தொடரும் தோழர்கள்

திங்கள், அக்டோபர் 07, 2013

என்றும் வாழும் பி,பி.எஸ்!

நண்பர் பார்த்தசாரதியின் பி.பி.எஸ் பற்றிய கட்டுரையை பி பிஎஸ்ஸின் பிறந்தநாளன்று வெளியிட்டிருந்தேன்.அது முழுமையடையவில்லை என்று நண்பர் எண்னியதன் விளைவே இத்தொடர்ச்சி.(டி டியாக இருந்தால் ஒவ்வொரு பாடலுக்கும்  ஒலியை இணைத்திருப்பார்!)
நண்பரின் விருப்பப்படி தொடர்ச்சி கீழே........



பி.பி.எஸ்  தொடர்ச்சி


மணப்பந்தலில் “காத்திருந்து  காத்திருந்து பெருமை இழந்தேன்” என்ற் வரிகள் அதிசயிக்கத்தக்கவை.  “பார்த்துப் பார்த்து நின்றதிலே  பார்வை இழந்தேன்” என்ற பி.பி.எஸ் – சுசீலா பாடிய பாடலில் கவியரசர் காதலின்  இழப்புகளை உயர்வு படுத்தி இருப்பார்.   இந்த டூயட்டை பாடும் காதலர்கள், காதலையே  இழந்தாலும் பாடல் மட்டும் எதையும் இழக்காமல் இன்னும்  மேலோங்கி நிற்கிறது.

மாயமணி என்ற டப்பிங் படத்தில் பி.பி.இஸ் “கலாமங்கையோ”  என்ற பாடலை முகமத் ரஃபியின் குரல் வளத்தை மிஞ்சும் அளவிற்கு பாடியிருப்பார். இசை  லக்ஷ்மிகாந்த் பியாரிலால்.  சங்கதிகள் அப்படியே குழையும்.

போதையில் பாடும்  பாடலிலும் பி.பி.இஸ் கைதேர்ந்தவர்.   உடலுக்கு  உயிர் காவல் (மணப்பந்தல்)   எந்தஊர் என்றவனே (காட்டு ரோஜா) உதாரணங்கள்..    புனர் ஜென்மத்தில் “என்றும் துன்பமில்லை” சோகப்பாடலை சிவாஜிக்காக பாடினார்.  நடிகர்திலகத்தின்  வாய்அசைப்பிற்கு கனகச்சிதமாக பொருந்தியிருக்கும்  இவர்குரல்.

கலைக்கோவிலில் எல்.ஆர்.ஈஸ்வரியுடன் பாடியுள்ள “முள்ளில் ரோஜா, கள்ளூறும் ரோஜா” என்ற பாடலில் ஸ்வரம் பாடும்போது பி.பி.எஸ் போடும் சங்கதிகள் போதையூட்டக்கூடியவை.
ஜி. ராமனாதன் இசையில் பி.பி.எஸ். பாடிய  “இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே”. “காற்று வெளியிடை கண்ணம்மா” காதில் நுழைந்து நெஞ்சை குளிரவைக்கும் வல்லமை வாய்ந்தவை.


அடுத்த வீட்டுப்  பெண்ணில்            பி.பி.எஸ்,  ஆதி நாராயணராவ் இசையில் பாடிய  எல்லா பாடல்களும் மிக உயர்ந்தவை.    “கண்ணாலே பேசிப் பேசி கொல்லாதே”(உல்லாசம்)     “ வனிதாமணியே” (சல்லாபம்)  மறக்க முடியாதவை. “மாலையில் மலர் சோலையில்” ( மணம் சுமந்த தென்றல்)  “பார்த்தேன், ரசித்தேன்” இன்பத்தேன்.     பாடலின்  இறுதியில் வரும் வீணையில்  சஹானா நாதமழை.

“நிலவே என்னிடம் நெருங்காதே” பாடலை எந்தப்பாடலாவது  நெருங்கமுடியுமா?

தமிழிசை உள்ளவரை பி.பி.எஸ் குரல் காற்றலைகளில் மிதந்து கொண்டே இருக்கும்.

12 கருத்துகள்:

  1. பி.பி.எஸ், சின் பாடல்களுக்கு என்று ஒரு சிறப்பு இருப்பது மறுக்கமுடியாது.

    பதிலளிநீக்கு
  2. அடடா...! அனைத்து பாடல்களும் ரசித்துக் கொண்டே இருக்கலாம்... அவரின் பாடல் தொகுப்பு (118) கணினியில் உள்ளது... அவரின் குரலே மனதை வருடிக் கொண்டே இருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. உண்மை நிலவே என்னிடம் நெருங்காதே பாட்டிற்கு முன் எந்தப்பாட்டும் நெருங்க முடியாதுதான்.

    பதிலளிநீக்கு
  4. பால் வண்ணம் பருவம் கண்டேன் எனும் எம் ஜி ஆருக்காகப் பாடிய பாடலும் மிக இனிமையானது.
    பொதுவாக இவர் எந்தப் பாடலும் தவிர்க்கக் கூடியவையல்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்..ஆரம்ப கால எஸ்.பி.பியே பிபிஎஸ் ஸ்டைலில்தானே பாடினார்!

      நீக்கு
  5. பி பி எஸ் பாடல்களை என்னையும் நினைத்துப் பார்க்க வைத்த பதிவு. என் மனதில் நிற்கும் அவரின் பாடல்கள் வரிசையாக நினைவில் வந்து போயின.

    பதிலளிநீக்கு
  6. பி.பி.எஸ் அருமையான பாடகர்! அவரது பாடல்கள் பல ரசித்து இருக்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  7. மெல்லிசைப் பாடல்கள் என்றால் அது PBS அவர்களின் பாடல்கள் தான். அந்த ‘பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள். பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்.’ என்ற பாட்டைக் கேட்டால் தாலாட்டுவதுபோல் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் என்ற ஒரு பாடலே போதும். தமிழ்த்திரையின் பொற்காலம் எது என்பதை அதுவே சொல்லிவிடுகிறது. பிறகு காலங்களில் அவள் வசந்தம். இழந்த இனிமையை நாம் எப்போதாவது மீண்டும் பெறமுடியுமா?

    பதிலளிநீக்கு
  9. அருமையான பாடகர்,உள்ளமும் அதே போல்!!!

    பதிலளிநீக்கு
  10. எனக்கும் இஅவரின் பலப்பாடல்கள் பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  11. பி.பி.எஸ் அவர்களின் பாடல்கள் அனைத்துமே சுகமானவை. ”சின்னச் சின்ன கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ” பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு