தொடரும் தோழர்கள்

வெள்ளி, அக்டோபர் 04, 2013

உதிரிப் பூக்கள்.!



1966-67 என்று நினைவு.
பட்டமேற்படிப்பு முடித்துவிட்டு தற்காலிகமாக திருச்சியில் பணி புரிந்து வந்த நேரம்.
வாரநாட்களில் திருச்சி.சனி,ஞாயிறுகளில் என் அண்ணா பணிபுரிந்து வந்த,குடும்பத்துடன் வசித்த, கரூர்.
அந்தச் சமயத்தில்தான் ஒரு படம் வெளியானது.
ஒரு நடிகை அதில் அறிமுகம் செய்யப்பட்டார்.
சுவரொட்டிகளில் அவரது படத்தைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்;
எனக்குத் தெரிந்த முகமாக இருந்தது.
உறுதி செய்து கொள்வதற்காகப் படத்துக்குப் போனேன்.
அதே அழகிய பெண்தான்.
என் விவேகானந்தா கல்லூரி விடுதி வாழ்க்கை நாட்களில் பல நாட்கள்,மயிலை கபாலி கோவிலில் என்னைக் கவர்ந்த அதே பெண்தான்.
சமீபத்தில் அப்படத்தைத் தொலைக்காட்சியில் பார்த்ததும் கபாலி கோவில் நாட்கள் நினைவுக்கு வந்தன!
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
.....................................................
இன்று ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன்.
கேரளாவில் அவரது ஒரு  அனுபவத்தைப் பற்றிச் சொன்னார்
ஒரு முறை ஒரு பலாப்பழம் வாங்கி அதை பேருந்து நிறுத்தகம் வரை எடுத்து வர ஒருவனைக் கேட்டார்.அவன் 4 ரூபாய் கூலி கேட்டான்
நண்பர் சம்மதிக்க அவன் எடுத்து வந்தவன்,பாதி தூரம் வந்ததும்,மிகக் கனமாக இருப்பதால் தூக்க முடியவில்லை எனவும்.இன்னும் இரண்ரு ரூபாய் வேண்டும் எனவும் கேட்க, அவர் சம்மதித்தார்.
சிறிது தூரம் சென்றது,மிகவும் கஷ்டமாக இருப்பதால் கடைசி வரை எடுத்து வர இன்னும் 4 ரூபாய் வேண்டும் என கேட்டானாம்.
நண்பர் சொன்னார்”சக்கை விலையே பத்து ரூபாய்தான்;அதனால் நீயே அதை வச்சுக்கோ!”
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
சக்கை என்று அவர் சொன்னதும் நான் குமரி மாவட்டத்தில் சில மாதங்கள் பணி புரிந்த ஒரு ஊர் நினைவுக்கு வந்தது.
முளகுமூடு என்பது ஊரின் பெயர்.
அந்த ஊர் பலாப்பழம் மிகப் பிரசித்தம்.
அங்கு நான் இருந்ததே ஒன்பது மாதங்கள்தான்.
மிக முயற்சி எடுத்து வேறு ஊருக்கு மாறுதல் பெற்றுச் சென்று விட்டேன்.
நகரவாழ்க்கைக்குப் பழகிப்போன ஒருவனுக்குக் கிராமம் எப்படிப் பிடிக்கும்?
ஆனால் யோசித்துப் பார்க்கையில் அந்தச் சூழலும் அமைதியும் வேறு எங்கு கிடைக்கும்?!
.............................................................
லிமெரிக் எழுதி ரொம்ப நாளாச்சு! இதோ ஒரு லிமெரிக்!
.......................................................
அழகான பொண்ணு அந்த ராணி
அவன் முன்னால் நின்னா நாணி
அவ கையில ஒரு தூக்கு வாளி
அதில் நெறைய பருப்புப் போளி
சொன்னா அவ நீதான் செய்யணும் போணி!
.............................

33 கருத்துகள்:

  1. ஐயா லிமெரிக் கவிதை நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதை
    போணி பண்ணினீங்களா ?

    பதிலளிநீக்கு
  3. பழைய நினைவுகள் என்றுமே இனிமையானவை .

    பதிலளிநீக்கு
  4. உங்களைக் கவர்ந்த அந்த பெண் யாரோ? ஒரு சிறிய ‘துப்பு’ கொடுங்களேன்.

    சக்கையைப்பற்றிய இன்னொரு கதையையும் படித்திருக்கிறேன். அதைச் சொன்னால் ‘அட்டிமரி’ என்பதைப்பற்றியும் சொல்ல வேண்டியிருக்கும்.

    லிமெரிக் கவிதை அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மயிலையில் படித்தவர்;தாயும் நடிகை;மகளும் நடிகை.
      சக்கைக் கதையைச் சொல்லுங்களேன்!
      நன்றி

      நீக்கு
  5. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததா ஐயா...
    அது சரி...
    லிமெரிக் கவிதை அழகு...

    பதிலளிநீக்கு
  6. பலாப்பழ சுவையால் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததா ஐயா...
    அது சரி...
    லிமெரிக் கவிதை அருமை...

    பதிலளிநீக்கு
  7. லிமெரிக் நன்று.
    யாரந்தப் புதுமுகம்? ஜெயலலிதா? விஜயா?

    பதிலளிநீக்கு
  8. லிமெரிக் நன்றாக இருக்கிறது.

    நடிகை தேவிகா?

    பதிலளிநீக்கு
  9. #நண்பர் சொன்னார்”சக்கை விலையே பத்து ரூபாய்தான்;அதனால் நீயே அதை வச்சுக்கோ!”#
    அடி சக்கை நல்ல பதில்தான் !
    தேவிகா ,கனகான்னு நான் சொன்னா ...சரிதான் என்பதே உங்கள் பதிலாய் இருக்கும் ,சரியா ?

    பதிலளிநீக்கு
  10. நகரவாழ்க்கைக்குப் பழகிப்போன ஒருவனுக்குக் கிராமம் எப்படிப் பிடிக்கும்?
    ஆனால் யோசித்துப் பார்க்கையில் அந்தச் சூழலும் அமைதியும் வேறு எங்கு கிடைக்கும்?!
    //

    நானும் 19882-83ல் சென்னையிலிருந்து மாற்றலாகி தஞ்சை சென்றபோது அந்த மனநிலையில்தான் இருந்தேன். முதல் ஆறுமாத காலம் டிவியும் இல்லாமல் தியேட்டர்களுக்கு செல்லவும் மனமில்லாமல் ( பெரும்பாலானவை கொட்டாய் ரகம்!) வெறுத்துப்போயிருந்தேன். ஆனால் சில மாதங்களில் அதுவே பிடித்துப்போக அங்கிருந்து மாற்றலானபோது ஏமாற்றமாக இருந்தது. அதுதான் முதலும் கடைசியுமானா கிராம வாழ்க்கை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பிற்காலத்தில் ஹரியானாவில் கூடக் கிராமம் கிராமமய்ச் சுற்றியிருக்கிறேன்!
      நன்றி ஜோசப் சார்

      நீக்கு
  11. நகரவாழ்க்கைக்குப் பழகிப்போன ஒருவனுக்குக் கிராமம் எப்படிப் பிடிக்கும்? ஆமாம் முடியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது கிராமத்துக்குப் போய் விடலாமா என்று தோன்றுகிறது கவிஞரே!
      நன்றி

      நீக்கு
  12. 1977 என்றால் எங்க வாலிபம். சொல்ல முடியும். 67 தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  13. பழைய ஞாபகங்களும் கவிதையும் மிக அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  14. பழைய ஞாபகங்களும் கவிதையும் மிக அருமை ஐயா...

    பதிலளிநீக்கு