தொடரும் தோழர்கள்

செவ்வாய், அக்டோபர் 01, 2013

வெவகாரம் வேலுச்சாமியும் செருப்பும்!



”ஏனுங்க?தடத்துல டான்ஸ் ஆடிக்கிட்டே வரீங்க?”

”யாரு? வேலுசாமியா?அட போப்பா.செருப்பு அந்து போச்சு.பக்கத்துல தைக்கறத்துக்கு யாரையும் காணோம்.அதான் செருப்பில்லாம நடந்து வரேன்.கொஞ்சத் தொலை நடக்கறதே கஷ்டமா இருக்கப்பா”

”செருப்பு எங்கண்ணே?”

“பையில போட்டு எடுத்துடுட்டு வரேன்”

“பாருங்கண்ணே அதுக்கு வந்த வாழ்வு!கால்ல கெடக்கறது இப்ப பைக்கு வந்திருச்சு!”

“என்னப்பா கிண்டல் பண்றே?”

”இல்லண்ணே!எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்”

”ஒனக்கு என்னிக்கு சந்தேகம் இல்லாம இருந்தது?”

”நீங்க செருப்பில்லாம நடந்து வரதைப் பாத்ததும்  கேக்கணும்னு தோணிச்சு அண்ணே”

”என்ன?”

”நல்ல ரோட்டில கொஞ்ச நேரம் செருப்பு இல்லாம நடக்க முடியலையே,14 வருசம் காட்டுல எப்படி அண்ணே செருப்பு இல்லாம நடந்திருப்பாரு?”

”என்னப்பா சொல்றே?”

”ராமரைத்தாண்ணே சொல்றேன்.பரதன் வந்து ராமரைத் திரும்ப நாட்டுக்குக் கூப்புடறான். ராமர் மறுத்துடராரு.அப்பாலே பரதன் ராமரோட செருப்பை வாங்கித் தலையில வச்சுக் கிட்டுத் திரும்பறான்,அதை சிம்மாசனத்தில் வச்சு ஆட்சி நடத்த”

“ஆமா”

”பரதன் செருப்பை வாங்கிட்டுப் போனப்புறம் ராமர் செருப்பில்லாமதானே இருந்திருப்பாரு! அண்ணன் செருப்புப் போடாதபோது தம்பி லட்சுமணனும்,புருசன் செருப்பணியாத போது மனைவி சீதையும் நிச்சயமாச் செருப்பு அணிஞ்சிருக்க மாட்டாங்கதானே?மூணு பேரும் பதினாலு வருசம் செருப்புப் போடாமத் தானே இருந்திருப்பாங்கதானே?ரொம்பக் கஷ்டமில்லே?”

“!!!!!!!!!!!!!!!!!”

“அண்ணே ஒரு வேளை பரதன் தன் செருப்பை ராமருக்குக் கொடுத்துட்டுத் திரும்பிப் போயிருப்பானோ?இது பத்தி ராமயணத்தில எங்கயாவது சொல்லியிருக்காங்களாண்ணே?”
“ஐயோ ஐயோ ஐயோ......!!!!!ஆளை விடப்பா!”



22 கருத்துகள்:

  1. உண்மையில் வேலுசாமி வெவகாரம் புடிச்சவர் தான்!

    பதிலளிநீக்கு
  2. அட.... என்னமா யோசிச்சு இருக்காங்க.... :)

    பதிலளிநீக்கு
  3. அடப்பாவிகளா...எப்படில்லாம் யோசிக்கிறீங்க?

    பதிலளிநீக்கு
  4. அதானே...? உங்கள் சிந்தனையே தனி ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. பள்ளிக் குழந்தைகளிடம் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்... பறந்து வாங்க :

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html

    பதிலளிநீக்கு
  6. அட ஆமா அப்பிடியும் ஒரு ஆங்கிள் இருக்குல்ல....அப்ப பரதன் ராமன் செருப்பை தலயில வச்சிகிட்டு போனால், பரதன் செருப்பு இல்லாமதானே போயிருக்கனும்? அப்போ பரதன் கூட இருந்தவங்களும் செருப்பை கழட்டி போட்டுட்டுதானே போயிருப்பாங்கே...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிப்போடுங்க!நாட்டில யாருமே செருப்பு அணிந்திருக்க மாட்டார்கள்!
      (ஒரு கதைக்கான கரு இருக்கிறது இதில்!)
      நன்றி மனோ

      நீக்கு
  7. எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க..

    பதிலளிநீக்கு
  8. நல்ல கேள்வி! எப்படி பதில் சொல்ல முடியும்!

    பதிலளிநீக்கு