கல்யாணத்துடன் முடிந்து விடுமா?

ஒருவேளை பாடல் , யாரையாவது காதலித்துத் திரிவதெல்லாம் ,கல்யாணம் வரைதான்,யாரோ ஒருவரை மணந்தபின்,காதலாவது,கத்தரிக்காயாவது என்று சொல்கிறதா?.

திருமண உறவில் காதல் இல்லாது போய்விடுமா?

காதல் என்பது வெறும் உடல் சார்ந்த விஷயம் இல்லையே!

காதல் என்பது,ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ளுதல்,ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுத்தல்.

இதோ அப்படிப் பட்ட ஒரு காதல்.....

நேற்று இரவு.
மணி ஒன்பதைத் தொட்டுக் கொண்டிருந்தது.
வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.
கதவைத் திறந்து பார்த்தேன்.
எங்கள் குடியிருப்பின் இரவுக் காவல்காரர் நின்று கொண்டிருந்தார்,நெஞ்சை லேசாக அழுத்திப் பிடித்தபடி.முகத்தில் வேதனை.

பதறிப் போய்க் கேட்டேன்”.என்ன பெருமாள்,உடம்பு சரியில்லையா?”
அவர் இல்லை என்று தலையசைத்தவாறே கேட்டார்குடிக்கக் கொஞ்சம் சுடு தண்ணி குடுங்க சார்
ஃபிளாஸ்க்கில் வெந்நீர் இருந்தது.டம்ளரில் ஊற்றிக் குடிக்கும் சூடாகக் கொடுத்தேன்.
படியில் அமர்ந்து வெந்நீரை அருந்தினார்.தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டார்.புறப்படத் தயாரானார்.

நான் கேட்டேன்என்ன பெருமாள்,என்ன ஆச்சு?”

சிறிது தயங்கினார்.பின் சொன்னார்என் சம்சாரம் போன வருஷம் காலமாயிட்டா. இன்னிக்குக் காலையிலேதான் வருஷத் திதி கொடுத்தேன்.இப்போ உட்காந்துக் கிட்டு இருக்கும்போது,அவ நெனைப்பு ரொம்ப அதிகமா வந்து.உடம்பெல்லாம் பட படன்னு வந்துடுச்சு.எல்லாமே ஒரே இருட்டான மாதிரி இருந்திச்சு.அதுதான் சார்

அவரது வயது 65 என்பது எனக்கு முன்பே தெரியும்.

நான் கேட்டேன்உங்களுக்கு எந்த வயசிலே கல்யாணமாச்சு?”

“22 வயசிலியே முடிச்சு வைச்சிட்டாங்க சார்

நான் யோசித்தேன்.42 ஆண்டுகள் மண வாழ்க்கைக்குப் பின் பிரிந்து சென்ற மனைவியை நினத்து,அவளது பிரிவின் தாக்கத்தால்,அவர் உள்ள அளவில்,அதன் காரணமாக உடல் அளவில் பாதிக்கப் படுகிறார் என்றால்,அந்த அன்பு, அவர்களிடை இருந்த நெருக்கம்,அவர்களின் பரஸ்பரப் புரிதல் எத்தனை உயர்வானது?

அது வெறும் அன்பா?மண உறவா?நெருக்கமா?

அதற்கும் மேல்........

இதுதான் காதல்.உண்மைக் காதல்.

அவருக்குத் தொப்பியைத் தூக்கி வணக்கம் சொல்கிறேன்.

இந்தக் காதலுக்கு அவரின் உணர்வுகளே தாஜ் மஹால்!

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

மடந்தையொடு எம்மிடை நட்பு.”.....குறள்

(இது ஒரு மீள் பதிவு,,சில சேர்க்கைகளுடன்)

41 கருத்துகள்:

  1. உங்கள் தலைப்பு தான் எனது பின்னூட்டம்!

    பதிலளிநீக்கு
  2. தலைவரே, அந்த பெருமாள் ஐயாவுக்கு எனது சிரம்தாழ்ந்த வணக்கத்தைச் சொல்லவும்.

    பதிலளிநீக்கு
  3. உண்மையான காதலை பற்றி, ஒரு லைவ் ரிப்போர்ட். நன்றி தல...!!!

    பதிலளிநீக்கு
  4. ரசிச்சி படிச்சேன், மனதில் வலியும், ஆச்சர்யமாகவும் இருந்தது...!!!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஐயா! உண்மைக்காதல் என்றால் என்னவென்று தெரியாமல்தான் நானும் இம்புட்டு நாளா குழம்பிக்கிட்டு இருந்தேன்!

    இன்று என் சந்தேகம் தீர்ந்தது!

    பதிலளிநீக்கு
  6. அண்ணே நீங்க சொல்றது உண்மைதான்...அழகா சொல்லி இருக்கீங்க!

    பதிலளிநீக்கு
  7. ஆம், இதுவே காதல்...உண்மைக் காதல்.

    பதிலளிநீக்கு
  8. அன்பின் ஆழம்.அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  9. இது மீள் பதிவு என்றாலும் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிற பதிவு என்பேன் நான்.

    பதிலளிநீக்கு
  10. //அது வெறும் அன்பா?மண உறவா?நெருக்கமா?//
    துணையிழந்த தனிமை?

    பதிலளிநீக்கு
  11. சூப்பர் அண்ணே


    அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  12. இதுதான் காதல்..ஆம்..இதுவே காதல்...

    பதிலளிநீக்கு
  13. அவர் மனைவி மீதுவைத்த அன்புக்கு.தலைவணக்குகின்றேன் ஜயா

    பதிலளிநீக்கு
  14. அருமையான பகிர்வு.... உண்மையான காதல் இது போல் அன்யோன்யமானது....

    பதிலளிநீக்கு
  15. வேற என்ன காரணம்

    நான் எடுக்கும் முடிவே சரியானது
    என்பதில்

    இவ்வளவுதானா உன்னிடம் ,இன்னும் எதிர் பார்த்தேன் அதிகமாக என்ற எண்ணம்

    இக்கரைக்கு அக்கறை பச்சை

    சலிப்பு எதிலும்

    இவைகள் தான் காரணம் ,இன்னும் இருக்கு

    நன்றி ஐயா பகிர்வுக்கு

    பதிலளிநீக்கு
  16. உண்மையான காதலின் நிதர்சனமாக பெருமாள். சம்பவத்தை அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  17. அவ்வளவு அழகான காதலுக்கு, இனிமேலாவது தாஜ்மஹாலை உதாரணத்துக்கு அழைப்பதை விட்டு விடுவோமே..

    பதிலளிநீக்கு
  18. உண்மைக் காதலைச் சொல்ல பெரிய பெரிய
    காப்பியங்களா தேவை .நடமுறை வாழ்வில் காணும் இதுபோன்ற
    சிறு நிகழ்வுகள் போதுமே
    அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள்
    த.ம 16

    பதிலளிநீக்கு
  19. Ramani கூறியது...

    // உண்மைக் காதலைச் சொல்ல பெரிய பெரிய
    காப்பியங்களா தேவை .நடமுறை வாழ்வில் காணும் இதுபோன்ற
    சிறு நிகழ்வுகள் போதுமே
    அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள்
    த.ம 16//
    நன்றி ரமணி.தாமதத்துக்கு மன்னிக்க!

    பதிலளிநீக்கு
  20. பெருமாள் அவர்களின் உள்ளத்தில் நீங்காது நிலைத்திருக்கும் உண்மைக் காதலைச் சொல்லி, காதல் என்பதற்கான பரிபூரண விளக்கத்தினை அனுபவ உதாரணக் குறிப்பினூடாகத் தந்து நிற்கிறது பதிவு.

    பதிலளிநீக்கு