தொடரும் தோழர்கள்

செவ்வாய், அக்டோபர் 29, 2013

உறக்கம் வராத இரவுகளில்!



உறக்கம் வரவில்லை நேற்றிரவு!

மல்லாந்து,குப்புற,

இரு புறமும் மாறி மாறி,

ஒருக்களித்துப் புரண்டு,

தலையணை இன்றி,

தலையணை அணைத்து,

தலையணை இரண்டாக,

கால் நீட்டி,கால் மடக்கி,

மரவட்டையாய்ச் சுருண்டு,

எப்படிப் படுத்தும்

உறக்கம் வரவில்லையே சகி!

யோசித்தேன் ஏனென்று ..

விளங்கியது அதற்கான காரணம்.

உன் கனவில் நான் விழித்திருந்து

உன்னோடு மகிழ்ந்திருக்கையில்

எப்படி வரும் உறக்கம் எனக்கு?!!

27 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா
    உன் கனவில் நான் விழித்திருந்து
    உன்னோடு மகிழ்ந்திருக்கையில்
    எப்படி வரும் உறக்கம் எனக்கு?!!

    அருமையான காதல் உணர்வுள்ள கவிதை வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. மகிழ்வாய் இருக்கையில் துாங்களாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவள் கனவில் நடப்பதற்கு நனவில் தூக்கம் இல்லை!
      நன்றி கவியாழி

      நீக்கு
  3. கவிதை அருமை. தலைப்பை ‘உறக்கம் வராத இரவு’ என வைத்திருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
  4. அடடா அற்புதம்
    தூக்கம் வராத இரவுகளும்
    வேண்டியதுதான்
    இதுபோன்ற அருமையாக
    கவிதைகளுக்காகவேணும்
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. அதானே...? சிரமம் தான்...!

    தென்றல் உறங்கிய போதும்
    திங்கள் உறங்கிய போதும்...
    கண்கள் உறங்கிடுமா...?
    காதல் கண்கள் உறங்கிடுமா...?
    காதல் கண்கள் உறங்கிடுமா...

    ஒன்று கலந்திடும் நெஞ்சம்...
    உறவை நாடி கெஞ்சும்...
    கண்கள் உறங்கிடுமா...?
    காதல் கண்கள் உறங்கிடுமா...?
    காதல் கண்கள் உறங்கிடுமா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதற்கும் ஒரு திரைப்பாடல் வைத்திருக்கிறீர்கள் டி டி.அருமை
      நன்றி

      நீக்கு
  6. அவள் தூக்கத்தை கலைத்து விட்டீறாதீங்க,கனவிலாவது மகிழ்ச்சியாய் இருக்கட்டும் !
    த.ம 5

    பதிலளிநீக்கு
  7. அவள் தூக்கத்தை கலைத்து விட்டீறாதீங்க,கனவிலாவது மகிழ்ச்சியாய் இருக்கட்டும் !
    த.ம 5

    பதிலளிநீக்கு
  8. பழைய நினைவுகள் போலருக்கு :) இனிமையான நினைவுகள் பழசாருந்தாலென்ன, அனுபவிங்க.

    பதிலளிநீக்கு
  9. உன் கனவில்
    நான் விழித்திருந்தது
    உன்னோடு மகிழ்ந்திருக்கையில்...
    அடடா..
    என்ன ஒரு கவித்துவம்...
    நின்னைச் சரணடைந்தேன்
    கண்ணம்மா ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணம்மா! நாவே இனிக்கும் ஒரு பெயர் அல்லவா?
      நன்றி மகேந்திரன்

      நீக்கு
  10. ஐயா அசத்தீட்டீங்க போங்க .இதுமாதிரி எல்லாம் எழுத
    எங்களால முடியலியே ! நறுகென்று நாலுவரி .சொல்ல
    வந்த விசயத்தைச் சொன்ன விதம் அருமை ...அருமை !!
    உங்களை வாழ்த்தும் வயத்தில்லை எனக்கு வணங்குகின்றேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலக்கல் கவிதாயினி இப்படிச் சொல்கிறார்!
      அன்பே காரணம்!
      நன்றி அம்பாள் அடியாள்

      நீக்கு
  11. ஒரு இருபது வருடத்திற்கு முன்பு நீங்கள் வலைப் பதிவராக இருந்து அப்போது இந்த பதிவை நீங்க்ள் எழுதி இருந்தால், இப்படி பெயர் வைத்து இருப்பீர்கள்.
    ” சென்னை பித்தனோட ராவுகள்”
    எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு