தொடரும் தோழர்கள்

திங்கள், ஜூன் 06, 2011

காதல் செய்வதை விட்டு விடுங்கள்!

அழகென்ற சொல்லுக்குப் பொருள் தேடிப் பார்த்தேன்
அருணா என்றே விடை வந்தது!
வடிவென்ற வார்த்தைக்குப் பொருள் தேடிப் பார்த்தேன்
வந்தனா என்பதே பதிலாயிற்று!
பண்பென்ற பதத்துக்குப் பொருள் தேடிப் பார்த்தேன்
பத்மா என்றே விடை வந்தது!
கனிவென்ற வார்த்தைக்குப் பொருள் தேடிப் பார்த்தேன்
கல்பனா என்றே பதில் வந்தது!
அறிவென்ற சொல்லுக்குப் பொருள் தேடிப் பார்த்தேன்
அகிலா என்பதே விடையாயிற்று!-என்
உயிரென்ற சொல்லுக்குப் பொருள் தேடும் போதோ
உமா என்பதே நற் பதிலாயிற்று!
ஏமாற்று என்பதற்கு பொருள் தேடிப் பார்த்தேன்
எல்லாப் பெயருமே பதிலாயிற்று!
தலைவிதி என்பதற்கு பொருள் தேடும்போதோ
தங்கமணி பெயரே பதிலாய் நின்றது !

( காதலில் நொந்த ஒரு இளைஞனின் புலம்பல்)

40 கருத்துகள்:

  1. எப்படி தல இப்படியெல்லாம்...

    காலையில் ஒரு அசத்தல்...

    பதிலளிநீக்கு
  2. அண்ணனை நல்லவர்னு நினைச்சுத்தான் பழகிட்டு இருக்கோம். அண்ணன் கிட்டே பல ஃபிளாஸ்பேக் இருக்கும் போல. ஹி ஹி

    பதிலளிநீக்கு
  3. உங்க வாழ்க்கையிலே இத்தனை பெண்கள் விளையாடி இருக்கிறார்களா .உண்மையிலேயே நீங்க பெரிய்ய ஆளுதான் .!!!

    பதிலளிநீக்கு
  4. நான் உங்க கிட்ட இதுபோல பதிவுகள் எட்திர் பார்க்கவே இல்லை.. அசத்தல்..

    பதிலளிநீக்கு
  5. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

    // எப்படி தல இப்படியெல்லாம்...

    காலையில் ஒரு அசத்தல்...//
    உங்களையெல்லாம் பார்த்துக் கற்றுக் கொண்டதுதான்!
    நன்றி சௌந்தர்!

    பதிலளிநீக்கு
  6. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    //முதல் மழை எனை நனைத்ததே//
    நல்வரவு!

    பதிலளிநீக்கு
  7. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    //அண்ணனை நல்லவர்னு நினைச்சுத்தான் பழகிட்டு இருக்கோம். அண்ணன் கிட்டே பல ஃபிளாஸ்பேக் இருக்கும் போல. ஹி ஹி//
    :)நல்லவருக்கு இலக்கணம் என்ன? எழுதுவதெல்லாம் நம் சொந்த அனுபவம் என்று சொல்ல முடியுமா?
    நன்றி சிபி!

    பதிலளிநீக்கு
  8. Balaganesan கூறியது...

    // உங்க வாழ்க்கையிலே இத்தனை பெண்கள் விளையாடி இருக்கிறார்களா .உண்மையிலேயே நீங்க பெரிய்ய ஆளுதான் .!!!//
    ஒரு முடிவுக்கு வந்துட்டீங்க!நான் ஏதாவது சொன்னாக் கேட்கவா போறீங்க?
    நன்றி பால கணேசன்!

    பதிலளிநீக்கு
  9. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //நான் உங்க கிட்ட இதுபோல பதிவுகள் எட்திர் பார்க்கவே இல்லை.. அசத்தல்..//

    காலத்தின் கட்டாயம்!
    நன்றி கருன்!

    பதிலளிநீக்கு
  10. காதலிக்க நேரமில்லை சார்!

    பதிலளிநீக்கு
  11. பதிவை ரசித்துப்படித்தேன். கற்பனை என்றாலும் ஒரு அனுபவஸ்தர் போல் எழுதியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  12. ஐயா நீங்க மட்டும் நல்லா அனுபவிச்சிட்டு எங்களை காதல் செய்வதை விட்டு விடுங்கள் என்று சொல்றது நியாயமா ? சும்மா கஷ்டங்களை மட்டும் கவிதையாக்கி எங்களை ஏமாத்த பார்ப்பதும் நியாயமா ?ஹி ஹி ஒரு சுய சரிதை எழுதலாமே!

    பதிலளிநீக்கு
  13. ///கனிவென்ற வார்த்தைக்குப் பொருள் தேடிப் பார்த்தேன்
    கல்பனா என்றே பதில் வந்தது!///

    நல்லகாலம் கனிமொழி வரவில்லை ஹஹாஹா

    பதிலளிநீக்கு
  14. ///ஏமாற்று என்பதற்கு பொருள் தேடிப் பார்த்தேன்
    எல்லாப் பெயருமே பதிலாயிற்று! // ம்ம் சகஜம் தானே ஐயா ...

    பதிலளிநீக்கு
  15. அடாடா... இது தான் கவிதை... காதல் கவிதை இப்படித்தான் எழுதணும்.... :)))))

    பதிலளிநீக்கு
  16. அய்யாவுக்கு நிறைய அனுபவம்.

    கவிதை நன்றாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  17. ! சிவகுமார் ! சொன்னது…

    // காதலிக்க நேரமில்லை சார்!//
    அதெல்லாம் சும்மா!
    நன்றி சிவகுமார்!

    பதிலளிநீக்கு
  18. வே.நடனசபாபதி கூறியது...

    //பதிவை ரசித்துப்படித்தேன். கற்பனை என்றாலும் ஒரு அனுபவஸ்தர் போல் எழுதியுள்ளீர்கள்.//
    எத்தனை பார்க்கிறோம்,படிக்கிறோம்!
    நன்றி சபாபதி!
    (சில நாட்களாக ஊரில் இல்லையா?)

    பதிலளிநீக்கு
  19. கந்தசாமி. கூறியது...

    ///கனிவென்ற வார்த்தைக்குப் பொருள் தேடிப் பார்த்தேன்
    கல்பனா என்றே பதில் வந்தது!///

    // நல்லகாலம் கனிமொழி வரவில்லை ஹஹாஹா//
    மூச்!

    பதிலளிநீக்கு
  20. கந்தசாமி. கூறியது...

    ///ஏமாற்று என்பதற்கு பொருள் தேடிப் பார்த்தேன்
    எல்லாப் பெயருமே பதிலாயிற்று!// //ம்ம் சகஜம் தானே ஐயா ...//
    ஆமாம்,ஆமாம்!
    நன்றி கந்தசாமி!

    பதிலளிநீக்கு
  21. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //அடாடா... இது தான் கவிதை... காதல் கவிதை இப்படித்தான் எழுதணும்.... :)))))//
    சொல்லிட்டீங்க இல்லே!தூள் கிளப்பிடுவோம்!
    நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
  22. முரளி நாராயண் சொன்னது…

    //அய்யாவுக்கு நிறைய அனுபவம்.

    கவிதை நன்றாக இருக்கிறது//
    சொந்த அனுபவம் இருந்தால்தான் எழுத முடியுமா?:))
    நன்றி முரளி நாராயண்!

    பதிலளிநீக்கு
  23. கவிதை அருமை. காதலுடன் பிறப்பது கவிதை.

    பதிலளிநீக்கு
  24. FOOD சொன்னது…

    //கவிதை அருமை. காதலுடன் பிறப்பது கவிதை.//
    கவிதைக்குக் கிரியா ஊக்கி காதல்!
    நன்றி சங்கரலிங்கம்!

    பதிலளிநீக்கு
  25. பிளாகர் ரியாஸ் அஹமது கூறியது...

    // ஐயா நீங்க மட்டும் நல்லா அனுபவிச்சிட்டு எங்களை காதல் செய்வதை விட்டு விடுங்கள் என்று சொல்றது நியாயமா ? சும்மா கஷ்டங்களை மட்டும் கவிதையாக்கி எங்களை ஏமாத்த பார்ப்பதும் நியாயமா ?ஹி ஹி ஒரு சுய சரிதை எழுதலாமே!//
    ஆகா!நல்ல ஆலோசனையா இருக்கே!எழுதலாம்தான்.ஆனால் யார் படிப்பாங்க?
    நன்றி ரியாஸ்!

    பதிலளிநீக்கு
  26. கலக்குறீங்க அய்யா

    பதிலளிநீக்கு
  27. காதல் அனுபவங்கள் பதிவுகள் வந்தால் சுவையாக இருக்கும்..அந்தக்கால டீன் ஏக் அனுபவங்களை சொல்லுங்க அய்யா

    பதிலளிநீக்கு
  28. ஏமாற்று என்பதற்கு பொருள் தேடிப் பார்த்தேன்
    எல்லாப் பெயருமே பதிலாயிற்று!
    தலைவிதி என்பதற்கு பொருள் தேடும்போதோ
    தங்கமணி பெயரே பதிலாய் நின்றது !//

    ஐயா...பெண்களின் பெயர்களை வைத்து, அவற்றுக்கான நகைச்சுவை அர்த்தங்களோடு ஒரு சந்த கவியினைத் தந்துள்ளீர்கள்..

    ஒவ்வோர் பெயருக்கான காரணத்தைப் படிக்கையிலும் சிரிப்புத் தான் வந்தது.
    ஹி....ஹி....

    பதிலளிநீக்கு
  29. தலைவிதி என்பதற்கு பொருள் தேடும்போதோ
    தங்கமணி பெயரே பதிலாய் நின்றது !//


    இதனை எப்படி மாற்றுவது..
    ஹி...ஹி...

    பதிலளிநீக்கு
  30. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    //கலக்குறீங்க அய்யா//
    நன்றி சதீஷ்!

    பதிலளிநீக்கு
  31. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    //காதல் அனுபவங்கள் பதிவுகள் வந்தால் சுவையாக இருக்கும்..அந்தக்கால டீன் ஏக் அனுபவங்களை சொல்லுங்க அய்யா//
    அனுபவங்கள் இருப்பதாக நீங்களே தீர்மானம் செய்து விட்டு எழுதச் சொல்கிறீர்கள்!என் செய்வேன்!

    பதிலளிநீக்கு
  32. அப்பாதுரை கூறியது...

    // excellent!//
    நன்றி அப்பாதுரை!

    பதிலளிநீக்கு
  33. நிரூபன் கூறியது...

    //ஐயா...பெண்களின் பெயர்களை வைத்து, அவற்றுக்கான நகைச்சுவை அர்த்தங்களோடு ஒரு சந்த கவியினைத் தந்துள்ளீர்கள்..

    ஒவ்வோர் பெயருக்கான காரணத்தைப் படிக்கையிலும் சிரிப்புத் தான் வந்தது.
    ஹி....ஹி....//

    ரசனைக்கு நன்றி நிரூபன்!

    பதிலளிநீக்கு
  34. நிரூபன் கூறியது...

    தலைவிதி என்பதற்கு பொருள் தேடும்போதோ
    தங்கமணி பெயரே பதிலாய் நின்றது !//


    //இதனை எப்படி மாற்றுவது..
    ஹி...ஹி...//

    எழுதியவன் எவனோ, அவனைத் தவிர வேறு யார் மாற்ற முடியும்?!

    பதிலளிநீக்கு
  35. நல்லக் கவிதை அய்யா
    பெண்களின் பெயர் கொண்டு
    அழகாய் புனையப்பட்ட கவிமாலை
    நீங்கள்
    இன்னும்
    இளமையை
    இழக்காமல்
    இருப்பதற்கு
    இதுவே சான்று

    பதிலளிநீக்கு
  36. A.R.ராஜகோபாலன் கூறியது...

    // நல்லக் கவிதை அய்யா
    பெண்களின் பெயர் கொண்டு
    அழகாய் புனையப்பட்ட கவிமாலை
    நீங்கள்
    இன்னும்
    இளமையை
    இழக்காமல்
    இருப்பதற்கு
    இதுவே சான்று//
    வயது உடலுக்கே, மனசுக்கல்ல!
    நன்றி ராஜகோபாலன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  37. சரியான புலம்பல் ..காதலில் தோற்ற அனைவரும் இப்புலம்பலை வரவேற்பார்கள் ...ஆமாம் தங்கமணி யார் ? வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  38. Vasu கூறியது...

    //சரியான புலம்பல் ..காதலில் தோற்ற அனைவரும் இப்புலம்பலை வரவேற்பார்கள் ...ஆமாம் தங்கமணி யார் ?//
    பதிவுலக மொழியில் ’தங்கமணி ’ என்பது மனைவியையும்,’ரங்கமணி’ என்பது கணவனையும் குறிக்கும்!
    நன்றி வாசு!

    பதிலளிநீக்கு